கருத்துள்ள சிரிப்பலைகள்!
பொறுமை கடலினும் பெரிது, பொறுமையால் பல காரியங்களை சாதிக்கலாம். அவசரத்தாலும், ஆத்திரத்தாலும் காரியங்கள் கெட்டு விடும்.
ஒருவன் கோவிலுக்கு போனான். கோவில் சுவற்றில் பெருமாள் விக்ரகம் இருந்ததை கண்டான். அருகில் நின்று கவனித்தான். அதன் கீழே ஒரு கல்வெட்டு இருந்தது. கல்வெட்டு எழுத்துக்கள் ஒரு மாதிரியாக இருக்கும். சிலருக்கு ஒன்றுமே புரியாது; இவனுக்கு அந்த எழுத்துக்கள் தெரியும். அதனால், அதை படித்து பார்த்தான்.
"இந்த பெருமாளுக்கு எவன் ஒரே சமயத்தில், நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்கிறானோ, அவனுக்கு ராஜ பதவி கிடைக்கும்...' என்று எழுதி இருந்தது. "அடடா... ராஜ பதவி என்றால் சும்மாவா? ஒரு மந்திரி பதவிக்கே லட்ச, லட்சமாக செலவழித்து, அலையாய் அலைகின்றனர். அப்படி இருக்கும் போது, நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்தால், ராஜ பதவி கிடைக்கிறதே...' என்று எண்ணினான்.
உடனே, ஓடிப் போய் ஒரு குடத்தை எடுத்து, பக்கத்திலிருந்த குளத்திலிருந்து தண்ணீர் கொண்டு வந்து, அபிஷேகம் செய்ய ஆரம்பித்தான். ஞாபகமாக ஒண்ணு, ரெண்டு என எண்ணிக் கொண்டே அபிஷேகம் செய்தான். எழுபது, எண்பது, தொண்ணூறு குடம் ஆயிற்று...
"என்னடா இது... 95 குடம் அபிஷேகம் செய்தாயிற்று; ராஜ பதவிக்கான அறிகுறி ஒன்றுமே தெரியவில்லையே! கீரிடத்தை எடுத்துக் கொண்டு யாராவது வருகின்றனரா?' என்று சுற்றும், முற்றும் பார்த்தான்; யாரையும் காணோம். இவனுக்கு பொறுமையும் குறைந்தது.
"சரி... எப்படியாவது நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்து விடுவோம்...' என்று எண்ணி, மறுபடியும் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தான். 96, 97, 98. ஊஹும்... ராஜ பதவிக்கான அறிகுறியே காணோம்.
பொறுமையை இழக்க ஆரம்பித்தான். 99வது குடமும் அபிஷேகமாகி விட்டது; பலன் தெரியவில்லை. பொறுமையை இழந்தான். நூறாவது குடம் தண்ணீர் கொண்டு வந்து, நூறு என்று சொல்லி குடத்தை பெருமாள் தலையில் போட்டு உடைத்தான். அவ்வளவுதான், இவன் முன் தோன்றினார் பெருமாள்.
"பக்தா... நீ நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்தது குறித்து மகிழ்ந்தேன்; ஆனால், பொறுமையை இழந்து, நூறாவது குடத்தை என் மேல் போட்டு உடைத்தது பெரிய அபசாரம். நூறாவது குடத்து தண்ணீரையும் பொறுமையுடன் அபிஷேகம் செய்திருந்தால், உனக்கு ராஜ பதவி கிடைக்க ஏற்பாடு செய்திருப்பேன்.
"நீ, கடைசி நேரத்தில் பொறுமையை இழந்து, அபசாரம் செய்து விட்டதால், பொறுமைக்கு அடையாளமாக, கழுதையாக ஏழு பிறவி எடுத்து, பின்னர் மனித ஜென்மா கிடைக்கும் போது, மீண்டும் எனக்கு நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்தால், ராஜ பதவி கிடைக்கும்...' என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்து விட்டார்.
பொறுமை எவ்வளவு முக்கியம் என்று, இதிலிருந்து தெரிகிறதா?
-------------------------------------------------------------

-----------------------------------------------------------------------------------------
தாய்மையைப் போற்றி வழிபடும் நவராத்திரி

அம்மா என்பது தமிழ் வார்த்தை. அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை என்பது ஒரு பாடல் வரி. குழந்தையின் முதல் வார்த்தை மட்டுமா அம்மா? குழந்தை உருவாகும் கருவறையைத் தாங்கி நிற்பவளும் அந்த அம்மா அல்லவா? அம்மா அதாவது உலக உயிரினங்களுக்கெல்லாம் உற்பத்தித் திருவிடமாக விளங்கும் தாயை இந்துக்களாகிய நாம் இறையுருவில் போற்றி வழிபடுகின்றோம்.
