Wednesday, April 30, 2025

I love you from wife- SMS - joke

ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக
"I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார்.
🦚
ஒரு பெண்... இன்று என்று கூறினாள்
அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினார்.ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள்.
🦚
நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார்.
🦚
ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள்.
🦚
மெசேஜ்க்கு வந்த பதில்கள்
நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ??

நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா??

நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா??

நபர் 4 : என்ன பிரச்சனை உனக்கு??

நபர் 5 : நீ கனவு கண்டுட்டு இருக்கியா இல்லை நான் கனவு காண்கிறேனா??
🦚
நபர் 6 : இன்னைக்கு போன கல்யாணத்துல உன் பிரண்டு போட்ட நகை டிசைன் எதாவது உனக்கு ரொம்ப பிடிச்சு, வாங்க பிளான் போட்டுருக்கியா ??
🦚
நபர் 7 : நான் ஏற்கனவே ஆபிசில் பல டென்சன்ல இருக்கேன், இதுல நீ வேற..

நபர் 8 : என் காரை எடுத்துட்டு போய் மறுபடியும் எங்கயாவது முட்ட வச்சுட்டியா??
🦚
நபர் 9 : இந்த சீரியல்கள் பார்க்கதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட??
🦚
நபர் 10 : குழந்தைகளை பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணுமா???
🦚
கடைசியாக பரிசு பெற்ற பெண்ணுக்கு வந்த பதில் மெசேஜ்..
🦚
நபர் 11 : யார் இது? என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது?


😂😂😁😁🌹🌹

Akshaya thruteeyai

அட்சய திரிதியை...
புண்ணிய தினம்..
(30.04.25 புதன்கிழமை)

1. பரசுராமர் அவதரித்த திருநாள்

2. கங்கை நதி இவ்வுலகிற்கு வந்த திருநாள்

3. பக்தன் சுதாமர் துவாரகாவில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இல்லத்திற்கு சென்ற நாள்.

4. பாண்டவர்கள் சூரியதேவனிடம் இருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்,

5. வியாச தேவரால் மஹாபாரதம் இன்று தான் எழுதப்பட்டது.

6. திரேதாயுகம் தொடங்கிய நாள்.

7. "கனகதாரா ஸ்தோத்ரம்" ஆதிசங்கராச்சாரியாரால் இன்று இயற்றப்பட்டது.

8. குபேரருக்கு இன்று செல்வத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது, 

9. அன்னபூரணிதேவி தோன்றிய நாளாகக் கருதப்படுகிறது.

10. இந்நன்னாளில் ரதயாத்திரைக்கான ரதம் செய்யும் பணி தொடங்கும்.

11. கீர்ஷோர் கோபிநாத் (ரெமுன, ஒரிஸா), மதன மோகன், கோவிந்தா மற்றும் கோபிநாத் விக்ரகங்களுக்கு சந்தன் யாத்திரை தொடங்கும் நாள்.

12. பார்லி தோன்றிய நாள் (யாகத்திற்கு உபயோகப்படுத்தும் பொருள்)

13. பத்திரிநாத்திலுள்ள கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில் குளிர் காலங்களில் நடையடைத்து அட்சய திரிதியை சுபதினத்தில் மீண்டும் பக்தர்கள் தரிசிப்பதற்காக கோவில் நடை திறக்கபடும்.

ஹரே கிருஷ்ண ஹரே 
கிருஷ்ண கிருஷ்ண 
கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம 
ராம ராம ஹரே ஹரே...

Learning and teaching - sanskrit poem

Courtesy : Sri. Ananta Kalyana krishnan

पठितारः पाठयितारोपि स्युः। पाठनरहितपठनं मरुसैकते सिक्तम् जलमिव।
 ये पठितारः पाठयितारोपि ते भवेयुर्वन्द्यपण्डिताः।
ये न पाठयितारः ते भवेयुर्वन्ध्यपण्डिताः।

Gayatri avahana mantra meaning

==================
Gayatri Mahatmya ~ as described in Taittiriya Shakha (part 3)
==================
In the previous posts, we saw that Brihad-Yogi Yajnavalkya Smriti describes the Dhyana of Gayatri Devi during Sandhyavandanam and instructs that her Avahana be done with the Ojosi mantra, which was once perceived by the Devas longing for Gayatri Devi's vision. After the Avahana, one must perform Gayatri Japa and then do the Visarjana of Devi.

आवाह्य यजुषानेन ओजोऽसीति विधानतः ।
एतद्यजुः पुरा दृष्टं देवैर्दर्शनकाङ्क्षिभिः ॥

तत्रावाह्य जपित्वा तु नमस्कृत्य विसर्जयेत् ॥

~ Brihad-Yogi Yajnavalkya Smriti, 4.29

We have already noted that the incident of the Devas invoking Gayatri with the Ojosi mantra can be traced to an Akhyanika in the Taittiriya Samhita. In this post, along with the Ojosi mantra, we shall examine another Avahana mantra and a Visarjana mantra from the Taittiriya Aranyaka. To our great fortune, Sayanacharya has provided interesting insights in his Taittiriya Aranyaka commentary. The relevant mantras from the Aranyaka along with excerpts from his Bhashya have been attached in the comments. Below is a brief summary of the same.

Avahana Mantra

आया॑तु॒ वर॑दा दे॒वी॒ अ॒क्षरं॑ ब्रह्म॒ सम्मि॑तम् । गा॒य॒त्रीं᳚ छन्द॑सां मा॒तेदं ब्र॑ह्म जु॒षस्व॑ नः ।
ओजो॑ऽसि॒ सहो॑ऽसि॒ बल॑मसि॒ भ्राजो॑ऽसि दे॒वानां॒ धाम॒नामा॑ऽसि॒ विश्व॑मसि वि॒श्वायु॒स्सर्व॑मसि स॒र्वायुरभिभूरों गायत्रीमावा॑हया॒मि॒ ॥

~ Taittiriya Aranyaka, 10.26

Commenting on the first line, Sayanacharya states that Devi Gayatri is the Adhishthatri of Chandas and has the Chandas as her Upadhi. She is called Varada as she bestows the desired boons. She is invoked during Sandhyavandanam to bless us with the knowledge of the immutable, Vedanta-Pratipadya Brahman.

She is Chandasam Mata, the mother of Gayatri, Trishtubh, and other meters. Since Chandas also means Veda, she is the mother of all Vedas.

Following this, Sayanacharya comments on the Ojosi mantra. He explains that Gayatri Devi is Ojas, the eighth Dhatu, responsible for vitality. She is Saha, the power to overcome adversaries. She is Bala, the inherent strength in the body. She is Bhraja, the divine radiance. The glories of Agni and other deities are merely her names, meaning that she is the very basis of their power. Moreover, she is the entire Jagat and the Ayuh of all beings. She is Abhibhuh, the one who destroys all sins.

The commentary on the next line is particularly remarkable. After the Ojosi mantra, Gayatri Devi is invoked as ॐ गायत्रीमावाहयामि. Sayanacharya could have simply overlooked the Pranava or stated that it is a conventional prefix to a mantra. Instead, due to his devotion to the form of Gayatri Devi, he makes a significant remark on the Pranava, saying:

"ॐ प्रणवप्रतिपाद्य परमात्माऽसि। तादृशीं गायत्रीं मदीये मनस्यावाहयामि।"

"You are the Pranava-Pratipadya Paramatman. I invoke such Gayatri Devi in my mind."

From this, we understand that Gayatri Devi invoked during Sandhyavandanam is not merely the Adhishthatri of Chandas but is verily the Parabrahman itself, denoted by Om.

Visarjana Mantra

उ॒त्तमे॑ शिख॑रे जा॒ते॒ भू॒म्यां प॑र्वत॒मूर्ध॑नि ।
ब्रा॒ह्मणे᳚भ्योऽभ्य॑नुज्ञा॒ता॒ ग॒च्छ दे॑वि य॒थासु॑खम् ॥

~ Taittiriya Aranyaka, 10.30

Sayanacharya's commentary explains: "The mountain named Meru, which stands on the earth, has its highest peak, and upon that peak resides Goddess Gayatri. Therefore, O Devi, having granted permission to the Brahmanas and to your devotees, who are fully satisfied by your grace, may you, without diminishing your bliss, return to your own abode at ease."

Thus, in the Taittiriya Aranyaka, we find dedicated Avahana and Visarjana mantras for Gayatri Devi in the context of Sandhyavandan, confirming that she is the Upasya deity of Sandhyavandan. From the words of Sayanacharya, we understand that she is not merely the Adhishthatri of Chandas but is verily the Pranava-Pratipadya Paramatman.

Having examined the scriptural references presented in this discussion, it becomes evident that the Dhyana shloka from the Brihad-Yogi Yajnavalkya Smriti is firmly rooted in Taittiriya Samhita and Taittiriya Aranyaka. This establishes that the worship of Gayatri in the form of supreme goddess is not a later innovation but a practice mandated by the Shruti itself.

It is heartening to see that this ancient tradition of worshipping Bhagavati Gayatri, firmly grounded in Shruti, endorsed by authentic Smritis and Puranas, and diligently preserved by the Smartas, continues to be followed even today.

May Bhagavati Gayatri, the Parabrahman itself, bless us and inspire our intellects to always walk the path of Dharma.

