மென்மைதான் நிலைக்கும்
புகழ்பெற்ற தத்துவ ஞானியான லாவோட்சே ஒருமுறை நோய்வாய்ப்பட்டிருந்த தம் குரு நாதரைக் காணச் சென்றார். குருநாதரின் அருகில் பணிவுடன் அமர்ந்தார். இறுதியாக ஓர் உபதேசம் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
சீடரை பரிவுடன் பார்த்த குருநாதர் தம் வாயைத் திறந்து காட்டி உள்ளே நாக்கு இருக்கிறதா ? எனக் கேட்டார்.
"இருக்கிறது ஐயா "பதிலளித்தார் லாவோட்சே.
"பல்?"
"இல்லை"
"காரணம் சொல்ல முடியுமா?"
குருநாதரின் அந்த கேள்விக்கு லாவோட்சே பதிலளித்தார்,
ஐயா நாக்கு மென்மையானது.எனவே கடைசி வரை இருக்கிறது. ஆனால் பற்கள் கடினமானவை எனவே விழுந்து விட்டன போலும்!
இதை கேட்டதும் குருநாதரின் முகம் மலர்ந்தது. "மிகவும் சரி நீ உலகத்தை புரிந்து கொண்டு விட்டாய். இனி எனது உபதேசம் உனக்கு தேவை இல்லை போய் வா என்று விடை கொடுத்து அனுப்பி வைத்தார்.
knr
knr
--
If God brings you to it, He will bring you through it.
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God
No comments:
Post a Comment