Tuesday, September 10, 2013

Lips

Courtesy: Sri.Sundar sriram
 
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ,
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ,
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்,
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே.

... --ஆண்டாள்.

கம்பீரமாய் வெளுத்திராநின்ற ஸ்ரீபாஞ்ச ஜந்யாழ்வானே
(குவயாபீட யானையன்) கொம்பை முறித்த கண்ணபிரானுடைய திருஅதரத்தினுடைய ரஸத்தையும் பரிமளத்தையும் ஆசையோடே (உன்னைக்) கேட்கிறேன்.
(அப்பெருமானுடைய) அழகியபவளம் போன்ற சிவந்த திருவதரமானது பச்சைக்கற்பூரம் போல் பரிமளிக்குமோ? (அல்லது)
தாமரைப்பூப்போலே பரிமளிக்குமோ?
மதுரமான ரஸத்தை உடைத்தாயிருக்குமோ?
இன்னபடியிருக்குமென்று எனக்குச் சொல்...

No comments:

Post a Comment