Kanchi kamakoti svasti vachanam


Tuesday, April 29, 2025

How to get out of karma? - Buddha story

Courtesy: Dr. Sri. P. Narayanan

एकदा सिद्धार्थं प्रति तच्छिष्यः कश्चन पप्रच्छ- "विविधैः कर्मभिः संसारपाशैरिव दृढं बद्धानां केन कर्मणा यागेन वा तन्मोचनं जायेत? कमपि ललितमुपायं निर्दिशतु" इति। सिद्धार्थः "तस्योत्तरं श्वो वक्ष्यामि" इत्यवोचत्। अनन्तरे दिने सिद्धार्थः किमपि सूत्रं हस्ते गृह्णानस्तस्मिन् सूत्रे बहुविधान् ग्रन्थीन् रचयंस्तच्छिष्यस्य परत आगत्य पृष्टवान्- "अस्मिन् सूत्रे बहुविधा ग्रन्थय उपर्युपरि संलग्नाः सन्ति। केनापि ग्रन्थ्यन्तरेण इदं सूत्रम् ऋजु करोतु। अन्यथा कोपि नूतनः सरल उपायोस्मिन् क्रियेत, येन ग्रन्थय इमे विग्रथिताः सम्पद्येरन्" इति। शिष्योवोचत् - न ग्रन्थिना सरलेनोपायान्तरेण वा विग्रथनं शक्येत, किन्तु कथमिमे ग्रथिता इत्येकैकं ग्रन्थिं परिशील्य क्रमेण तेषां विश्लेषणं कर्तुं यतेय" इति। सिद्धार्थ उवाच - "इदमेव समाधानं तवापि प्रश्नस्य" इति॥
एवमेव यत्र यत्र दोषः सूच्यते दृश्यते वा तत्र तत्र कस्तत्र दोष इति स्वबुद्ध्या परिशील्य, तज्ज्ञान् वा सम्पृच्छ्य तं तं दोषं परिहरतु। बहूनि शिबिराणि भवत्या चालितानि स्युः। किन्तु न केवलं सङ्ख्या, गुणोपि गणनीयः। सरलस्य सुसंस्कृतस्य पाठनमेव संस्कृतभारत्यापि संगण्यते। सुसंस्कृतशिक्षणोपायाश्च तया संस्थया बहुधा उपस्थाप्यन्त इति बोधितोस्मि। अ.क.कृ.महोदयेनोक्तानुपायानपि परिशीलयतु। भवतु भद्रम्। जयतु सुसंस्कृतम्।
(इतोपि बहु वक्तव्यमस्ति। किन्तु समयाभावादुपरमामि।)

Things to avoid in marriage

Banurekha Sreenivasan- Tanjore Brahmins அவர்களது பதிவு.
விவாகத்தில் தவிர்க்க வேண்டியவை-(1966இல் பரமாச்சார்யாள் உத்தரவு)

1. மாப்பிள்ளை அழைப்பு: முன் காலத்தில் மாப்பிள்ளை வெளியூரிலிருந்து வரும்போது ஊரின் எல்லையில் சென்று மேளத்தாளத்துடன் குதூகலமாக அழைத்துவருவது வழக்கம் தற்போது முதல் நாள் அன்றே மாப்பிள்ளை சத்திரத்திற்கு வந்துவிடுகிறார். தங்கி டிபன் முதலியன சாப்பிட்டு இளைப்பாறுகிறார். பிறகு இரவு (ஏற்கனவே வந்துவிட்ட வரை) வெளியில் அனுப்பி, ஓரிடத்திலிருந்து அழைப்பது அர்த்தமற்றது. இது சத்தியத்திற்குப் புறம்பானது. தவிர்க்கப்பட வேண்டும்.

2. காசியாத்திரை: முன் காலத்தில் பிரம்மச்சாரிகள் காசிக்குப் படிக்கச் செல்வார்கள். வழியில் பெண் வீட்டார். தங்கள் பெண்ணை ஏற்றுக்கொண்டு கிரஹஸ்தாஸ்ரமம் நடத்தச் சொல்வார்கள். சரி என்று பையனும் சம்மதித்துத் திரும்புகிறான். இதுதான் தற்போது நடக்கிறது. ஆனால் முதல் நாளே நிச்சயதார்த்தம் செய்து லக்னப் பத்திரிகை படித்து ஏற்பாடாகிறது. பிறகு காசிக்குப் போவது முரண்பாடான ஏற்பாடு தவிர்க்க வேண்டும் (நம்பிக்கை மோசடி என்றுகூடச் சொல்லலாம்)

3. ஊஞ்சல்: சாஸ்திரப்படி கல்யாணம் ஆனபிறகு தம்பதிகளாய்ச் சேர்ந்த பிறகுதான் அவர்களை ஊஞ்சலில் வைத்துக்கொண்டாட வேண்டும். பகவான் கல்யாண உற்சவங்களில் விவாஹம் ஆன பிறகுதான் திவ்ய தம்பதிகளை ஊஞ்சலில் வைத்து பூஜிக்கிறோம். கல்யாணத்திற்கு முன்னால் தம்பதிகளைச் சேர்த்துவைப்பது நல்லது இல்லை. ஏதாவது ஏற்பட்டு விவாஹம் தடைபட்டால் அவர்கள் வாழ்வு பாதிக்கப்படும்.

4. பாணிக்ரஹணம்: சுபமுகூர்த்தம் வைத்து நல்ல லக்னத்தில் மாப்பிள்ளை பெண்ணின் கரத்தை க்ரஹிக்க வேண்டும். இப்பொழுது முதலிலேயே (ஊஞ்சல் பிறகு) கையைப் பிடித்து அழைத்து மணமேடைக்கு வருகிறார்கள். கைப் பிடிக்கும் வேளை ராகு காலம் எமகண்டமாய் இருக்கலாம். சுப லக்னத்தில்தான் கைப் பிடிக்க வேண்டும்.

5. கைகுலுக்குதல்: மாப்பிள்ளை பெண் இருவரும் விரதம் செய்து, கையில் ரக்ஷா பந்தனம் செய்துகொள்கிறார்கள். கைகள் புனிதமாகி இருவரும் விவாதச் சடங்குகள். ஹோமம், சப்தபதி முதலியன செய்யத் தகுதி அடைகின்றன. இந்தப் புனிதத்வத்தைக் கெடுத்து எல்லாரும் வந்து பெண், மாப்பிள்ளை இருவரும் சடங்குகள் முடியும் முன் கைகுலுக்குகிறார்கள். கைகள் சுத்தம் இழக்கின்றன. ஆகையால் விவாஹச் சடங்கு, சப்தபதி முடியும் முன் யாரும் தம்பதிகளைக் கை குலுக்கக் கூடாது. இதைப் பத்திரிகைகளில் (NB) என்று போட்டுக் குறிப்பிட்டுவிட்டால். விவாஹத்திற்கு வருபவர்கள் தக்கபடி நடந்துகொள்வார்கள்.

6. பட்டுப்புடவை: விவாஹம் செய்யும்போது பாவம் சேரக் கூடாது. ஆயிரக்கணக்கான பூச்சிகளைக் கொன்று பட்டு இழை எடுக்கிறார்கள். ஆகையால் பாவம் சேர்ந்த இந்த பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டால் விவாஹம் பாவத்திற்கு உட்படுகிறது. தம்பதிகள் க்ஷேமத்திற்கு உதந்ததல்ல இதற்காகத்தான் பரமாச்சார்யாள் இதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். அஹிம்ஸா பட்டு உடுக்கலாம்.

7. விவாஹப் பணம் (Dowry): மாப்பிள்ளை வீட்டார் எதிர் ஜாமின் வகையறா வாங்குவது சாஸ்திர விரோதம். மேலும் விரதங்களை தங்கள் வீட்டில் செய்துகொண்டுதான் கல்யாணத்திற்கு வர வேண்டும். அவர்கள் பொறுப்பு. இப்படிச் செய்தால் சத்திரத்திற்கு காலையில் வந்தால் போதும். நேரே விவாஹம் மந்தர பூர்வமான சடங்குகளைப் பிரதானமாகச் செய்யலாம். நிறைய வேத வித்துகளுக்கு தக்ஷிணைக் கொடுத்து அக்னி சாக்ஷியான விவாகத்தைச் சிறப்பாக நடத்தலாம். சிலவும் குறையும். நகை ஆடம்பரம் தவிர்த்து ஒருவேளை ஆகாரத்துடன் முடித்து மிச்சமாகும் பணத்தை ஒரு ஏழைக் குடும்ப கல்யாணத்திற்கு உதவலாம் அல்லது சேமிக்கலாம்.

8. வரவேற்பு: முதல் நாள் வரவேற்பு கொடுப்பது தவறு. தம்பதிகளாகச் சேரும் முன் இருவரையும் ஒன்றாய் உட்காரவைப்பது தவறு. நமது கலாசாரத்திற்கு முரண்பட்டது. கோவில்களில் கல்யாணம் செய்தால் வரவேற்பு ஏதாவது சத்திரத்தில் காலியாயிருக்கும் தினத்தில் (கிழமை பார்க்க வேண்டாம்) செய்யலாம். சிலவு குறையும்.

9. திருமங்கல்ய தாரணம்: விவாகம் என்பது திருமங்கல்ய தாரணம் மட்டும் அல்ல. வேத பூர்வமான மந்த்ரம் திருமங்கல்ய தாரணத்திற்கு இல்லை. ஸ்லோகம்தான். மந்த்ர பூர்வமான விவாகம்தான் முக்கியம் உதாரணமாக 9-10:30 முகூர்த்தம் என்றால் 10:30க்குள் திருமங்கல்ய தாரணம் செய்துவிடுகிறார்கள். எல்லாரும் எழுந்து போய்விடுகிறார்கள். உண்மையான விவாகச் சடங்குகள் பிறகுதான் நடக்கின்றன. சாட்சிக்கு யாரும் இருப்பதில்லை. மேலும் முகூர்த்த காலத்திற்குப் பின் ராகுகாலம், எம கண்டம் இருக்கலாம். ஆகையால் எல்லாம் சப்தபதி உள்பட முகூர்த்த காலத்திற்குள் முடித்துவிட வேண்டும். சுபகாலத்தில் தான் சடங்குகள் செய்ய வேண்டும். அப்போதுதான் தம்பதிகளுக்கு க்ஷேமம் உண்டாகும்.

10. கூரைப்புடவை: மாயவரத்திற்கு அருகில் கொறை நாடு என்ற ஊரில்தான் முகூர்த்தப் புடவை செய்வது வழக்கம். கொறை நாடு புடவை என்பதைக் கூரப்புடவை என்கிறோம். நூலில் சிவப்புக் கட்டம் போட்டு அழகாக நெய்வார்கள். உண்மையான கூரப்புடவை என்றால் நூல் புடவை என்று அர்த்தம். நாம் தற்போது பணவசதியால் பெருமைக்கு ஆசைப்பட்டுப் பட்டு ஜரிகையை, ஆயிரக்கணக்கில் செலவு செய்து பாவத்தைத் தேடிக்கொள்கிறோம்.
NB: 1966இல் பரமாச்சார்யாள் உத்தரவு: ?
 என் நிபந்தனைகளுக்கு
உட்படாமல் செய்யப்படும் விவாஹப்
பத்திரிகைகளில் என் பெயரைப் போடுவது
தவிர்க்கப்பட வேண்டும்.

