Courtesy: Sri.Mayavaram Guru
மலைப்பிரதேசங்களில் வளரும் ஒருவகையான மரத்தின் விதைதான் ருத்ராட்சம். இதற்கு தனித்துவமான சிறப்புகள் பல உண்டு. தன்னைச் சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளை இது கொண்டிருக்கிறது. எனவே, இதை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது.
நீங்கள் புதுஇடங்களுக்கு செல்லும் போது அங்கிருக்கும் அதிர்வுகள் உங்களுக்கு ஏற்றதாக இல்லையென்றால் உங்களால் அமைதியாக இருக்க முடியாது. ஆனால், ருத்ராட்சம் அணிந்தால் எவ்விதமான பாதிப்பும் நம்மை தீண்ட முடியாது.மனநிலை சாந்தமாகவ

ே இருக்கும். சக்திவட்டம் நம்மைக் கவசம் போல் பாதுகாக்கும்.
எப்படி ருத்திராட்சம் தோன்றியது ?
===========================
ருத்திரன் என்ற பெயரில் இருந்து வந்ததே ருத்திராட்சம் ஆகும். சிவபெருமானின் முக்கண்களிலிருந்தும் தெறித்த ஆனந்தக் கண்ணீர் சொட்டுகளே ருத்திராட்சங்களாகின. மொத்தம் முப்பத்தெட்டு விதமான ருத்திராட்சங்கள் தோன்றின.
வலது கண்ணிலிருந்து மஞ்சள் நிற ருத்திராட்சங்கள் பன்னிரண்டும், இடது கண்ணில் இருந்து பதினாறு வெண்ணிற ருத்திராட்சங்களும் தோன்றின. நெற்றிக் கண்ணிலிருந்து கருப்பு வண்ணத்தில் பத்து ருத்திராட்சங்கள் வெளிப்பட்டன.
ருத்திராட்ச மகிமை
===============
ருத்திராட்சத்தின் மகிமையை விளக்குகிறது இந்தப் புராணக் கதை:
-------------------------------------------------------------------------------------------
முன்னொரு காலத்தில் சார்வாங்கன் என்பவன் தன் கடமைகளை மறந்து, தான் செய்த வியாபாரத்தில் பல தவறுகள் புரிந்து, கூடா ஒழுக்கம் கொண்டு வாழ்ந்து வந்தான். ஒரு கட்டத்தில் குடும்பத்தை விட்டுப் பிரிந்து களவுத் தொழிலிலும் ஈடுபட்டான்.
இறுதியாக விந்திய மலைச் சாரலில் உயிர் துறந்தான். அவனை யமகிங்கரர்கள் பாசக்கயிற்றால் பற்றி இழுத்து யமலோகத்திற்குக் கொண்டு செல்ல முற்பட்டபோது, சிவகணங்கள் அவர்களைத் தடுத்தனர்.
'இவ்வுயிரை கைலாயத்துக்கு எடுத்துச் செல்லப் போகிறோம்' என்றனர். ஆனால், யமனின் தூதுவர்களோ 'இவன் மகாபாவி' என்றனர். அதற்கு சிவகணங்கள், 'இவன் வாழ்ந்த முறை ஒழுங்கீனமானதாக இருக்கலாம்.
ஆனால், இவன் இறந்த இடத்திலிருந்து பத்து முழ தொலைவில் ஒரு ருத்திராட்ச மரம் உள்ளது. அந்த மரத்தின் அதிர்வலைகள் இவனை புண்ணியவனாக்கிவிட்டது. எனவே, இவனுக்கு சிவலோகப் பதவி கிட்டியது' என்றனர். ருத்திராட்சத்திற்கு அவ்வளவு சிறப்பு உண்டு!
ருத்ராட்ச மாலையை அணியும் முறை
==============================
குடுமியில் அணிய வேண்டியது - 1
தலை உச்சியில் அணிய வேண்டியது - 13
தலையில் அணிய வேண்டியது - 36
காதில் அணிய வேண்டியது 1 அல்லது 6
கழுத்தில் அணிய வேண்டியது - 32
புஜத்தில் (கை 1க்கு) அணிய வேண்டியது - 16
ஒரு மணிக்கட்டில் அணிய வேண்டியது - 12
குடும்பஸ்தர்கள் அணியும் மாலையில் இருக்க வேண்டியது - 25
இம்மை மறுமை பலன்களை அடைய உதவும் ஜெபமாலையில் (கையில் வைத்துக் கொள்ள) கட்ட வேண்டியது 108.
ருத்ராட்ச வடிவங்கள்
ருத்ராட்சம் தெய்வீக வடிவம் கொண்டது. அதனால் தான் அதற்கேற்றபடி பலன் கொடுக்கிறது. சிவ புராணத்தில் ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு அவதாரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு முகம் - சிவ வடிவம்
இரு முகம் - தேவி வடிவம்
மூன்று முகம் - அக்னி சொரூபம்
நான்கு முகம் - பிரம்ம வடிவம்
ஐந்து முகம் - ருத்ர வடிவம்
ஆறு முகம் - சண்முக வடிவம்
ஏழு முகம் - அன்னங்கள் வடிவம்
எட்டு முகம் - கணபதி வடிவம்
ஒன்பது முகம் - பைரவர் வடிவம்
பத்து முகம் - திருமால் வடிவம்
11 முகம் - ஏகாதச ருத்திர வடிவம்
12 முகம் - துவாதச ஆதித்ய வடிவம்
13 முகம் - முருகன் வடிவம்
14 முகம் - சிவ வடிவம்
ருத்ராட்சையின் பிற பெயர்கள்
========================
ருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி, சிவமணி, சிரமணி, அக்குமணி, அக்கமணி, அட்சமணி, விழிமணி, கண்மணி, புனிதமாமணி, கண்டிகை, கண்டி, நாயகன் என ருத்ராட்சைக்கு பல பெயர்கள் உள்ளன.
ருத்ராட்ச சிவலிங்கம்
================
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், பாபநாச நாதர் கோயிலில் உள்ள மூலவர் ருத்ராட்சத்தினால் ஆனவர். பொதிகை மலை அடிவாரத்திலுள்ள இந்தக் கோயிலின் மூலவரே, உலகின் முதல் சிவலிங்கம் என தல புராணம் கூறுகிறது. பங்குனி 22 முதல் சித்திரை முதல் தேதி வரை இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இமயத்தில் சிவபார்வதிக்கு நடந்த திருமணத்தை பொதிகையில் அகத்தியர் கண்டார். அந்த நிகழ்ச்சி சித்திரை முதல் நாளில் இங்கு நடத்தப்படும்.
ருத்ராட்சத்தால் ஆன அம்மன்
=======================
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் அமைந்துள்ள திருத்தலம் சோட்டாணிக்கரை. இங்குள்ள கோயிலில் அருள்பாலிக்கும் ராஜராஜேஸ்வரி அம்மனை சோட்டாணிக்கரை பகவதி என்று அழைக்கிறார்கள். இந்த அம்மன் முழுவதும் ருத்ராட்சத்தால் ஆனது என்பது தனி சிறப்பு. இவள் காலை, மதியம், மாலை மூன்று வேளையும் துர்க்கா, லட்சுமி, சரஸ்வதியாக அருள்பாலிக்கிறாள். தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை சரியில்லாதவர்கள் இங்கு வழிபாடு செய்து குணமடைகிறார்கள்.

No comments:
Post a Comment