Courtesy:Gemini Ramurthy
மிகுந்த இறை நம்பிக்கை கொண்ட, வசதிமிக்க கல்கத்தா சேட்ஜி ஒருவருக்கு தீராத ஒரு
நோய். எந்த உணவையும் சாப்பிட பிடிக்கலை. எதை சாப்பிட்டாலும், அதன் ருசி
தெரியாமல், உப்பு சப்பில்லாமல் இருந்தன. தாகம் கூட எடுப்பது இல்லை. அதனால்,
நாளடைவில் மிகவும் மெலிந்து போனார். பார்க்காத வைத்தியம் இல்லை. இறுதியில்
யாரோ சொல்லக்கேட்டு, மகாபெரியவரை போய் சந்தித்தார். விவரம் கூறினார். பெரியவா
ஒரு விஷயம் சொன்னார். பரிகாரம் போல் இருந்தது.
அந்த கல்கத்தா சேட்ஜிக்கு, மகா பெரியவா சொன்ன பரிகாரம் என்பது மேலோட்டமாக
பார்த்திட ஒரு பெரிய விஷயம்போல தெரியாது. ஆனால், நடைமுறையில் அதைச் செய்திட
உண்மையில் இறையருள் நிறையவே வேண்டும்.
நம் மதத்தின் தனிப்பெரும் சிறப்புக்குரியவை, முதலில் வேதங்களே! அதைத்
தொடர்ந்து இந்த மண்ணில் வந்தவை இதிகாச புராணங்கள். இதிகாசங்கள் என்றாலே,
ராமாயணமும், மகாபாரதமும் வந்துவிடும்.
புராணம் என்று வரும்போது ஒரு பட்டியலே உள்ளது. அந்த வகையில், 'பிரம்ம புராணம்,
பத்மபுராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம், லிங்க புராணம், கருட புராணம், நாரத
புராணம், பாகவத புராணம், அக்னி புராணம், ஸ்கந்த புராணம், பவிஷ்ய புராணம்,
பிரம்ம வைவர்த்த புராணம், மார்க்கண்டேய புராணம், வாமன புராணம், வராக புராணம்,
மச்ச புராணம், கூர்ம புராணம், பிரம்மாண்ட புராணம்' என்று பதினெட்டு
புராணங்களோடு வாயு புராணத்தையும் சேர்த்தால், 19 புராணங்கள் வருகிறது.
பெரியவர் அந்த சேட்ஜிக்கு சொன்ன பரிகாரம் இதுதான். மேலே கண்டவற்றில், நான்கு
வேதங்கள் மற்றும் இரண்டு இதிகாசங்களையும் விட்டுவிட்டு, மீதமுள்ள அவ்வளவு
புராணங்களையும் மூலத்தில் உள்ளது உள்ளபடி துளியும் பிசகின்றி, நூலாக அச்சிட்டு
அதை இந்த பாரததேசம் முழுக்க உள்ள வேத பண்டிதர்களுக்கும், விரும்பிக்
கேட்பவர்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும். சேட்ஜியால் செய்ய முடியுமா? என்று
கேட்டார். சேட்ஜியே உப்புச் சப்பில்லாத ஒரு வாழ்வை வாழ்ந்தபடி இருக்கிறார்.
எனவே, மறுபேச்சே பேசாமல் அந்த பரிகாரத்துக்கு தயாராகிவிட்டார்.
ஆனால், பதினெட்டு புராணங்களையும் மூலத்தில் உள்ளது உள்ளபடி துளியும் மாறாமல்,
அச்சிட வேண்டும் என்று பெரியவர் அடிக்கோடிட்டு விட்டபடியால், அதை
தேடிக்கண்டுபிடிப்தே ஒரு பாடாக இருந்தது. அதற்காக ஒரு அலுவலகம் அமைந்து, அதில்
வேத பண்டிதர் களை நியமித்து, அவர்களுக்கு உரிய சன்மானமும் மரியாதையும் தந்து,
ஒரு அர சியல் கட்சித் தலைவர் ஒரு இயக்கத்தை நடத்துவதுபோலவே நடத்த வேண்டி
யிருந்தது.