Monday, April 28, 2025

Greatness of the Life and Teachings of Shankara Bhagavatpada

Namaste.


A four–part article based on the discourse on 'The Greatness of the Life and Teachings of Shankara Bhagavatpada' by His Holiness Sri Abhinava Vidyatirtha Mahaswamigal, the 35th Jagadguru of the Sringeri Peetham is available in the following URLs:






nama: shankarāya

What happens in Srirangam temple kitchen?

                     
(தகவல் உபயம்:- 
திரு. Srivatsan Iyengar அவர்கள்..)

 🌺 பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் கோயிலில் #அரங்கனின்_மடப்பள்ளியை எட்டிப் பார்க்கலாம் என்கிற எண்ணம் வந்தது..

🍂 இராஜ மகேந்திரன் திருச்சுற்று மதிலுக்கு வெளியே பிராகாரத்தின் கிழக்குப் பகுதியில் #தென்கிழக்கு_மூலையில் அமையப் பெற்றுள்ளது ஸ்ரீரங்கம் கோயிலின் மடப்பள்ளி.. 

வைகுண்ட நாதனான பெருமாளுக்கும், 
வையகத்து நாயகியான தாயாருக்கும், 
#ஆறுகாலபூஜைக்கும்_இங்கிருந்து_தான்_நைவேத்ய_பிரசாத_அன்னங்கள் தயாரித்து அனுப்பி வைக்கப்படுகின்றன.. 

திருக்கோயில் மடப்பள்ளிக்குள் புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை. 

🍂அதனால் என்ன? பூஜிக்கப்பட்ட நைவேத்ய அன்னங்களைப் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றியது.. 

⭕அரங்கனின் மடப்பள்ளி மகத்துவத்தை, பூஜிக்கப்பட்ட நைவேத்ய அன்னங்களே பறை சாற்றி விடும் அல்லவா?

🍁காலை 8.45 மணிக்கு திருவாரதனம்.. 
அப்பொழுது நைவேத்யமாக, #கோதுமைரொட்டி படைக்கப்படுகிறது.. 

⭕பெருமாளுக்கு பதினொன்று, தாயாருக்கு ஆறு.. 

ரொட்டியின் செய்நேர்த்தியை பற்றி விளக்குகிறார் கோயிலில் இருபத்தைந்து ஆண்டுகளாக மடப்பள்ளி நாச்சியார் பரிகலமாகப் பணியாற்றி வரும் திரு.ரெங்கன் அவர்கள்..

வெல்லத்தை நைசாகத் தேய்த்து இழைக்கணும்..
அந்த ஈரப்பதத்தோட கோதுமை மாவு போட்டு நன்கு பிசையணும்.. 

வெல்லமும் மாவும் இரண்டறக் கலந்ததும் உருண்டைகளாகப் பிடிச்சு கையில தட்டணும்.. 

அதனை நெய்யில் போட்டு பொரித்து எடுக்கணும்.. 

இப்பொழுது பெருமாள், தாயாருக்கான ரொட்டி ரெடி.. 

#காய்ச்சாத_பசும்பால்_இரண்டு_லிட்டர்.. 
மண் ஓட்டில் வெண்ணெய், உப்பு போட்டு #வேகவைத்த_பாசிப்பருப்பு..

🍁அடுத்து தொடர்ந்தாற்போல வந்து விடுவது பொங்கல் பூஜை.. 

🍁காலை ஒன்பது மணிக்கு, மிளகு, சீரகம் இடாமல் பாசிப்பருப்பு, பச்சரிசி மட்டும் உபயோகித்து #வெண்பொங்கல்.. 

🍁இதற்குத் தொட்டுக் கொள்ள, கத்தரிக்காய் அல்லது வாழைக்காய் அல்லது வெள்ளைப் பூசணி வெட்டிப் போட்டு தினமும் ஒரு வகை %#காய்கறியமுது. 

#பச்சரிசிஉளுந்துமாவு_தோசை.. 

🌿பெருமாளின் வைத்தியரான தன்வந்திரி தயாரித்து அளிப்பதான ஜீரண மருந்து... இது சுக்கு, வெல்லம், சீரகம், ஏலக்காய்ப் போட்டு இடிச்சு அரைத்த மருந்தாகும்..

மதியம் 12.30 முதல் 1.30 வரை உச்சி கால பூஜை.. இதற்குப் பெரிய அவசரம் என்று பெயர். 

#பெரியஅவசரம்:- 

அதிரசம் பதினொன்று. 

பதினெட்டு படி தளிகை (வெறும் சாதம்), 

பாசிப்பருப்பு #கறியமுது. 

தக்காளி சேர்க்காமல் புளி, மிளகு, சீரகம், இட்ட ரசம்.. இதற்கு #சாத்தமுது என்று பெயர்.. 

அரிசி, பாசிப்பருப்பு, பால், வெல்லம் இட்ட பாயசம். இதற்கு #கண்ணமுது என்று பெயர்.

மாலை ஆறிலிருந்து ஏழு... 

#க்ஷீராண்ணம்_பூஜை. 

உளுந்து வடை பெரியது பதினொன்று. 

பெரிய அப்பம் ஆறு. 

பெரிய தேன் குழல் எனப்படும் அரிசி முறுக்கு ஆறு. 

பால், பச்சரிசி, வெல்லம் இட்ட பால் பொங்கல் இது அரை இனிப்பாக இருக்கும். 

இவற்றில் தாயாருக்கு மட்டும் கூடுதலாக வெல்லம் இட்ட பச்சரிசிப் புட்டு.. 

இரவு ஒன்பது முப்பது மணிக்கு செலவு சம்பா. எட்டுப்படி வடிசல் சாதம், பாசிப் பருப்பு என்று முடித்தார் ரெங்கன்.

காலை முதல் இரவு அரவணை வரைக்குமாக பெருமாளுக்கும் தாயாருக்கும் வைத்து பண்ணப்படும் நைவேத்ய அன்னங்கள் யாவுமே, உடனே #ஸ்ரீபண்டாரம் வந்து சேர்ந்து விடும்.. 

🍁பக்தர்களுக்கும் பெருமாள் நைவேத்ய பிரசாதம் போலவே பல அன்னங்களும் பணியாரங்களும் மிகவும் செய்நேர்த்தியுடன் ஆத்மார்த்தமாகத் தயாரிக்கப்பட்டு திருக்கோயில் பிரசாத ஸ்டால்களில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது!.." என்கிறார் பணியாளர்களில் ஒருவரான மாதவன்.

இரவு பத்து மணிக்குப் பெருமாளுக்கு #அரவணை_பூஜை. 

ஆறுகால பூஜை வேளை நைவேத்யங்களிலேயே இரவு அரவணை தான் மிகவும் ஹைலைட்.. 

🌿அதனைப் பெற்றுக் கொள்ள இரவு பதினோரு மணியளவில் கூட, கோயிலின் ஸ்ரீ பண்டாரம் மண்டபத்தில் பக்தர்களின் பெருங்கூட்டம் சேர்ந்து விடும்.. 

இரண்டரை படி பச்சரிசி, ஏராளமான நெய், ஏலக்காய், வெல்லம் இட்டு #அரவணைப்_பொங்கல். 

குங்குமப்பூ, ஏலக்காய் வெல்லம் இட்டு #சுண்டக்_காய்ச்சிய_பசும்பால். (காலையில் காய்ச்சாத பால். இரவு காய்ச்சிய பால்) 

🌿இதில் தாயாருக்கு மட்டும் ஸ்பெஷலாக அரவணைப் பொங்கலுடன், மிளகுக் குழம்பு (#உப்புச்சாறு_என்பார்கள்) நெய் விட்டு வேகவைத்த முளைக்கீரை அமுது செய்யப்படும்..

இரவு ஒன்பதரை மணிக்கு மேலாகத் தாயாருடைய அரவணை ப்ரஸாதம், பக்தர்களுக்காக
ஸ்ரீ பண்டாரம் வந்து சேரும்.. 

அடுத்து இரவு பத்தரை மணிக்கு மேலாக அரங்கனின் #அரவணைப்ரஸாதம் பக்தர்களுக்காக ஸ்ரீ பண்டாரம் வந்து சேரும்.. 

பிறகென்ன?..
போட்டி போட்டு பக்தர்கள் பெற்றுச் செல்வார்கள்.
அதன் ருசியே தனி. 
பூலோக வைகுண்டத்தின் இனிய அமுது தான் #அரங்கனின்_அரவணை.

திருக்கோயில் மடப்பள்ளியில் மண்பாண்டங்கள் தான் சமையல் பாத்திரங்கள். 
மர விறகுகள் தான் அடுப்பில் எரிபொருளாகப் பயன்படுத்தப் படுகின்றன..  

எத்தனையோ நவீனங்கள் வந்து விட்டாலும், மடப்பள்ளிக்குள் புராதன நடைமுறைகளே கடைபிடிக்கப்பட்டு வருகின்றன..

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு காலை ஒன்பது முதல் இரவு ஒன்பது மணி வரை தினசரி #அன்னதானம் செய்யப்படுகிறது..

