Courtesy: Sri.Mayavaram Guru
ஒரு நாள் விடியற்காலம் நாலரை மணி. முகாமில் ஸ்வாமிகளை காணவில்லை!
ஸ்வாமிகள் படுத்திருந்த அறைக் கதவை, டியூடியில் இருந்த பாராக்காரர், சற்றுத் திறந்து பார்த்தபோது, ஸ்வாமிகளை

க் காணவில்லை! பதறிப்போன பாராக்காரர் மற்றவர்களிடம் கூறவே, ஏகப்பட்ட களேபரம், கூச்சல், ஆளுக்கு ஒரு மூலையாகத் தேட்த் தொடங்கினார்கள்.
கடைசியில், இரண்டு மைலுக்கு அப்பலிருந்த ஒரு குளத்தில், ஸ்வாமிகள் நீராடி, துணியைப் பிழிந்து கட்டிக் கொண்டு, படியேறி நடந்து வருவது கண்டு பிடிக்கப்பட்ட்து.
ஸ்வாமிகள் ஏதும் பேசவில்லை.
மாலையில் மானேஜரைக் கூப்பிட்டனுப்பினார். பாராக்காரர்கள் அலுவல் நேரம் கேட்டறிந்தார். பிற்பகல் ஆறு மணியிலிருந்து மறுநாள் காலை ஆறு மணிவரை, தொடர்ந்து, பாராக்காரர் அலுவலில் இருக்க வேண்டியிருந்தது.
பெரியவாள் 'காணாமற் போன' அன்று விடியற்காலை நாலரை மணிக்கு, அவர்கள் அறையிலுந்து வெளியே புறப்பட்டுச் சென்றபோது, பாராக்காரர் தூக்கத்தில் இருந்த்தால் பெரியவாள் போனதை கவனிக்கவில்லை. நீண்ட நேர அலுவல் என்றால், அலுப்பாகத் தானே இருக்கும்?
'இனிமே பாரா ட்யூட்டியை மாத்திப்போடு, சாயங்காலம் ஆறுலேர்ந்து ராத்திரி பத்து வரை, பத்திலிருந்து ரெண்டு மணி வரை; ரெண்டிலேர்ந்து காலம்பற ஆறுமணி வரை….'
ஸ்வாமிகள் மனிதாபிமானம் எல்லையற்றது என்பதற்கு இந்த நிகழ்ச்சியே போதும்.
(ஒரு வேளை பாராக்காரர்கள் சிரமத்தை போக்கவே இந்த நாடகமோ… அவரே அறிவார்)
பெரியவா சரணம் - கண்ணன்

No comments:
Post a Comment