தோராயமாக சில லட்ச ரூபாய் செலவாகும் என்று கணிக்கப்பட்ட விஷயம், பல லட்சங்களை
விழுங்கியது. ஒவ்வொரு புராணத்தையும் தேடிப்பிடித்து அச்சேற்றி புரூஃப்
திருத்தி, பின் உரிய முறையில் புத்தகமாக்கி, அதை பாதுகாப்பாக வைத்துவிட்டு,
அடுத்த புராணம் என்று செயல்பட வேண்டியிருந்தது.
இவ்வாறு செய்வதால், அவருக்கு குணமாகிவிடும் என்கிற உறுதியை பெரியவர் தரவில்லை.
சொல்லப் போனால், இந்த பரிகாரத்தைக்கூட, எடுத்த எடுப்பில் கூறிவிடவில்லை.
ஒருமுறைக்கு பலமுறை அந்த சேட்ஜி சார்பில் ராஜகோபால சர்மா என்னும் உபன்யாச
சிரோன்மணி ஒருவர், முயற்சி செய்தபிறகே அவர் கூறியிருந்தார். இதைக் கூற காரணம்
உண்டு.
ஒரு நம்பிக்கை அடிப்படையில், பெரியவர் சொன்னதை செய்ய, அதைவிட கூடுதலான
நம்பிக்கை செய்பவரிடம் வேண்டும். அடுத்து அந்த நம்பிக்கை துளியும் குறையாதபடி
நீடிக்கவும் வேண்டும். ஏனென்றால், பெரியவர் சொன்ன இந்த பரிகாரப்படி பதினேழு
புராணங்களைத் தேடிப்பிடித்து, அச்சேற்றிவிட்ட நிலையில், பதினெட்டு ஒன்றே
பாக்கி என்றிருக்கும் நிலையில், அந்த சேட்ஜியிடம் எந்த குணப்பாடும் இல்லை.
சொல்லப்போனால் குணமாவதற்கான அறிகுறிகள் கூட கண்ணில் படவில்லை.
ஆனால், பணமோ கரைந்தபடி உள்ளது. சொல்லப்போனால், சேட்ஜி சம்பாதித்ததை எல்லாம்
கரைத்துவிட்டார் என்று கூட கூறலாம்தான். ஆனால், சேட்ஜியோ துளியும் நம்பிக்கை
குன்றாமல் பதினெட்டாவதையும் வெளியிட்டு முடித்தார். பதினெட்டாவதாக ஸ்ரீஸ்கந்த
புராணத்தை அச்சடிக்கத் தொடங்கும்போதே அவரிடம் ஒரு மாற்றம். தாகம் எடுக்க
ஆரம்பித்தது. அச்சடித்து முடிக்கும்போது சாப்பிடவே தொடங்கிவிட்டார்.
நாக்குக்கு ருசி உணர்வு வந்து, அவரது மர்மநோய் இனி என்னால் உன்னை ஒன்றும்
செய்ய முடியாது என்பதுபோல நீங்கியேவிட்டது.
சேட்ஜியின் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அதன் பிறகு,
அவர் பெரியவரை எப்படி எல்லாம் கொண்டாடி மகிழ்ந்திருப்பார் என்று கூறத் தேவையே
இல்லை. இந்த விஷயத்தில் பெரியவர் சொன்ன பதில்தான் சிகரம்.
'இந்த அதிசயத்தை நான் செய்யவில்லை. அப்படிச் சொன்னால் தவறு. பதினெட்டு
புராணங்களுக்குள்ளம் சப்த ரூபமாய் வாழ்ந்துகொண்டிருககும் நம் ரிஷிகளும்
முனிவர்களும் இறை அம்சங்களுமே இதைச் செய்தன. சேட்ஜியின் கர்ம வினைக்கு இணையான
பரிகாரமாக, நான் இதை எண்ணிடக் காரணம் கூட, நமது ரிஷிகளும் முனிவர்களுமே…'
என்று, அவருக்கு வந்த வந்தனங்களை எல்லாம், அப்படியே ரிஷிகளுக்கும்
முனிவர்களுக்கும் சமர்ப்பணமாகும்படி செய்துவிட்டார்.

No comments:
Post a Comment