சராசரியாக ஒரு நாளைக்கு மூவாயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது.. 
அதற்கான 
மடப்பள்ளியோ அதி சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது..🙏🌹

🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂

Why Guru? - HH Bharati teertha mahaswamigal

*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்*

இந்த குரு சிஷ்யன் என்கிற சம்பிரதாயம் அனாதி காலமாக வந்திருக்கிறது. முதல் குரு பகவான் ஸ்ரீ 
தக்ஷிணாமூர்த்தி. அவர் நாராயணனுக்கு உபதேசம் செய்தார். அவர் பிரஹ்மாவிற்கு செய்தார். அவர் வசிஷ்டருக்கு செய்தார். அவர் சக்திக்கு செய்தார். அவர் பராசரருக்கு செய்தார். அவர் வேத வியாஸருக்கு.. என்றபடி ஒரு குரு சிஷ்ய பரம்பரை (இருந்து வந்தது) . இந்த பரம்பரையில் இருக்கின்ற விசேஷம் என்னவென்றால் சிஷ்யனுக்கு குருவின் விஷயத்திலே அசாதாரணமான பக்தியும், குருவிற்கு சிஷ்யன் விஷயத்திலே அசாதாரணமான அன்பும் இருக்கும். ஆதிசங்கர பகவத்பாதர் ஸாக்ஷாத் பரமசிவ அவதாரம் என்று எல்லோருக்கும் தெரியும். அவரும் கூட கோவிந்த பகவத்பாதர் சன்னிதியை அடைந்து அவரிடம் பயின்று வேதாந்த தத்வ ஞானத்தை அடைந்தார் என்கிறது சங்கர திக்விஜயம். சிலருக்கு ஒரு கேள்வி! "ஆதிசங்கரர் பகவான் பரமேஸ்வரரின் அவதாரம் என்கிறீர்களே, அவருக்கும் குருவிடம் போகவேண்டி இருந்ததா? அவர் தெரியாமல் போனாரா; தெரிந்தே போனாரா? அல்லது அவர் கோவிந்த பகவத்பாதரை பரீக்ஷிக்க போனாரா? அவர் கோவிந்த பகவத்பாதரை பரீக்ஷிப்பதற்காக போகவில்லை. ரொம்ப விநயத்துடன்தான் போனார். அப்போது, தெரியாமல் போனாரா, தெரிந்தே போனாரா என்று கேட்டால், "தெரியுமோ தெரியாதோ, குருவிடம் இருந்து வந்ததால்தான் அதற்கு ஒரு மதிப்பு! ராமர் வசிஷ்டரின் சன்னிதியில் தத்துவத்தை கிரஹித்துக் கொண்டார் என்று ராமாயணம் சொல்கிறது. ராமர் சாக்ஷாத் பரமாத்மாவின் அவதாரம் அல்லவா? அவருக்கு வஸிஷ்டர்  சொல்ல வேண்டி இருந்ததா? கிருஷ்ண பரமாத்மா ஸந்தீபனி  மஹரிஷியிடமிருந்து வித்தைகளை கிரஹித்துக் கொண்டார் என்று பாகவதம் சொல்கிறது. கிருஷ்ண பரமாத்மாவும் ஸந்தீபனி  மஹரிஷியிடம் பாடம் கற்றுக் கொள்வதற்காக செல்ல வேண்டுமா என்று கேட்டால் அது ஒரு சம்பிரதாயம். குருவினால் உபதேசிக்கப்பட்ட ஞானம்தான் பிரயோஜனத்திற்கு வரும், ஸபலமாகும் என்று உபநிஷத் கூறுகிறது. குரு உபதேசம் இல்லாது வந்திருக்கக்கூடிய ஞானம் ஸபலமாகாது. "அங்கு என்ன வித்தியாசம்? குரு சொன்னால் என்ன? சொல்லாவிட்டால் என்ன?" என்று கேட்டால் வித்தியாசம் வெளியில் பார்ப்பதற்கு ஒன்றும் இருக்காது. உள்ளார்ந்த ஒரு வித்தியாசம் இருக்கும்.

Sunday, April 27, 2025

Science and religion

சிறுவயதில் கடவுள் மறுப்பு கேள்விகளை நான் என் அப்பாவிடம் கேட்டிருக்கிறேன். - - #சுஜாதா

எப்படி ட்விஸ்ட் செய்து மடக்கிக் கேட்டாலும் அவர் கூறும் பதில், "வயசானா உனக்கே #புரியும். 

புரியும்போது ...
கேள்விகள் அப்படியே இருக்கும், ஆனால் உனக்குப் பதில் கிடைத்திருக்கும்.!" 

இந்தப் பதில் இன்னும் குழப்பும்.  

அப்பா....
 பதில் கூற முடியாமல் ஏதோ சால்ஜாப்பு செய்கிறார் என்று தோன்றும். 

"நீ ஏதோ டபாய்க்கிற.!" என்பேன்.

"நீ #சயன்ஸ் படிக்கிற, 
அதனால் இதை எல்லாம் கேட்கிற. 
நானும் பிஸிக்ஸ் ஸ்டூடண்ட் தான்", என்பார். 

அப்பாவுடன் கோயிலுக்குச் செல்லும்போது நல்ல படிப்பு வர வேண்டும், 
மார்க் நிறைய வர வேண்டும் என்று எல்லாம் வேண்டிக்கொள்ளச் சொல்லமாட்டார், 

அவர் வேண்டிக்கொள்ளச் சொல்லுவது,  "நிறைய #அறிவு கொடு என்று வேண்டிக்கோ", என்பார்.  

இவை எல்லாம் ....
எனக்குப் புரிந்ததே கிடையாது. 

சின்ன வயதில் 
அவர் சொன்னது ...

சில வருடங்கள் முன் ....
புளி டப்பாவைத் திறக்கும்போது புரிந்தது. 

புளி டப்பாவைத் திறந்தபோது,  
அதிலிருந்து சின்னப் பூச்சி ஒன்று பறந்தது.
 
 ஏர்-டைட் ...டப்பர் வேர் புளி டப்பா. மூடியிருக்கிறது.!  

அதற்குள்....
 பூச்சி எப்படி வந்தது என்று யோசித்து தலையைச் சொறிந்தேன்.  

நான் சொறிந்துகொள்வதைப் பார்த்துத் தலையில் என்ன பேனா.?" என்றார்கள்.

 தலையில் பேன் எப்படி உற்பத்தி ஆகியது என்று ...
மேலும் ....
பலமாகச் சொறிந்துகொண்டேன்.  

ஷாம்பு போட்டுக் குளித்தால் அரிப்பு சரியாகிவிடும் என்று கூறினார்கள். 

 குளித்துவிட்டு பெருமாள் சேவிக்கும்போது சாளரத்தைப் பார்த்தேன். 

 எப்படி?யொரு பூச்சி சோறு தண்ணீர் காற்று எதுவும் இல்லாமல் உள்ளே தோன்றியிருக்க முடியும்.? என்று யோசித்தேன். 

மீண்டும் குழப்பம்.  

கல்லிலிருந்து பூச்சி எப்படி வந்தது என்பதே தெரியாமல் இருக்க, ....

தூணிலிருந்து நரசிம்மன் எப்படித் தோன்றினார் என்று எனக்கு எப்படிப் புரியும்.?

 பூச்சிக்குத் தாய் யார் என்று தெரியாமல் முழிக்கும் எனக்கு ...

நரசிம்மருக்கு ...யார் ?
தாய் என்று புரிந்துகொள்ள முடியுமா.? 

இந்தக் கேள்விகளுக்கு 
ஆழ்வார் பாசுரங்களையும் 
ஸ்வாமி தேசிகனையும் நாடினேன்.  

ஸ்வாமி தேசிகன். ..
 நரசிம்மர் தூணிலிருந்து வந்தார், 

அதனால்
அவருடைய தாய் ....
அந்தத் தூண் தான் என்கிறார்.  

தேசிகன் கூறிய பிறகு
 அதை மறுத்துப் பேச முடியுமா.? 

(a+b) ² =a²+2 ab+b² என்பதை எப்படிக் கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறோமோ ?

அதே போல் 
ஆழ்வார்கள் 
ஆசாரியர்கள் எது செய்தாலும் ....

அதில் 
தப்பிருக்காது என்று முதலில் நம்ப வேண்டும். 

ஆசாரியன் கூறிய பிறகு
 அதை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் ஞானம். 

வள்ளுவர்

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்கிறார். 

 இதற்குப் பொருள், "எந்தப் பொருளை யார் சொன்னாலும்,
 அதன் உண்மைத் தன்மையை அறிவது தான் அறிவு". 

அதாவது 
பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு. 

ஸ்ரீ வைஷ்ணவத்தில் பகுத்து அறிவதற்கு அறிவு கலங்க வேண்டும்.  

எனக்கு அறிவு இல்லை என்று தெரிந்துகொள்வதே அறிவு என்கிறார் நம்மாழ்வார்.  

கொஞ்சம் அறிவியல் படித்தவர்கள் கடவுள்பற்றிப் பேசுகிறேன் என்று ...

அவர்களின் 
பி.எச்.டியை வைத்துக்கொண்டு ...

கடவுளை ஒரு வரையறைக்குள் அடக்க முயற்சி செய்வதை நாம் பார்த்திருக்கிறோம்.

நம் சிறிய அறிவை வைத்துக்கொண்டு அவனை அளக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது.  

நம் அறிவு என்பது
 எவ்வளவு சின்னது என்று ....

ஒரு கணிதவியலாளர் சொன்ன சோதனை மூலமே சொல்லுகிறேன்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரெஞ்சு கணிதவியலாளரான Jules henri poincaré,

 "சிந்தனைப் பரிசோதனை" என்று ஒரு விஷயத்தைச் சொல்லியுள்ளார்.  

இந்தச் சோதனையை யாராலும் செய்து பார்க்க முடியாது. 

அதனால் ....?
நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள் :

இன்று தூங்கி ...நாளை எழுந்துகொள்ளும்போது ....

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும்...

உங்கள் அப்பா,  அம்மா,  
நாய்குட்டி, 

வீடு,  கோயில்,  செடி, 
 தட்டு, அரிசி,  

பேனா,  பென்சில், சட்டை,  
அணுக்கள்,  நீங்கள் படுத்துத் தூங்கும் கட்டில், 

ஏன்,?
 நீங்கள் என....

உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே பெரிதாகிவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

மறுநாள் காலை 
நீங்கள் எழுந்த பிறகு ...

எல்லாம் பெரிசாகிவிட்டது என்று 
உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்றால்...?

முடியாது  என்கிறார் Jules henri. 
அவ்வளவு தான் நம் அறிவு.

சாதாரணமாக இதையே #அளக்க முடியாதபோது ....

பெருமாளை ...
இப்படித்தான் என்று பேசுவது எல்லாம் டூமச்.

ஆலமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்,
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்,
கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்லது ஓரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே.

-  திருப்பாணாழ்வார்

எழு உலகையும் உண்டு 
ஒரு குழந்தை வடிவில் ஆலிலையில் படுத்துக்கொண்ட பெருமாள் என்று சொல்லும்போது ....

உலகை உண்ட பிறகு 
அந்த இலையில் எப்படிப் படுத்துக்கொள்வான் என்று கேள்வி எழும்.

