Monday, August 26, 2013

Rishis

Courtesy : Sri.Mayavaram Guru
மஹரிஷிகள் மந்த்ர த்ரஷ்டாக்கள். அதாவது, வேத மந்திரங்களைக் கண்டுபிடித்தவர்கள் என ஏற்கனவே பார்த்தோம். இவர்களுக்கிருக்கும் மஹத்வத்தினாலேயே இவர்கள் மஹரிஷிகள் என அழைக்கப் படுகின்றனர். இவர்களுக்கே உரித்தான மஹிமையால் இவர்கள் தேவ வர்கத்தை சேர்ந்தவர்களாகயிருந்தாலும், இந்த பூலோகத்தில் வாழ்ந்துக் கொண்டு மனிதர்களுடன் பழகி வருவதால் மனித வர்க்கத்துடன் இணைத்து பேசப்படுகின்றனர்.

ரிஷிகளில் காணப்படும் ஞானம், தியாகம், எளிய வாழ்க்கை, லோகத்திற்காக ஆற்றியுள்ள உபகாரம் முதலியவைகளைக் கண்டு நாம் பிரமிப்பு அடையாமல் இருக்க முடியவில்லை. அவர்களது பரம்பரையில் நாம் வந்துள்ளோம் என்கின்ற ஒரு பெருமை நமக்கு போதும். நாம் எல்லோரும் பாக்கியவான்கள்.

மஹரிஷிகளில் பலவகைகள் உண்டு. ப்ரஹ்மரிஷகள், ராஜரிஷிகள், வேதரிஷிகள், ஸ§தரிஷகள் என அழைக்கப்படுகின்றனர். ரிஷிகள் த்ரிகால ஞானிகள், சிரஞ்சீவிகள், ஸர்வஞ்ஞர்கள், ஸர்வசக்தர்கள். மஹான்களான இந்த ரிஷிகளின் எண்ணிக்கை ஏராளம். அவர்கள் ரூபமாகவும், அரூபமாகவும் இருக்கலாம்.

அவர்களில் சில ரிஷிகளின் பெயர்களையும், அவர்களை பற்றிய வாழ்க்யையை சுருக்கமாக இப்போது பார்ப்போம்.  (நன்றி வேத விக்ஞானம்)

*கஸ்யபர்:

சூரியனை ஸ்ருஷ்டி செய்தவரே இவர்தான். மிகவும் ஆச்சர்யமான மஹிமை உள்ளவர். த்ரிவிக்ரமனான பகவான் விஷ்ணு கஸ்யபருக்கும், அதிதிக்கும் புத்திரனாகத் தோன்றினார். பகவானுக்கே தகப்பனாக இருக்கும் பெருமை பெற்றவர் இந்த மஹரிஷி.


*அத்ரி:

ரிக்வேதத்தில் அத்ரியின் மஹிமை பேசப்படுகின்றது. ஒரு காலத்தில் சூர்ய, சந்திரர்களுக்கு காயம் ஏற்பட்டு ப்ரகாசம் குன்றிய நேரத்தில், இந்த அத்ரி மஹரிஷி தனது வேதாத்யயன பலத்தால், தானே சூர்ய சந்திரர்களாகி, உலகுக்கு பிரகாசம் உண்டாக்கினாராம். பிறகு தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி சூரிய சந்திரர்களை காப்பாற்றினார்.


*வஸிஷ்டர்:

ப்ரஹ்மாவின் மானஸ புத்ரர் இவர். வஸிஷ்டரைப் போல காமக்ரோதங்களை ஜெயித்தவரே இல்லை என்று கூறலாம். மித்ரர், வருணன், என்ற இரண்டு தேவர்களின் அம்சமாக இருண்டு ஜோதி (ரேதஸ்) கிளம்பி, ஒரு கலயத்தில் விழ அதிலிருந்து வஸிஸ்டர் தோன்றினார். வஸிஷ்டரின் பலமே அவரது ஜபம் தான் என்று ஸ்ரீ ராமாயணத்தில் ஒரு ப்ரமாணம் உள்ளது.


*விஸ்வாமித்ரர்:

விஸ்வாமித்ரரின் மஹிமை மிகவும் அபாரமானது. இவரை ஒரு தீவிர லக்ஷியவாதி எனக் கூறலாம். பல இடையூறுகள் ஏற்பட்டாலும், தளர்ச்சி யடையாமல் லக்ஷியத்தை அடைய வேண்டும் எனும் ஒரே எண்ணத்துடன் செயல்பட்டால் வெற்றியடையலாம் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு. வஸிஷ்டர் வாயால் ப்ரஹ்மரிஷி என்ற பெயர் வாங்க வேண்டுமென்னும் முயற்சியில் வெற்றி பெற்றார். தனது தவ வலிமையால் த்ரிசங்குவை ஸ்வர்கத்திற்கு அனுப்பினார். ஸீதாராம கல்யாணத்தை நேரிடையாக நடத்தி வைத்தார்.


