Sunday, September 9, 2012

எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதான் - ராமகிருஷ்ணர் பரமஹம்சர் !!!

courtesy:Sri.mayavaram Guru

"மனிதர்களும் வாழ்க்கையில் உயரிய லட்சியமெல்லாம் வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், நடுவிலே கிடைக்கிற அற்ப சந்தோஷத்துக்கு மயங்கி மேலே போகாமலேயே இருந்து விடுவார்கள்" என்று சொன்னாராம். 

 
ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு தடவை பேலூர் காளி கோவிலுக்குப் போயிருந்தபோது, "ஒவ்வொரு நாளும் நாங்க பண்ணுற பிரசாதத்தை எல்லாம் எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன. கடவுளுக்கும் படைக்க முடியவில்லை. பக்தர்களுக்கும் கொடுக்க முடியவில்லை" என்று சொன்னார்களாம்.

இதைக் கேட்டு விட்டு பரமஹம்சர் சொன்னார், "இன்றைக்குக் கோவில் வாசலிலே ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள். அப்புறம் எறும்பு உள்ளே வராது"

அதே போல கோவில் வாசலிலே சர்க்கரையைப் போட்டதும், எறும்புகளெல்லாம் அந்த சர்க்கரையை மொய்த்து விட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன. " உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன. இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்துவிட்டு திரும்பிப் போய்விட்டனவே.. " என்று எல்லாரும் பரமஹம்சரிடம் கேட்டார்கள்.

"அவைகளும் மனிதர்களும் ஒன்றுதான்" என்றாராம் பரமஹம்சர். மனிதர்களும் வாழ்க்கையில் உயரிய லட்சியமெல்லாம் வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், நடுவிலே கிடைக்கிற அற்ப சந்தோஷத்துக்கு மயங்கி மேலே போகாமலேயே
இருந்து விடுவார்கள்" என்று சொன்னாராம்.
 

 

No comments:

Post a Comment