கோவர்த்தன மலையைத் திருப்பிக் குடையாய் பிடித்தபோது அதில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் கீழே சிந்தவில்லையாம். 

அதே போல 
மரங்கள் எல்லாம் எப்போதும் போலச் சாதாரணமாக இருந்ததாம்.

( உடனே புவியீர்ப்பு தத்துவம் உங்களுக்கு ஞாபகம் வந்தால் ....
நீங்க இன்னும் கடவுளைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.! )

எப்படி என்று ...இதை எல்லாம் ....யோசிக்கவே முடியாது.  
முயற்சியும் செய்யாதீர்கள்.! 

இது தான் 
அகடிதகடனா சாமர்த்தியம். 
(லிஃப்கோ தமிழ் அகராதியில் - "perfectly accomplishing even the impossible" என்று கொடுத்திருக்கிறார்கள். ). 

நம் இரைப்பையில்
 'ஹைட்ரோ குளோரிக் அமிலம்' இருக்கிறது என்றால் நம்புவீர்களா.? 

அதை
 ஒரு பாட்டிலில் பிடித்து அடித்தால் ரவுடிகள் வீசும் ஆசிட் தோற்றுவிடும். 

அந்த அமிலம் கையில் பட்டால் நம் கை ஓட்டையாகும்.! 

ஹார்பிக் என்ற நம் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் வஸ்துவில் 10% இந்த அமிலம்தான் இருக்கிறது. 

 நம் வயிறு, 
ஆசிட் வைத்திருக்கும் ரவுடி.!  

இவ்வளவு மோசான ஆசிட் உள்ளே இருக்க நம் வயிறு ஏன் இன்னும் பஞ்சராகவில்லை.?  

பேன் தலையில் இருந்தால் ...
அந்த 'இச்சிங்' உணர்வை நாம் எப்படி உணர்கிறோம்.

 இச்சிங்கோ, டச்சிங்கோ
 நாம் அதை உணர்வது எப்படி.?
 உணர்த்துவது யார்.? என்று கேட்கும் கேள்விகளுக்கு  ....

விடை ஆழ்வார் பாசுரங்களில் எங்கோ புதைந்து இருக்கிறது. 

நாம் பெருமாளிடம் வேண்டிக்கொள்கிறோம். பதவி உயர்வு, பணம், வீடு வாசல் வேண்டும். 

 தேர்வில் மதிப்பெண், கல்யாணம், வெளிநாட்டு வீசா, சில சமயம் காகிதத்தில் எழுதி ஆஞ்சநேயர் கழுத்தில் கூட மாட்டிவிடுகிறோம்.

 'உண்டியே உடையே உகந்து ஓடும்' என்று ஆழ்வார் சொல்லுவது போல ஓடிக்கொண்டு இருக்கிறோம்.  

ஆனால் ....
என்றாவது ?

எனக்கு 'அறிவு இல்லை, 
அது வேண்டும்', என்று பெருமாளிடம் கேட்டிருக்கிறோமா.? கேட்டதில்லை, 

காரணம்
 நம்மை நாமே அறிவுஜீவி என்று நினைத்துக்கொள்கிறோம்.

#யாதுமாகி நிற்பவன் அவனே...

அவனின்றி ஓர் அணுவும் அசையாது

Panigrahanam - when..?

🕉️

*KOLAHALAM IN KALYANAM / VIVAHAM – HOLDING THE BRIDE'S HAND (PANIGRAHANAM)*

Namaskaram

In an attempt to bring back the proper ancient ritual of authentic Vivaham as recommended in Sutras by Rishis, in these series of eye-opening articles on our FB page 'Dharma Shastram', we try to point out the differences between the past and the present way of conducting marriage topic-wise. 

Today we speak about holding the bride's hand by the groom, which is an important step in marriage. But *when* to do that, is something we need to learn from this article

*What do we observe now?*
 The bride and groom are holding each other's hands for photoshoot before wedding, reception happens before marriage, rather many days before the wedding, the bride and groom go around together etc. Also, now it has become a fashion to escort the bride in Panigrahana style right from Oonjal ceremony into the marriage hall. These are all strictly prohibited in Shastras. 

*The FIRST TIME the groom holds the hand of the bride, with all his fingers enveloping the bride's right hand 5 fingers, IS AT THE TIME OF PANIGRAHANA ONLY, which happens after Mangalya dhaarana. Thus, holding the bride's hand with mantra is regarded highly important by Rishis, as it signifies the following:*

The groom chants the mantras which mean:

*I hold your hands forever for good progeny and to lead a long, healthy life with you till our old age together*

In our Dharma, every auspicious act has to be performed with mantras. Imagine that our Rishis have written mantras right from getting out of the bed in the morning, upto lying down on bed in night

So this is an very important part of the marriage which signifies that, *by holding hands in this specific way, my heart and your heart become one forever for achieving happiness in life and progeny*. Also here, Apastamba Rishi gives a rule of holding hands of the bride in his Sutra. If you hold only the thumb of the bride, only male child will be born. If you hold 4 fingers of the bride without the thumb, then female child will be born. *If you hold all the fingers of the bride together, Apastamba Rishi says that you will beget male as well as female children which is ideal*. That's why the groom holds all fingers of the bride. This is also the time when, after the Panigrahana, the bridegroom takes the bride towards the homa kundam where the *Pradaana Udvaha homam* is about to happen and gives his right side place for her to sit. 

*Veda Ghosham is thus trying to bring back each and every aspect of the 5-day marriage*, as recommended in Shastras. We also in the due course want to prepare a team of ritual experts to conduct this 5-day marriage, for those who are really interested in getting married as per Shastras.


_Sri Umamaheshwarabhyam namaha !_

🕉️

Saturday, April 26, 2025

Vaishavaparibhasha

" *வைஷ்ணவ* *பரிபாஷை* "

 *பெருமாள்* - ஸ்ரீமந் நாராயணன், விஷ்ணு
 
 *பிராட்டி* - ஸ்ரீதேவி, லக்ஷ்மி, மற்றும் பூதேவி, நீளாதேவி 
 
 *தாயார்* -ஸ்ரீதேவி, லக்ஷ்மி, மற்றும் பூதேவி, நீளாதேவி
 
 *நம்பெருமாள்* - ஸ்ரீரங்க கோவில் உற்சவர்
 
 *பெரியபெருமாள்* -ஸ்ரீரங்க கோவில் மூலவர்
 
 *பெரியபிராட்டி* - ஸ்ரீரங்கநாயகி (ஸ்ரீதேவி) 
 
 *தேவபெருமாள்* -காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் 
 
 *உற்சவர்* - கோவிலிலிருந்து வெளியே எழுந்து அருளும் மூர்த்தி 
 
 *மூலவர்* - கோவிலேயே நிரந்தரமாக எழுந்து அருளும் மூர்த்தி 
 
 *செல்வர்* - உற்சவரின் பிரதிநிதி (உற்சவரைப் போலவே வழிபடும் மூர்த்தி) 
 
 *யாகபேரர்* - பவித்ரோற்சவம் முதலிய உற்சவங்களில் யாகசாலையில் எழுந்து அருளும் உற்சவ மூர்த்தி. 
 
 *கோயிலொழுகு* - கோவிலின் வரலாறு 
 
கிடந்த திருக்கோலம் - சயநினித்து எழுந்தருளும் சேவை. 
 
 *வீற்றிருந்த* *திருக்கோலம்* - அமர்ந்து எழுந்தருளும் சேவை. 
 
 *நின்றதிருக்கோலம்* -நின்றோ, நடந்தோ எழுந்தருளும் சேவை.        
 
 *ஆழ்வார்* - பொதுவாக 12 ஆழ்வார்களைக் குறிக்கும்
 
 *பெரியஉடையார்* -ஜடாயு 
 
 *இளையபெருமாள்* - இலக்குவன்/லக்ஷ்மணன் 
 
 *எம்பெருமானார்* - இராமாநுஜாசார்யன் 
 
 *இளையாழ்வார்* - இராமாநுஜாசார்யன் 
 
 *யதிராசர்* - இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்) 
 
 *யதீந்திரர்* - இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்) 
 
 *ஸ்வாமி* - முதலாளி
 
 *ஆழ்வான்* - கூரத்தாழ்வான் 
 
 *ஆண்டான்* - முதலியாண்டான் 
 
 *லோகாச்சார்யர்* - நம்பிள்ளையின் மற்றொரு பெயர் 
 
 *பட்டர்* - பராச‌ர பட்டர் 
 
 *நாயனார்* - அழகிய மணவாள பெருமாள் நாயனார் (பிள்ளை லோகாச்சார்யரின் தம்பி) 
 
 *வேதாந்தாசாரியார்* - வேதாந்த தேசிகன் 
 
 *ஜீயர்* - ஸன்யாசி
 
 *பெரியஜீயர்* , யதீந்திர ப்ரவணர் - மணவாள மாமுனிகள் 
 
வரத த்வய ப்ரஸாதம் - பிள்ளை *லோகாச்சார்யார்* - 2 வரதனுக்கான வெகுமதி - காஞ்சி வரதன், நம்பூர் வரதாச்சாரியார் 
 
 *சடாரி* (ஸ்ரீ சடகோபம்) - எம்பெருமானாரின் பாத கமலங்கள் 
 
 *ஸ்ரீராமானுஜம்* - ஆழ்வார்திருநகரியிலுள்ள நம்மாழ்வாரின் பாத கமலங்கள் 
 
 *மதுரகவிகள்* - நம்மாழ்வாரின் பாத கமலங்கள் 
 
 *முதலியாண்டான்* - இராமாநுஜரின் பாத கமலங்கள் 
 
 *அந்ந்தாழ்வான்* - திருமலையில் இராமானுஜரின் பாத கமலங்கள் 
 
 *பொன்னடியாம்* *செங்கமலம்* - மணவாள மாமுனியின் பாத கமலங்கள் 
 
 *அரையர்* - எம்பெருமானின் முன் பிரபந்த்த்தை இசையுடனும் பாவத்துடனும் அனுசந்திப்பவர் 
 