*ஜமதக்னி:

விஸ்வாமித்ரரின் மருமான்தான் ஜமதக்னி மஹரிஷி. மஹா பதிவ்ரதையான ரேணுகாதேவி ஜமதக்னியின் மனைவி. இந்த தம்பதிகளுக்கு பல புத்திரர்கள். அவர்களில் ஒருவர் தான் மஹா பராக்ரமசாலியான பரசுராமர். ஜமதக்னி ஸப்தரிஷி மண்டலத்தில் இப்போதும் இருக்கிறார். இவர் அக்னிபோல் ஜ்வாலையுடன் இருப்பதால் ஜமதக்னி எனப்படுகிறார். இவரது மனைவி ரேணுகாதேவியை நமது நாட்டில் மஹாமாயி (அ) மாரியம்மன் என்று பூஜிக்கின்றனர்.


*கௌதமர்:

கௌதமரை வேதத்தில் சூரர் என்பர். ப்ரஹ்மாவின் மானஸ புத்ரியான அஹல்யைதான் இவரது மனைவி. ப்ரம்ஹ புராணத்தின்படி கோதாவரி நதியை கௌதமர் தனது தவத்தினால் உற்பத்தி செய்தார் என அறிகின்றோம். கோதாவரிக்கு கௌதமி என்றும் ஒரு பெயர் உண்டு.


*பரத்வாஜர்:

வாஜம் என்றால் அன்னம். அன்ன தானத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தவர் இவர். அதனால்தான் என்னமோ இவருக்கு பாரத்வாஜர் எனும் பெயர். பாரத்வாஜர் ப்ருஹஸ்பதியின் மானஸ புத்திரர். இவர் வேதத்தில் அதி ஸமர்த்தர். இவரது ஆஸ்ரமத்தில் அன்ன ஸம்ருத்தியும், அதிதி ஸத்காரமும் ஸர்வகாலமும் உண்டு. இவரது தபோ பலத்தை பற்றியும், இவருக்கு வேத அத்யயனத்தில் இருக்கும் இடைவிடாத, அளவிட முடியாத ஆசையை பற்றியும் நிறைய சம்பவங்கள் உண்டு.


*அகஸ்தியர்:

வனவாஸம் வந்த ஸ்ரீராமசந்திர மூர்த்தியை தனது ஆச்ரமத்தில் பூஜித்து தனது தவத்தை சபலமாக்கிக் கொண்டார். இவரது தர்மபத்னி பெயர் லோபமுத்ரை. ஸமுத்ரத்தை ஆசமனம் செய்து குடித்தது; வாதாபியின் கொட்டத்தை அடக்கியது; விந்திய மலையை குட்டி மட்டமாக்கியது, த்ரவிட பாஷைக்கு இலக்கணம் வகுத்தது; போன்ற பல ஆச்சர்யமான நிகழ்ச்சிகளை ஆற்றியவர் இந்த சக்தி வாய்ந்த அகஸ்தியர்.


*ப்ருகு:

ப்ருகு ப்ரஹ்மாவின் மானஸ புத்திரர். இவர் மஹா தபஸ்வி. ப்ருகுவின் பேரன்தான் மார்க்கண்டேயர். இந்த ப்ருகுதான் பிரிதொரு ஜன்மத்தில் கடினமான தபஸ் செய்து, அவர் மேல் புற்று (வல்மீகம்) வந்து விட்டதால் வால்மீகி என்றும் கூறப்பட்டார். ப்ருகு வம்சம் மிகவும் பிரசித்த பெற்றது. ப்ருகுவின் புத்ரியாக ஸ்ரீ மஹாலக்ஷ்மியே அவதரித்தார். இதனால் இவருக்கு ஸ்ரீவஸ்தன் என்றும் பெயர். இந்த பெயரால் ஸ்ரீவத்ஸ கோத்ரம் ஏற்பட்டது. லக்ஷ்மியை பகவான் விஷ்ணு விவாஹம் செய்து கொண்டதால் பகவானின் மாமனாராக ஆகிய பெருமை இவருக்கு உண்டு.


*மார்க்கண்டேயர்:

இவருக்கு மொத்தம் 16 வயதுதான் ஆயுள் விதிக்கப்பட்டிருந்தது. இதை அறிந்திருந்த பெற்றோர்களான ம்ருகண்டுவும், மருத்வதியும் மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களின் சோகத்தை போக்குவதற்காக, மார்கண்டேயர் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து சிரஞ்சீவியாக இருக்க வரம் வாங்கி வந்து விட்டார். யுகம் யுகமாக பல புராண ப்ரவசனம் செய்து வந்தார். இவருக்குப் புராணாசார்யர் என்ற பட்டத்தை சிவபெருமான் அருளினார்.


