| விஷ்ணுவின் சஹஸ்ர நாமத்தில் 24 நாமங்கள் மிக முக்கியமாக கருதப்படுகின்றது. அவை என்ன? கேசவ நாராயண மாதவ கோவிந்தா விஷ்ணு மதுசூதன திரிவிக்கிரம வாமன ஸ்ரீதர் ரிஷிகேஷ பத்மநாபா தாமோதர சங்கர்ஷன வாசுதேவ பிரத்யும்ன அநிருத்த புருஷோத்தமா அதோக்ஷஜா
நரசிம்ஹா அச்யுத ஜனார்த்தன உபேந்திரா ஹரி ஸ்ரீகிருஷ்ணா. எந்த காரியத்தை செய்வதானாலும், மனத்தூய்மையுடன் கடவுளை வணங்கி செய்தால் அந்த காரியம் சுபமாக முடியும் என்பது நம்பிக்கை. அதற்காகவே பூஜை, சந்தியாவந்தனம் ஆகியவைகளை துவக்கும்போது 'ஆசமனம்' செய்யவேண்டுமென்றும், அப்படி செய்யும்போது மேற்கூறிய கடவுளின் 24 நாமாக்களையும் சொல்ல வேண்டும் என்றும் நிர்ணயித்திருக்கிறார்கள். பொருள் அறிந்தோ அறியாமலோ இந்த நாமாக்களை சொல்வதால் உள்ளே இருக்கும் பாவங்கள் போகும், மோட்சம் கிட்டும் என்பது அஜாமிளன் கதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த நாமாக்களின் மகிமையை நமக்கு தெரிவிக்க வேண்டுமென்று ஸ்ரீ கனகதாஸர் ஒரு பெரிய்ய்ய பாடலை பாடியிருக்கிறார். ஒவ்வொரு நாமாவுக்கும் கடவுளிடம் ஒரு வேண்டுகோள், இரண்டு வரி. வேண்டுகோள்னா உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் - கிரைண்டர், மிக்சி இதெல்லாம் கிடையாது. அவன் கருணைப் பார்வை மட்டுமே. http://music.raag.fm/Carnatic_Movies/songs-19128-Udaya_Raaga-Sri_Vidyabhushana |
| | |
|
No comments:
Post a Comment