இந்து சமயத்தவர் மத்தியில் தாய்மையை, பெண்மையைப் போற்றும் பண்பு ஆதிமுதல் இருந்து வரும் மரபு. உலக இயக்கத்தின் சக்தியாகத் தாய்மையே விளங்குகின்றது என்பது நமது நம்பிக்கை. அதனால்தான் எல்லாச் சக்திகளுக்கும், இயக்கங்களுக்கும் தாய்மை நிலை தந்து வழிபாடு செய்கின்றோம். வேண்டுதல் செய்கிறோம்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் சமத்துவம் வேண்டுமென்று குரல் கொடுத்து வரும் காலம் இக்காலம். ஆனால், இந்துக்கள் என்றோ சமத்துவத்தைக் கண்டுவிட்டனர். இறை சக்தியாகவே கொண்டுவிட்டனர். கொண்டாடிப் போற்றுகின்றனர். இந்து சமுதாயத்திலே ஆணைவிடப் பெண்ணுக்கு உயர்நிலை வழங்கப்பட்டுள்ளது. ஆதியும், அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியாகிய சிவனின் உருவிலே சரி பாதியாகப் பெண்மையை இணைத்துப் போற்றி நிற்பது நமது மரபு.
இந்துக்களின் சிறப்பு வழிபாட்டுத் தினங்களாகக் கொள்ளப்படும் நன்னாட்களிலே பல்வேறு திருநாமங்களில் தாய்மை வழிபாடு நிகழ்த்தப்பட்டு வருகின்றது.
இத்திரு நாட்களில் புரட்டாதி மாதத்தில் வரும் நவராத்திரி சிறப்புப் பெறுகின்றது. உலகின் இயக்கத்திற்கு அடிப்படையாக அமைவன வீரம், செல்வம், அறிவு ஆகிய மூன்றுமாகும். இம்மூன்று தேவைகளையும் வழங்கும் சக்திகளாகத் துர்க்கை இலட்சுமி, சரஸ்வதி ஆகிய இறை சக்திகளைக் கொள்கின்றோம். மலைமகள், அலை மகள், கலைமகள் என்றும் குறிப்பிடுகின்றோம்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களிலே முதல் மூன்று நாட்களும் வீரத்தின் சக்தியாக விளங்கும் துர்க்காதேவியின் அருள்நாடி வழிபாடு செய்யப்படுகின்றது. துர்க்காதேவி பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கும் சக்தியாகக் கொள்ளப்படுகின்றாள். சமூக நடைமுறைக்கும், ஆட்சியின் சிறப்புக்கும், தனிமனித வாழ்வின் நிறைவிற்கும் உந்து சக்தியாக, இயக்கமாக இருப்பவள் துர்க்கை, துர்க்கை ஒவ்வொரு சக்தியின் வெளிப்பாட்டின் போதும் ஒவ்வொரு திருப்பெயர் பூணுகின்றாள்.
பார்வதி, பரமேஸ்வரி, அம்பிகை, கெளரி, ஜனனி, உமையவள் இவ்வாறு பலதிருநாமங்கள் துர்க்கையம்மனுக்குண்டு. சாந்த சொரூபியாகக் கருணைவினளாகவும், அதர்மத்தை அழிக்கும் அகோர நிலைபூண்டவளாகவும் அன்னையின் திருவுருவம் சித்தரிக்கப்படுகின்றது.
துர்க்கை வழிபாட்டின் மூலம் மனவுறுதி, சக்தி, நிம்மதி, அமைதி, ஆனந்தம், பாதுகாப்பு எல்லாம் கிட்டும். இவற்றை அடைவதற்கு வீரம் வேண்டும். வீரம் என்றால் என்ன? சிந்திப்போம், வீரம் என்றால் உடல் வலிமை மட்டுமா? இல்லை. மனவலிமையும் சேர்ந்ததே வீரம். எதையும் தாங்கும் சக்தி, எப் பிரச்சினையையும் எதிர்கொண்டு வெற்றி பெறும் சக்தி அதுவே உள வலிமை. வாழ்வில் நல்லியக்கத்திற்கும், நிம்மதிக்கும் வழிகோலும் சக்தியின் தாயாகத் துர்க்கை விளங்குகிறாள்.