*ஸனத்குமாரர்:

ஸனத்குமாரரை குறிப்பிடும் போது ஸனகர், ஸனந்தனர், ஸனாதனர் என்ற மூவருடன் சேர்த்து நால்வராகத்தான் பேசப்படுவார்கள். இவர்கள் நால்வரும் ப்ரஹ்£வின் மானஸ புத்திரர்கள். இவர்கள் பரம வைஷ்ணவர்கள். ஸனத்குமாரர் நாரதரின் குரு. சிவனின் இச்சைப்படி ஸ்கந்தனாக (சிவபுத்திரனாக) தோன்றினார். குமாரனாக, தேவஸேனாதிபதியான ஸ்கந்தனாக, ஜ்யோதி ஸ்வரூபமாக தோன்றிய ஸனத்குமாரரின் பெருமைதான் என்ன? அவரது பெருமையை எடுத்துக்காட்ட இது ஒன்று போதுமே.


*நாரதர்:

இவரது தந்தை ப்ரஹ்மா. கடுந்தவம் இவரிடம் கிடையாது. ஹரிகீர்த்தனம், வீணாபாணி, உல்லாசமாக சஞ்சரித்தல் இதுதான் இவரது வாழ்க்கை முறை. அஸ§ரர்களுக்கும் நல்ல நண்பர். நல்ல சாஸ்திர ஞானர். நாக்கு வேதங்களையும், ஆறு சாஸ்திரங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் கற்றவர். த்ருவன், ப்ரஹ்லாதன் முதலியவர்களை குழந்தைகள் என்று அலட்சியம் செய்யாமல் அவர்களுக்கு பகவத் ஸாக்ஷ£த்காரம் ஏற்படும்படி அனுக்ரஹித்தவர் இவர்.


*வியாஸர்:

மஹாஞானியான ஸ்ரீ பராசரரின் புத்திரர் வ்யாஸர். ஸத்தியவதி (அ) மத்ஸ்யகந்தி என்ற பெண் மூலம் ஆவிர்பவித்து க்ருஷ்ணத்வைபாயணண் என்ற ஆரம்ப கால பெயருடன் வளர்ந்த இவர், பிற்காலத்தில் வ்யாஸர் என்ற பெயருடன் ப்ரபலமானார். ஸ்ரீ பரசுராமர் இவருக்கு உபநயனாதி செய்வித்து வேத அத்யயனமும் உபதேசித்தார். வேதத்தை ரிக், யஜுர், ஸாமம், அதர்வணம் என்று விபாகம் செய்தவர் இவரே. பைலர் முனிவருக்கு ரிக் வேதத்தையும், வைசம்பாயனருக்கு யஜுர் வேதத்தையும் ஜைமினிக்கு ஸாம வேதத்தையும், ஸ§மந்து மஹரிஷிக்கு அதர்வண வேதத்தையும் உபதேசித்£ர். வியாஸ மஹரிஷி உலகுக்கு அளித்த மற்றொரு பொக்கிஷம் மஹாபாரதம். வியாஸரின் புத்ரர்தான் சுகர். இவர்தான் பரீக்ஷித் ராஜாவிற்கு ஸ்ரீமத்பாகவதத்தை உபதேசித்தார்.


*ததீசி:

இந்திரன் வ்ருத்ராஸ§ரனை வதம் செய்ய உபயோகப்படுத்திய வஜ்ராயுதம் ததீசி ரிஷியின் அஸ்தியைக் கொண்டு தான். தேவகாரியத்திற்காக இந்திரன் கேட்டவுடன் தனது முதுகெலும்பை கொடுத்தது இவரது தியாக பலத்தை எடுத்துக் கூறுகின்றது. நைமிசாரண்யத்தில் இவர் கடும் தவம் புரிந்ததாக சொல்லப்படுகின்றது.


*ப்ருஹஸ்பதி:

ப்ருஹஸ்பதி தேவகுரு. ப்ராஹ்மண கணங்களுக்கும், தேவ கணங்களுக்கும், கவி கணங்களுக்கும் இவர் முதல்வராக இருப்பதால் இவருக்கு கணபதி என்றும். ப்ரஹ்மணஸ்பதி என்றும், ஜ்யேஷ்டராஜன் என்றும் பெயர் உண்டு. கணானாம்த்வா கணபதிகும் ஹவாமஹே... என்ற பிரசித்தமான மந்த்ரம் இவரை பற்றியது தான். பிற்காலத்தில் பிள்ளையார் மந்திரமாக இது வைதீக பிரயோகத்தில் வந்துள்ளது. புத்திகூர்மைக்கும், சாஸ்திர ஞானத்திற்கும் இவருக்கு நிகர் இவர்தான். தேவகுருவான இவரின் ஆலோசனையால் தான் தேவர்கள் «க்ஷமம் அடைகின்றனர்.