 *தேவரீர்* - பிறரை குறிக்கும் முறை 
 
 *அடியேன்* - தன்னை கூறிக்கொள்ளும் முறை 
 
 *அடியோங்கள்* - தன்னை கூறிக்கொள்ளும் முறை 
 
 *தாஸன்* - அடிமை, அடியேன் 
 
 *ஆசார்யர்* - குரு, ஆசான் 
 
 *பூர்வாசார்யர்* - ஆசாரியரின் முன்னோடிகள் 
 
 *பரமாசார்யர்* - ஆசாரியரின் ஆசார்யர்
 
 *திவ்யப்ரபந்தம்* -அருளிச்செயல் ஆழ்வார்களின் பாசுரங்கள் 
 
 *உபயவேதாந்தம்* - ஸமஸ்கிருத வேதம் (வேதம், உபநிஷது, புராணம், இதிஹாஸம்) மற்றும் திராவிட வேதம் (திவ்யப்ப்ரபந்தம்) 
 
 *ஸ்ரீசூக்தி* - ஆழ்வார் ஆசார்யரின் பாசுரங்கள் 
 
 *க்ரந்தம்* - புத்தகம் 
 
 *வ்யக்யானம்* - விளக்கம் 
 
 *காலக்ஷேபம்* - க்ரந்தம் மற்றும் வியாக்யான்ங்களின் வரி விளக்கங்கள்/சொற்பொழிவு 
 
 *உபன்யாசம்* - சொற்பொழிவு 
 
 *உபயவிபூதி* - நித்ய மற்றும் லீலா விபூதிகள் 
 
 *நித்யவிபூதி* - ஸ்ரீவைகுண்டம் - எம்பெருமானின் ஆன்மீக பாகம் - லௌகீக பாகத்தின் 3 மடங்கு 
 
 *லீலாவிபூதி* - எம்பெருமானின் சொத்தின் லௌகீக பாகம் - ஆயிரமாயிரம் லோகங்களைக் கொண்ட 14 லோகங்கள் 
 
 *விரஜா* - நித்ய விபூதி மற்றும் லீலா விபூதியை பிரிக்கும் நதி 
 
 *விஷயந்தரம்* - எம்பெரும்மானை தவிர உள்ள மற்ற விஷயங்கள் 
 
 *சேஷி* - தலைவன் 
 
 *சேஷன்* - தொண்டன் 
 
 *சேஷத்வம்* - தலைவனுக்கு தொண்டனாய் பணி செய்யும் அறிவு 
 
 *பார‌த‌ந்த்ரிய‌ம்* - தொண்டனாய் இருந்து தலைவனின் ஆசைகளை நிறைவேற்றுதல் 
 
 *அன்யசேஷத்வம்* - எம்பெருமான் மற்றும் பாகவதர்களை தவிர மற்றுள்ளவர்களின் தொண்டனாக விளங்குதல் 
 
 *தேவதாந்த்ரம்* - ப்ரம்மா, சிவன், இந்திரன் மற்றும் இதர தேவதைகள் 
 
 *பஞ்சஸம்ஸ்காரம்* - ஒருவரை ஸ்ரீவைஷ்ணவராக நியமிக்கும் பொழுது செய்யும் 5 சடங்குகள் 
 
 *பரஅன்னநியமம்* - தன் வீட்டில் சமைத்த பிரஸாத்த்தை மட்டும் உட்கொள்ளுதல் (கோயில் மற்றும் மடங்கள் விதிவிலக்கு)- குறிப்பு: *ஸ்ரீவைஷ்ணவர்* புஜிக்கும் உணவு மற்றும் எம்பெருமானுக்கு படைக்கும் உணவுகளில் கட்டுப்பாடு உள்ளன 
 
 *பொன்னடிசாற்றுதல்* - ஸ்ரீவைஷ்ணவரை இல்லத்திற்கு அழைத்தல் 
 
நோவு சாற்றிக்கொள்ளுதல் - ஸ்ரீ *வைஷ்ணவர்* உடல் நலமின்மை 
 
 *கண்வளருதல்* - உற‌க்க நிலை 
 
 *கண்டருளப்* *பண்ணுதல்* , அமுது செய்தல் - சாப்பிடுதல், நெய்வேத்யம் (எம்பெருமான் மற்றும் ஸ்ரீவைஷ்ணவருக்கு உணவு பரிமாறுதல்) 
 
 *எழுந்தருளபண்ணுதல்* - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யர்களை ஒரிடத்திலிருந்து மற்றொரு இட்த்திருக்கு எடுத்துச் செல்லுதல் 
 
 *புறப்பாடுகண்டருளல்* - திரு உலா 
 
 *குடிசை* - தன் இல்லத்தை குறிக்கும் சொல் 
 
 *திருமாளிகை* - மற்றொரு ஸ்ரீவைஷ்ணவரின் இல்லத்தை குறிக்கும் சொல் 
 
 *நீராட்டம்* - குளித்தல் 
 
 *போனகம்* - உணவு 
 
 *ப்ரஸாதம்* , சேஷம் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர் உணவு உண்ட மிச்சம்   
 
 *காலக்ஷேபம்* பண்ணுகிரார் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர் ப‌ற்றிய‌ விஷ‌ய‌ங‌க‌ள் கேட்கிறார் 
 
 *காலக்ஷேபம்* சாதிக்கிரார் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர் ப‌ற்றிய‌ விஷ‌ய‌ங‌க‌ள் சொல்லுகிறார் 
 
 *சாதித்து* *அருள்* (சாத்துமறை ) - பாசுரம் மற்றும் வேதம் ஓத ஆரம்பித்தல் 
 
 *நாயந்தே* - அடியேன் 
 
 *திருநாடு* *அலங்கரித்தார்* - உடலை விடுத்து வைகுண்டம் எய்தல் 
 
 *திருவடிசம்பந்தம்* - ஆசார்யனின் சம்பந்தம் 
 
 *அலகிடுதல்* - பெருக்குதல் (சுத்தம் செய்தல்)     
 