துன்பங்கள், துயரங்கள் நம் உள்ளத்திலே குடிகொண்டு நமது நிம்மதியான வாழ்வைச் சிதைக்காதிருக்க மனவலிமை வேண்டும். அந்த வலிமையைத் தருமாறு அன்னையிடம் வேண்டுதல் செய்யும் புண்ணிய நாட்களாக நவராத்திரி நாட்களின் முதல் மூன்று நாட்களும் விளங்குகின்றன. மனவலிமையென்பது தன்னம்பிக்கையாகும். மனவலிமை இருந்தால் மட்டுமே உடல்வலிமை பயனளிக்கும். மனவலிமை அற்றுவிட்டால் உடல் வலிமையால் பயனில்லை அல்லவா?
மன வலிமையை, எதையும் தாங்கும் சக்தியைப் பெற்று வாழ்வில் எதிர் நீச்சல் போட துர்க்கையம்மனின் திருவடியைச் சரணடைந்தால் பயனும், பலனும் நிச்சயம் உண்டு என்பது நமது நம்பிக்கை. துணிவைத்தரும் துர்க்கை அதர்மத்தை அழித்துத் தர்மத்தை நிலை நிறுத்தும் ஆற்றலின், கருணையின் உறைவிடம் என்பதையும் நாம் உள்ளத்தில் இருத்தி நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்வோம்.
அடுத்துவரும் மூன்று நாட்களும் செல்வத்தின் அதிபதியான அன்னை மகாலட்சுமிக்குரிய நாட்களாகும். செல்வம் என்றால் என்ன? பணம், பொருள், சொத்துக்கள் தான் செல்வம் என்று பலர் எண்ணுகின்றார்கள். மேற் கூறப்பட்டவை செல்வங்களாயினும் நிம்மதி, தேகசுகம், நற்பண்பு, நல்லார் உறவு, நல்லறிவு, குடும்ப உறவு, சமுதாய நல்லுறவு, புத்திரப்பேறு, பாதுகாப்பு, பசி, பட்டினி இன்மை, நாட்டுவளம், இவையெல்லாம் ஒருவருக்கிருக்க வேண்டிய செல்வங்களாகும்.
இவற்றையெல்லாம் வழங்கும் சக்தியாக விளங்குபவள் காக்கும் கடவுளாக நாம்போற்றும் திருமாலின் தேவியான மகாலட்சுமி அன்னையே.
'அருட் செல்வம் செல்வத்துச் செல்வம் பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள' என்பது வள்ளுவர் வாக்கு.
ஒருவர் தவறான வழியிலும் பொருZட்டலாம். செல்வந்தரென்று காட்டிக்கொள்ளலாம். அந்தச் செல்வம் மட்டும் நிலையானது, பெருமை தருவது என்று கூறமுடியாது. மாபெரும் செல்வந்தர்கள் அதாவது பொருட்செல்வம் நிரம்பப் பெற்றவர்களாயிருந்தாலும் மேலேகாட்டப்பட்ட ஏனைய செல்வங்கள் இல்லாவிட்டால் வாழ்வின் பெருமைக்கு, பெறுமதிக்கு முழுமை காண முடியாது.
இயற்கையின் இயக்கமாக இயற்கையின் சொரூபமாக மகாலட்சுமி திகழ்கின்றாள். பூமியைத் தாங்கி நிற்கும் போது பூமாதேவியாகவும், புத்திரப் பேறு வழங்கும் போது சந்தானலட்சுமியாகவும், மனவுறுதி தரும் போது வீர லட்சுமியாகவும், திகழும் அன்னை வெற்றியைத் தரும்போது வஜயலட்சுமியாகவும், தைரியம் தரும்போது தைரியலட்சுமியாகவும், பயிர்கள் செழித்து விளைவைப் பெருக்கும்போது தானிய லட்சுமியாகவும் பொருட் செல்வங்களை வழங்கும் போது தனலட்சுமியாகவும் போற்றப்படுகின்றாள்.
எழுச்சியை வழங்கும் கஜலட்சுமியாகவும் நிம்மதியைத் தரும்போது ஆதிலட்சுமியாகவும் செல்வாக்கைத் தரும் போது ஐஸ்வரியலட்சுமியாகவும் அன்னை விளங்குகின்றாள். இவ்வாறு பத்துத் திருப்பெயர்களுடன் அருள் செய்பவள் அன்னை மகாலட்சுமியே ஆவார்.