*கர்காசார்யர்:

கர்க மஹரிஷி ஜ்யோதிஷ சாஸ்திரத்தில் மிக பிரஸித்தி பெற்றவர். வானசாஸ்திரமும் இதில் அடங்கும். ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில், பகவானுக்கு நாமகரணம் செய்ய வந்ததாக தெரிகின்றது. இவரது புத்திரர் ப்ராணத்ராதரும் ஒரு மஹாமுனி.

மஹரிஷிகளின் பட்டியல் இவ்வளவுதான் என்ற முடிவுக்கு வரவேண்டாம். ஓர் உதாரணத்திற்காகவும், மாதிரிக்காகவும் தான் இந்த பட்டியல். இவர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பூர்ணமாக பார்த்தால் மிகவும் வியப்பாக இருக்கும். இவர்களின் மேதா
விலாஸத்தை கண்டு நாம் பிரமிப்படைய முடியும். இன்றைய நவீன பாஷையில் சொல்ல வேண்டுமென்றால், இவர்கள் எல்லோரும் ரிசர்ச் ஸ்காலர்ஸ்; சைன்டிஸ்ட்ஸ்; மற்றும் செல்ப்லெஸ் க்ரேட் லீடர்ஸ்.

ஸ¨த்ரகார ரிஷிகள்:

ஒவ்வொரு வேதத்திற்கும் பல சாகைகள் உண்டு. அவரவர்கள் சார்ந்த வேதத்தின் சாகையில் கூறியுள்ள மந்திரங்களைக் கொண்டே அவரவர்கள் தாம் செய்ய வேண்டிய ஸ்ரௌத மற்றும் ஸ்மார்த்த காரியங்களைச் செய்ய வேண்டும். இந்த ப்ரயோகங்களை (பூர்வ மற்றும் அபரம்) தொகுத்து நமக்கு அருளியவர்களும் ரிஷிகளே. இவர்களை ஸ¨த்ரகாரர்கள் என கூறலாம். அவர்களின் சிலரின் பெயர்கள்.

ஆபஸ்தம்பர்
போதாயனர்
பரத்வாஜர்
ஸத்யாஷாடர்
விகனஸ்
ஆஸ்வலாயனர்
கௌஷீதகர்
காத்யாயனர்
ஜைமிநி
த்ராஹ்யாயனர்
கௌசிகர்

இந்த இடத்தில் ஒரு ஸ்வாரஸ்யமான விஷயம் ஞாபகத்திற்கு வருகின்றது. ஆதிசங்கர பகவத்பாதாள் ஆபஸ்தம்பரை பகவான் ஆபஸ்தம்பர் என குறிப்பிடுகிறார். ஆபஸ்தம்பரின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களும், அவர் அருளிய ப்ரயோகங்களும் வியப்பாக அமைந்துள்ளது. சமுதாயத்தில் இன்றும் ஆபஸ்தம்ப ஸ¨த்ரத்தை சார்ந்தவர்கள்தாம் தக்ஷிண தேசத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்பது மற்றொரு தகவல்.

மேலும் சில ரிஷிகள்:

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி மஹரிஷிகளின் எண்ணிக்கை ஏராளம். எண்ணிலடங்கா. மேலும் சில ரிஷிகளின் பெயர்களை தெரிந்து கொள்ள ஆசையா? இதோ அதற்கு ஒரு வழி. பெரியோர்களுக்கு நமஸ்காரம் செய்யும் போது நாம் அபிவாதனம் சொல்லுவோம் அல்லவா. நாம் வந்த ரிஷிகளின் பாரம்பரியத்தை அபிவாதனத்தில் குறிப்பிடும் பகுதியில் பார்த்தால் எல்லா கோத்ரங்களையும் சேர்த்து நமக்கு இன்னும் பல ரிஷிகளின் பெயர்களைக் காணலாம்.


ரிஷிகள் ஸந்யாஸ ஆச்ரமத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை.: 

மற்றொரு விஷயத்தையும் நாம் தெளிவுபட புரிந்து கொள்ள வேண்டும். ரிஷிகள் ஸந்யாஸ ஆச்ரமத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. க்ருஹஸ்த தர்மத்தை அனுசரித்தே அருள் புரிந்துள்ளனர். யஞ்ன யாகாதிகள் போன்ற அக்னி கார்யங்களிலும் ஈடுபட்டு அருள் புரிந்துள்ளனர்.


No comments:

Post a Comment