 *ப்ரஸாதம்* - அன்னம் 
 
 *குழம்பமுது* (நழிகரமது) - குழம்பு/சாம்பார் 
 
 *சாற்றமுது* - ரசம் 
 
 *கரியமுது* - காய்கரி/பொரியல் 
 
 *திருக்கண்ணமுது* - பாயசம் 
 
 *தயிரமுது* (தோத்தியோனம், தாச்சி மம்மு) -தயிர் சாதம் 
 
 *புளியோதரை* - புளி சாதம் 
 
 *அக்காரஅடிசில்* - சர்க்கரையால் செய்த சாதம்...🙏🙏🙏🙏🙏

Seethamma mayamma story

*************************
  🌺 *சீதம்ம* ..... *மாயம்ம* ...''
என்கிற கீர்த்தனை பிறந்தது...🌺

வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி , கண்களை மூடியவாறு ராம ஜபம் செய்து கொண்டிருந்த *தியாகராஜர்* , குரல் கேட்டு சட்டென்று கண் விழித்தார். எதிரே ஒரு வயதான தம்பதி அருகே, கூப்பிய கரங்களுடன் ஒரு இளைஞன். மெல்லிய குரலி ல் அந்த முதியவர் பேச ஆரம்பித்தார்.
'' ஸ்வாமி, நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்திலி ருந்து கால்நடையாய் *ஷேத்ராடனம்* பண்ணி ட்டு வரோம். நாளை ராமேஸ்வரம் போகணும். இன்று ஒரு ராத்திரி மட்டும் உங்க இடத்துல தங்கிவிட்டு , காலை பொழுது விடிந்ததும் கிளம்பிடறோம்.
 தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யணும்.."'
மெல்லிய குரலில் , பேசினார் அவர்; வயதான அந்த தம்பதியின் அழுக்கு படிந்த உடைகள் , முகங்களில் தெரிந்த களைப்பு , வாட்டம் மற்று ம், பேச்சில் தெரிந்த ஆயாசம் இவையெல்லா வற்றையும் தாண்டி , அம்மூவரின் முகலாவண் யமும் , தெய்வீக அம்சமும் தியாகராஜரை என்னவோ செய்ய அவருக்கு ஒரு வித பக்தி மயக்கம் ஏற்பட்டது.
ஒருகணம் நிலை தடுமாறியவர் பின், மெலிதா ன புன்னகையுடன் , இரு கரங்களையும் கூப்பி அவர்களை வணங்கினார் ; 
'' அதற்கென்ன பேஷாய் தங்கலாம். இரவு போ ஜனம் பண்ணிட்டு நிம்மதியாய் தூங்குங்கோ"
அவர்களை உள்ளே அழைத்து சென்று அமர செய்தவர் பின், அடுக்களையை நோக்கி, உரத் த குரலில் , 
'' கமலா,குடிக்க தீர்த்தம் கொண்டு வா ..''
என்றார் ; அடுத்த கணம் தீர்த்த சொம்பு சகிதம் அங்கே வந்த கமலாம்பாளின் கண்கள், அங்கு அமர்ந்திருந்த புதியவர்களை கண்டு வியப்பி ல் விரிந்தன.
' யார் இவர்கள் ?'
'' கமலா ...'' தியாகராஜரின் குரல் அவளை தட்டியெழுப்பியது ; 
''கமலா இவர்கள் நமது விருந்தாளிகள். இன்று நமது கிருஹத்தில் தங்க போகிறார்கள் ..இரவு உணவை இவர்களுக்கும் சேர்த்து தயார் செய்''
தீர்த்த சொம்பை அவளிடமிருந்து வாங்கியவா றே இயல்பாய் பேசினார் அவர் ;
' அடடா, வீட்டில் இரண்டு பேர்களுக்கு போது மான அரிசியே இல்லை .இப்போது, ஐந்து பேர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டுமானா ல் அரிசிக்கு என்ன செய்வது ? பக்கத்து வீட்டு க்கு சென்று அரிசி வாங்கி வர வேண்டியது தான் '  
உள்ளுக்குள் எண்ணியவள் , பின் எதையும் வெளிக்காட்டாமல், புன்னகையுடன் அவருக்கு தலையசைத்து விட்டு , அடுக்களையை நோ க்கி விரைந்தாள் ; போன வேகத்திலேயே, அங்கிருந்த பாத்திரங்களில் ஒன்றை கையில் எடுத்தவள், பின் அதை யார் கண்ணிலும் படாமலிருக்க புடவையால் மறைத்தவாறு அங்கிருந்து வெளியே வந்த அக்கணம் அந்த சிறிய கூடத்தில் அமர்ந்திருந்த அந்த முதியவ ரின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது ; 
'' அடடா, எங்கே செல்கிறீர்கள் அம்மா?எங்களு க்காக சிரமப்பட வேண்டாம். எங்களிடம் , வே ண்டிய அளவு தேனும், தினை மாவும் இருக்கி றது. இரண்டையும் பிசைந்து ரொட்டி தட்டி , நாம் அனைவரும் சேர்ந்தே சாப்பிடலாம்.'' அவ ளின் மனதை படம் பிடித்து காட்டியது போன்று பேசியவரை, வியப்புடனும் , தர்மசங்கடத்துட னும் அவள் பார்த்து கொண்டிருக்கும் போதே, அவள் சற்றும் எதிர்பாராத கையில் , தேனும் , தினை மாவும் அடங்கிய ஒரு சிறிய பையை அவளிடம் நீட்டினார் அந்த முதியவர்.
தயக்கத்துடனும், சங்கோஜத்துடனும் அதனை பெற்று கொண்ட அவள், உணவுத்தயாரிக்க அடுக்களையை நோக்கி விரைந்தாள்.
அன்று இரவு, அனைவரும் அந்த ரொட்டியை சாப்பிட்டு பசியாற தியாகராஜர், அவர்களுட ன் விடிய விடிய பேசிக்கொண்டிருந்து விட்டு , பின், ஒரு கட்டத்தில் உறங்கி போனார்.
பொழுது விடிந்தது, காலைக்கடன்களை முடித்து விட்டு, கூடத்தில் அமர்ந்து, வழக்கம் போல கண்களை மூடியவாறு, ராம நாமத்தை ஜபித்தவாறிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு கண்களை திறந்தார..
" ஸ்வாமி .." எதிரே புன்னகையுடன் அந்த முதியவர். அருகே, அவரின் பார்யாளும், மற்று ம் அந்த இளைஞனும் . அந்த முதியவர் தொடர்ந்தார்.
'' ரொம்ப சந்தோஷம், நாங்க காவேரியில் ஸ்நானம் பண்ணிட்டு அப்படியே கிளம்பறோம் இரவு தங்க இடம் கொடுத்து வாய்க்கு ருசியா ய் ஆகாரமும் கொடுத்து அன்பாய் உபசரித்தத ற்கு மிக்க நன்றி ..''
கூப்பிய கரங்களுடன் அந்த முதியவர் பேச,
அருகே அந்த மூதாட்டியும், இளைஞனும் அவரின் வார்த்தைகளை ஆமோதிப்பது போன்று தலையசைத்தவாறு நின்றிருந்தனர சொல்லி விட்டு மூவரும் அங்கிருந்து கிளம்ப, தியாகரா ஜரும் அவர்களை வழியனுப்பும் நிமித்தமாய் , அவர்களுடன் வாசலுக்கு வந்தார்.
அவர்கள் மூவரும் வாசலை கடந்து , தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்க, அவர்கள் செல்வ தை கண் இமைக்காமல் பார்த்தவாறு நின்றிரு ந்த தியாகராஜரின் கண்களில் ' சட்டென்று ' ஒரு தெய்வீக காட்சி இப்போது *அந்த வயோதிகர் ஸ்ரீ ராமனாகவும் அந்த மூதாட்டி, சீதையாக வும், அந்த இளைஞன் அனுமனாகவும் தோற்ற மளிக்க*
அவருக்குள் இனம் புரியாத ஒரு பதை பதைப்பு.
கண்கள் பனிசோர நா தழுதழுக்க தன்னை மற ந்து பக்தி பரவசத்தில் ஆனந்த கூத்தாடினார்.
'' என் தெய்வமே, *தசரதகுமாரா* , *ஜானகி* மணா ளா, நீயா என் இல்லத்துக்கு வந்தாய்?. என்னே நாங்கள் செய்த பாக்கியம் அடடா, வெகு தூரத் திலிருந்து நடந்து வந்ததாய் சொன்னாயே , உன் காலை பிடித்து அமுக்கி, உன் கால் வலி யை போக்குவதை விடுத்து , உன்னை தூங்க விடாமல் விடிய விடிய பேசிக்கொண்டே இருந் தேனே. மகாபாவி நான், என் வீட்டில் தரித்திரம் தாண்டவமாடறதுன்னு தெரிஞ்சு , ஆகாரத்தை யும் கொண்டு வந்ததுடன், ஒரு தாய் தகப்பனா யிருந்து எங்கள் பசியையும் போக்கினாயே ! உனக்கு அநேக கோடி நமஸ்காரம்''
நடு வீதி என்பதையும் மறந்து கண்ணீர் மல்க கதறி அழுதார் தியாகராஜர்.அப்போது அவர் திருவாயினின்று, அனிச்சையாய் ,  
'' சீதம்ம.....மாயம்ம...''
என்கிற கீர்த்தனை பிறந்தது...

🙏🌹🙏🌹 *ஸ்ரீ* *ராம்* *ஜெய* *ராம்* . *ஜெய* *ஜெய* *சீதாராம்* .🙏🌹🙏🌹

Friday, April 25, 2025

Bitter realities of life - Pattinatthaar

🎋பட்டினத்தார் சொன்னது🧘🏻‍♂️*

😳உணவை தான் உண்டேன் எப்படி மலம் ஆனது?
உயிரோடுதானே இருந்தேன் எப்படி மாண்டு போனேன்?😳

😲மலம்தான் உணவாக இருந்ததா?
மரணம்தான் வாழ்வாய் இருந்ததா?😲
.
😂இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை சுகித்ததா?
இந்த சூம்பும் மார்புகளுக்கா இத்தனை கண்கள் வட்டமிட்டது?😂

😲பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும் என்று பட்டினத்தார் பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வை தானா?😲

 😭"இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே" என்று மனைவியும் சுற்றமும் பேசியது எனக்கு அவர்கள் என்னை நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது.😭

😊இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன் !😊

 😢நான் விரும்பியவை எல்லாம் என்னைவெறுத்துகொண்டிருந்தது😢

 😳இளமையாய் இருக்கும் போதே முதுமையை பழகி இருக்கவேண்டும்

அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்கமாட்டேன்.😳

😢அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ஒரு திருடனை போல் பதுக்கி இருக்கமாட்டேன்.
காலம் கடந்த ஞானம்.😢

😢பாயும் நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள்.
 
இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்?

பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொள்ளவா முடியும்?

 சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவா போகிறது? 

 கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும்,

  காதலா, என் உயிரே என்று சொன்ன மனைவியும்,

 பிணமானபின் சுடுகாட்டில் அல்லவா விட்டு செல்வார்கள் !😢

😃 பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம் என்று வீசிசென்ற பிறகு , மண் என்னைப்பார்த்து , "மகனே ! நானிருக்கிறேன்.என் மடியில் வந்து உறங்கு" என்று என்னை மார்போடு தழுவிக்கொண்டது.😃

🌷அருந்தின மலமாம் 
பொருந்தின அழுக்காம் வெறுப்பன உவப்பாம் 
உவப்பன வெறுப்பாம் 
உலக பொய் வாழ்க்கை நீ_நீயாக_இரு...🌷

 😃உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.😃

 😍அதனால் வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்😍
😍உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.

எந்தப்பறவைகளும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குஞ்சிடம் சாப்பாடு கேட்பதில்லை.

எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.

எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.😍

😃மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.😃

😳மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.😳

🌹நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்*

🌹முதுமை என்று எதுவும் இல்லை.

 🌹நோய் என்று எதுவும் இல்லை.

 🌹இயலாமை என்று எதுவுமில்லை.

 🌹எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.

🌹சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

😲நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.😲

நான்... நான்... நான்...
நான் சம்பாதித்தேன்,
நான் காப்பாற்றினேன்,
நான் தான் வீடு கட்டினேன்,
நான்தான்உதவிசெய்தேன்,
நான் பெரியவன்,
நான் தான் வேலைவாங்கி கொடுத்தேன்,

😲நான் நான் நான் நான் என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!!😲

நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா??
நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?

இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..

ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள். 

 😃உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே தாழ்வு மனப்பான்மை வரும்..!
உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே தலைக்கனம் வரும்...!😃 

 😍உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு தன்னம்பிகை வரும்.😍
                                      

                 *🧘‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♂️🧘‍♀️*

Wearing sacred thread on right and left shoulder

இதனை நன்கு படித்து அவ்வப்பொழுது ஞாபகப்படுத்திக் கொள்வோம்...🙏🏻

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉


பெரியவா சொன்னது

,"சடங்கின் போது, ஏன் பூணூலை இடம், வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்…?" - மஹா பெரியவா.

தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும்.

பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும்.

பக்தியோடு செய்வது யக்ஞம் ;

சிரத்தையோடு செய்வது சிராத்தம்.

தெய்வகாரியங்களைப் பண்ணும்போது சிகையை நன்றாக முடிந்து கொண்டு, யக்ஞோபவீதம் (பூணூல்) இடது தோளில் இருக்கும்படியாக, சிரத்தையோடு செய்ய வேண்டும்.

இதற்காகத்தான் சிகை, யக்ஞோபவீதம் இரண்டும் இருக்கின்றன.

சந்நியாசிகளுக்கு இவை இரண்டும் இல்லை.

பித்ரு காரியத்தையும், பல தேவதைகளின் உபாஸனையையும் விட்டுவிட்டு, நேரே பரமாத்ம உபாஸனையை எந்தவிதமான லௌகிக அபே¬க்ஷயும் இன்றிச் செய்பவர்கள் அவர்கள். நேராகவே கடவுளிடம் போகிற பிற மதஸ்தர்களுக்கும் சிகை, யக்ஞோபவீதம் இல்லை.

ஏன் இப்படித் தேவர்களுக்கு இடது தோளில் பூணூலோடும், பித்ருக்களுக்கு வலது தோளில் பூணூலோடும் காரியம் பண்ணி வேண்டும் என்று சொல்கிறேன்:

கிழக்கு முகமாக இருந்து கொண்டே காரியங்களைச் செய்ய வேண்டும்.

வடக்கு தேவர்களிடம் போகிற திசை, உத்தராயனம் என்பது அதுதான். உத்தரம் என்றால் வடக்கு.