நாட்டிலே நல்லமழை பொழிய வேண்டும். விளைநிலம் செழிக்க வேண்டும். பசிபட்டினி இல்லாதொழிய வேண்டும். நல்லாட்சி நாட்டிலே நடக்க வேண்டும். பஞ்சமா பாதகங்கள் உட்பட சகல தீய வினைகளும், நிலைகளும் அகன்று நிம்மதி, அமைதி நிலைக்க வேண்டும். இந்த செல்வநிலை ஓங்க வேண்டும் என்பதே மகாலட்சுமி வழிபாட்டின் நம்பிக்கையாகும்.
நவராத்திரி தினங்களில் இறுதி மூன்று நாட்களும் அறிவின் தெய்வமான சரஸ்வதி தேவிக்குரிய நன்னாட்களாயமைகின்றன. மனித குலத்திடையே சித்தனைத் தெளிவு, சீரியபார்வை, பண்பட்ட நடத்தை போன்றவை மிளிர பகுத்தறிவு பயன்பட வேண்டும்.
மனிதகுலம் சீர்பெற , சிறப்புடன் வாழ கலைகளுக்கெல்லாம் அதிபதியான தேவி அறுபத்து நான்கு கலைகளைத் தந்தருளியுள்ளார். இக்கலைகள் மேன்மையுற்றால் உலகில் தீ¨மைகள் அகன்று நன்மைகள் மேலோங்கிவிடும். உலகம் சிறப்புறும். அறிவு என்பது ஆக்கத்திற்குரியது. அறிவுக்குப் பல விளக்கங்கள் கூறப்பட்டாலும் வாழ்வை வளமுடனும் நலமுடனும் நடத்திச் செல்வதே அறிவின் பெருமைக்குக் கட்டியம் கூறுவதாயமையும். தானும் வாழ்ந்து மற்றவர்களையும் நலமுடன் நிம்மதியாக வாழச் செய்யும் பண்பட்ட மனப்பாங்கே நல்லறிவின் பாங்கு. அதுவே உண்மையான அறிவு.
அறிவின் தெய்வமாகப் போற்றப்படும் கலைமகளின் திருவருளால் சிந்தனைத் தெளிவு, சீரியபார்வை அதனால் நல்வாழ்வு கிட்டும் என்பது இந்துக்களாகிய நமது நம்பிக்கை. மனத்திலே தீய நோக்கங்கள் சிந்தனைகள் அகன்று நல்ல சிந்தனைகளும், நோக்கங்களும் சரஸ்வதிதேவியின் திருவருளால் சித்திக்கும். அன்பு, பண்பு, கருணை, ஒழுக்கம், நீதி, நேர்மை, வாய்மை முதலான நற் சிந்தனைகளால், நற்பண்புகளால் நம்மிதயத்திலே கொலுவேற்றிவிட்டால் விரும்பத்தகாத, வேண்டாத சிந்தனைகள் நம் உள்ளத்திலே புகமுடியாது போய்விடும். சிந்தையைச் சுத்தம் செய்யும் பண்பட்ட வழிபாடு சரஸ்வதி வழிபாடாயமைகிறது. முப்பெருந்தேவியருக்கு விரதமிருந்து அவர்கள் தம் ஆசி வேண்டி வழிபடும் ஒன்பது நாட்கள் நிறைவு பெற்றபின் பத்தாம் நாள் விஜயதசமி கைக்கொள்ளப்படுகின்றது. வெற்றித்திருநாளான மேற்படி நன்னாளில் ஏடுதொடங்கல், புதுத் தொழில் தொடங்கல் போன்ற நல்ல நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. அவரவர் தமக்குரிய தொழில்களில் மேன்மையுற இறைசக்தியான அன்னையரை இத்தினத்திலே வழிபட்டு வேண்டுதல் செய்தல் பயன்தரும்.
காலவெள்ளம் அள்ளிவரும் வேதனைகள் யாவும் அகன்று நீடித்த, நிம்மதியான பெருவாழ்வு சகலருக்கும் கிட்ட வேண்டுமென்று முப்பெருந்தேவியரின் திருவருள் கிட்டும் என்று நம்பிக்கையுடன் எதிர்காலத்தை துணிவுடன் எதிர்கொள்வோம். வெற்றி நிச்சயம் என்று நம்புவோம். நலன் பெறுவோம்.
No comments:
Post a Comment