சுவேதகி என்ற மன்னன் ஒரு பெரிய யாகம் செய்தான் அது ஒரு விசேஷமான யாகம் ,அதாவது தொடர்ந்து பன்னிரண்டு வருடங்கள் அக்னியை வளர்த்து ஸ்வாஹா "ஸ்வாஹா" என்று நெய்யை
வார்த்து மந்திரங்கள் சொல்லி நடத்துவது அக்னி பகவானும் கொடுத்த நெய்யெல்லாம் திருப்தியாக
சாப்பிட ஜீரணமாகாமல் வயிற்றுவலியும் வந்தது
அதைத்தீர்க்க அக்னி பகவான் பிரும்மாவிடம் போனார்
பிரும்மாவே யாகத்தில் இட்ட நெய்யெல்லாம் முழுங்கிய பலனாக வயிற்றுவலியில் துடிக்கிறேன்
ஆனால் பசி பசி சென்று எதாவது தின்னவேண்டும் போல் இருக்கிறது இந்தக்கோரப்பசிக்கு என்ன செய்வது?
தாங்கள் தான் எதாவது வழிச்செய்து என்னைக்காக்க வேண்டும் "
"அக்னிதேவா நீ நேரே காண்டவ வனத்திற்கு சென்று அங்கிருக்கும் காட்டை அழித்துத்தின்றுக்கொள்
ஆனால் அந்தக்காண்டவ வனம் எங்கு இருக்கிறது என்று எனக்குத்தெரியாது "
"மிக்க நன்றி பிரமம தேவா நானாகவேஅந்தக்காட்டைத் தேடிக் கொள்கிறேன் "என்று பதிலளித்து
அக்னிதேவன் காட்டைத்தேடி வந்தார்.
அங்கு யமுனை ஆறு ஓடிக்கொண்டிருந்தது அதன் அருகில் இந்தக்காடும் இருந்தது
மனம் மகிழ காட்டுப்பக்கம் ஓடி எல்லாம்விழுங்க ஆரம்பித்தவுடன் இந்திரன் இதைத்தடுத்தான்,
இடி இடிக்க ஆரம்பித்தது மழை ஜோ என்றுக்கொட்டி அக்னிபகவானுக்கு இடைஞ்சல் கொடுத்தது
ஏனென்றால் காட்டை அழித்தால் அதனால் இயற்கையில் பல சேதங்கள் உண்டாகிவிடும்
அக்னி பகவான் பலதடவை முயன்றும் தோல்விதான் . என்ன செய்யலாம் என்று அவர் யோசித்து
பின் ஒரு வயதான பிராம்மண்ரைப்போல் வேஷம் தரித்தார்
யமுனை ஆறில் அடிக்கடி கிருஷணரும் அர்சுனனும் வருவது வழக்கம்,அவர்களைக்கண்டவுடன்
அவரிடம் சென்று "ரொம்ப பசியாக இருக்கிறேன் எதாவதுகொடுங்கள்" என்று யாசித்தார் .
அந்த மாயக்கண்ணனுக்கா இவர் யாரென்று தெரியாது ! அக்னிபகவான் என அறிந்துக்கொண்டார்
ஆனாலும் பசியென்று வந்தவருக்கு எதாவது கொடுக்கவேண்டுமென்பதால்
"அந்தணரே நீங்கள் யாரென்று எனக்குத்தெரிந்துவிட்டது உங்கள் பசி அடங்க நான் வழிசெய்கிறேன் "
என்றார்
அந்தணர் அக்னியாக மாறினார் பின் கிருஷண்ரிடம் "கண்ணா காண்டவ வனம்தான் என் பசியைத்தீர்க்கும் அங்கு என் பசியாற முயன்றேன் ஆனால் இந்திரன் மழைப்பெய்து என்னைத்தடுத்து
விடுகிறார் என்ன செய்வது?'
"அக்னிதேவனே உன் பசியை நான் தீர்க்கிறேன் பெரும்மழைப்பெய்தாலும் உன்னை ஒன்றும் செய்யாமல்
நான் பார்த்துக்கொள்கிறேன் ஆனால் இந்த நிலைமை ஒரு இருபத்தோரு நாட்கள் தான் நீடித்திருக்கும்
இந்த அவகாசத்திற்குள் உன் பசியை எத்தனைத்தீர்த்துக்கொள்ளமுடியுமோ அத்தனையும் தீர்த்துக்கொள்"
என்றார் கண்ணன்
பின் அர்சுனனைப்பார்த்தார் ,அர்சுனன இதைப்புரிந்துக்கொண்டு சரம் சரமாக ஆகாயத்தை நோக்கி
அம்பு எய்தான்
ஒரு பெரிய சுவர் போல் அம்புகள் கூரையாகி நின்றன
அவ்வளவுதான் மகிழ்ச்சியுடன் அக்னிதேவன் நாக்கைசுழற்றிச்சுழற்றி பசியாற்றிக்கொண்டான்
இந்திரன் மழைக்கொட்டியும் பலனில்லை அக்னிபகவான் மேல் ஒரு துளி நீர்க்கூடப்படவில்லை
முதல் வாரம் அக்னியின் உஷ்ணம் இலேசாகப்பரவியது இரண்டாவது வாரம் அக்னிபகவான் காட்டை
உண்டார் அப்போது உஷணம் ரொம்ப கடுமையானது மூன்றாவது வாரம் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக
குறைய ஆரம்பித்தது
இந்த 21 நாட்கள்தான் சித்திரைமாதம் பின் வரும் அக்னிநக்ஷ்த்திரம் என்று சொல்கிறோம் இதை கத்திரிவெயில் என்றும் சொல்கிறோம்
காட்டை அழிக்க அழிக்க பின் இயற்கைக்குமுரணாக வீடுகளாகக்கட்ட அக்னி ந்அக்ஷ்த்திரத்தின் வெப்பம்
மிகக்கடுமையாகத்தான் இருக்கும்
பசுமையை வளர்ப்போம் காடுகளைக்காப்போம்

knr
--
If God brings you to it, He will bring you through it.
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

No comments:
Post a Comment