தெற்குதான் பித்ருக்கள் இருக்கும் பக்கம். ' தென்புலத்தார் ' என்று திருவள்ளுவர்கூடச் சொல்கிறாரல்லவா ? தக்ஷிணம் என்றால் தெற்கு. தக்ஷிணாயனம் என்பது பித்ரு லோக மார்க்கம்..... ' உத்தராயணம் ' என்பதில் மூன்று சுழி ' ண ' போட்டும், ' தக்ஷிணாயனம் ' என்னும்போது இரண்டு சுழி ' ன ' என்பது ' ண ' வாக மாறிவிடும். இது வியாகரண விதி.

தற்காலத்தில் மனம் போனபடி பத்திரிகைகளில் எழுதுவதால் இதைச் சொல்ல நேர்ந்தது.

உத்தராயண தேவ மார்க்கத்தையும், தக்ஷிணாயன பித்ரு மார்க்கத்தையும் பற்றிப் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார். நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு பித்ரு காரியம் பண்ணும்போது, எந்தத் தோள் தெற்குப் பக்கமாக இருக்கிறது? வலது தோள்தான். அதனால்தான் பித்ரு காரியத்தில் யக்ஞோபவீதம் அந்தத் தோளின்மேல் இருக்கும்படியாகப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது.

" பிரதக்ஷணம் பண்ணுவது " என்கிறோமே, இதற்குக் கூட தக்ஷிண (தெற்கு) திசையை நோக்கி என்றுதான் அர்த்தம். முக்காலே மூன்றுவாசிக் கோயில்களில் ராஜகோபுரம் கிழக்குப் பார்த்தான் இருக்கும். அதற்குள் நுழைந்து நாம் பிரதக்ஷிணம் ஆரம்பிக்கும்போது, முதலில் தெற்குப் பார்க்கத்தான் போவோம்.

இதே மாதிரி, நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு தேவகாரியம் பண்ணும்போது, தேவர்களின் திசையான வடக்கு திசையைப் பார்க்க இருப்பது நம்முடைய இடது தோள்தான். அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்தான். அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்மேல் இருக்க வேண்டும் என்பது.

தேவகாரியம், பித்ரு காரியம் இரண்டும் செய்யாத மற்ற வேளைகளில், அதாவது உத்யோக வேளை முதலானதுகளின் போது, பூணூலை ஒரு தோளின் மேலேயும் இல்லாமல், கழுத்திலிருந்தே மாலைமாதிரித் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும். இதை யாரும் அனுஸரிக்கக் காணோம். பித்ரு காரியம் தவிர மற்ற எல்லா ஸமயங்களிலும் இடது தோள் மேலேயே யக்ஞோபவீதத்தைப் போட்டுக் கொள்கிறார்கள்.

தேவ காரியத்தின் போது இடது தோளுக்கு மேல் பூணூல் இருப்பதற்கு ' யக்ஞோபவீதம் ' என்றும், பித்ரு காரியத்தின் போது வலது தோளுக்கு மேல் இருப்பதற்கு ' ப்ராசீனாவீதம் ' என்றும்,

மநுஷ்யர்களுக்கான லோக காரியங்கள் செய்யும் மற்ற எல்லா ஸமயத்திலும் மாலை மாதிரித் தொங்குவதற்கு ' நிவீதம் ' என்றும் பெயர்.

பிருஹதாரண்யக உபநிஷத்தில் ஒரு ஞானி இந்த எல்லாத் தினுஸுக் கர்மாக்களையும் விட்டு விட்டுப் பிச்சைக்கார ஸந்நியாஸியாகப் புறப்படுவதைப் பற்றி வருகிறது. ( III.5.1) .

அதற்கு ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும் போது, தேவ-பித்ரு-மநுஷ்ய கர்மாக்களை பண்ணுவதற்காகவே க்ருஹஸ்தனுக்குப் பூணூல் இருக்கிறதென்றும்,

எனவே, இந்த கர்மாக்களை விட்டுவிட்ட ஸந்நியாஸிக்குப் பூணூல் கிடையாதென்றும் ச்ருதி வாக்யங்களைக் காட்டி ஸ்தாபிக்கிறார். அந்த அலசலில், " நிவீதம் மநுஷ்யாணாம் " - மநுஷ்யர்களுக்கான காரியத்தின்போது (பூணூலை) மாலையாகப் போட்டுக்கொள்ள வேண்டும் , என்று ச்ருதி ப்ரமாணமே இருப்பதாகக் காட்டியிருக்கிறார்.

ஆனாலும் நடைமுறையில் பலகாலமாகவே அந்த வழக்கம் எடுபட்டுப் போயிருக்கிறது.

சந்தியாவந்தனம் :

நாம் பிச்சைக்காரனுக்கு அரிசி போடுகிறோம். ஏதாவது ஸொஸைட்டிக்கு நன்கொடை கேட்டால் நூறு, இருநூறு ரூபாய் கொடுக்கிறோம். பரோபகாரம் பண்ணினால் புண்ணியம் உண்டென்று பண்ணுகிறோம்.

சில சமயங்களில் உபகாரம் பண்ண வேண்டாமென்று தோன்றுகிறது. புண்ணியம் வேண்டாமென்று நினைக்கிறோம். அப்பொழுது முடியாது என்று சொல்லி விடுகிறோம். கடமையைச் செய்ய வேண்டியதுதான்; அதற்குமேல் தானம், தர்மம் இவை போன்றவைகளைச் செய்ய முடியாவிட்டால் பெரிய தோஷம் என்று சொல்ல முடியாதுதான்;

ஒருவனிடம் நாம் 500 ரூபாய் கைமாற்று வாங்கி இருந்தோம். அதைத் திருப்பித் தராமல் அவனிடம், "உனக்கு 500 ரூபாய் கொடுக்கிற புண்ணியம் எனக்கு வேண்டாம்" என்றால் அவன் விடுவானா? 'நான் புண்ணியத்திற்கு வரவில்லை. கொடுத்ததைக் கேட்கத்தான் வந்தேன்.' என்று சொல்லுவான். கேஸ் போட்டு, நமக்கு அதிகப்படி தண்டனையும் வாங்கி் வைப்பான்.

இது "அகரணே ப்ரத்யவாய ஜனக"த்தைச் சேர்ந்தது.

அதைப் போலத்தான் ஸந்தியாவந்தனமும். ஸந்தியாவந்தனம் பண்ணமாட்டேன் என்பது வாங்கின கடனைத் திருப்பித் தர முடியாது என்கிறதைப் போல.

தமிழில் ஸந்தியாவந்தனத்தைக் காலைக் கடன், மாலைக் கடன் என்றே சொல்வார்கள். அந்தப் பெயர்கள் மிகவும் அழகாய் இருக்கின்றன.

'கடன் வாங்கின திருஷ்டாந்தம் சொன்னால் போதாது. யார் எங்கே கடன் வாங்கினார்கள்? ஸந்தியாவந்தனம் யாரிடம் கடன் வாங்கப்பட்டது?'

என்று சிலர் கேட்கலாம்.

வேதத்தில் "தைத்திரீய ஸம்ஹிதை" (Vl-3) யில்

"பிறக்கும் பொழுதே மூன்று கடனோடு பிறந்திருக்கிறான்.

ரிஷிருணம், தேவருணம், பிதிர்ருணம்

என்று மூன்று கடன்கள் உண்டு" என்று சொல்லியிருக்கிறது.

"வேதம் ஓதுவதால் ரிஷிக்கடனும்,

யாகமும் பூஜையும் ஸந்தியாவந்தனாதி உபாஸனைகளும் பண்ணுவதால் தேவர்கடனும்,

தர்ப்பணம் சிராத்தம் இவற்றால் பிதிர்கடனும் தீர்கின்றன" என்கிறது.

கடன் வாங்கினது நமக்குத் தெரியாது. தெரியாததை வேதம் சொல்லியிருக்கிறது. அதைக் கொண்டு நாம் யுக்தி பண்ணிப் பார்க்க வேண்டும். நம்பிக்கை யுள்ளவர்களுக்கு அதை அநுஸரித்த யுக்தி தோன்றும்.

இல்லாதவர்களுக்கு விபரீத யுக்தி தோன்றும்.

அதனால் தினமும் தவறாது ஸந்தியா வந்தனம் செய்வோம்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர. 🙏🙏
மஹா பெரியவா திருவடிகள் சரணம் 💐💐💐💐

One sale - The Indian way - Joke

FACT COMMENT ON OUR MEDICAL SYSTEM -
One Bhayrtiya left his job in India and joined a salesman's job in a big departmental store in Canada.
On the first day, Bhayrtiya worked with full vigour.
At 6 pm:
"Boss :- How much of sales did you do on the first day?
Bhayrtiya : Sir, I attended to 1 Sale.
Boss : just Only 1 sale the whole day? Usually every salesman here does 20 to 30 Sale transactions a day. Well, tell me what is the money value of your today's one sale?
Bhayrtiya : $93300 dollars.
Boss : What! Unbelievable! But how did you do that?
Bhayrtiya : Sir, 1 person came and I sold him a small fishing hook.
Then a mazola and then finally sold a big hook. Then I sold him 1 big fishing rod and some fishing gear.
Then I asked him where does he go to catch fish and he said in the coastal area....
Then I said it would need a boat. So I took him down to the boat department and sold him a 20 ft double engine scooner boat.
When he said the boat won't come in his Volkas Wagon, I took him to the auto mobile section and sold him the new Deluxe 4 x 4 blazer to carry the boat.
And when I asked him where he would be going fishing ??? He didn't plan anything. So I took him to the camping section and sold him a six sleeper camper tent.
And then he took groceries worth $ 200 and 2 cases of beer.
Now the boss took 2 steps back and asked :- *You sold all this to the man who came just to buy only 1 fish hook*???
Bhayrtiya : "NO, SIR..." *He ONLY Came to Buy 1 Tablet For his Headache.... I Explained to him that Fishing is the Best Way to Get Rid of Headaches.*
Boss : Where did you work before ???
Bhayrtiya : Yes, I was a PRO in a private hospital in Bharat : *On any Minor Complaint, We Get the Patients Tested for Pathology, ECO, ECG, TMT, CT SCAN, X-Ray, MRI etc*.
Boss : Will You please sit in my chair?. I shall go to India and join a Private Hospital for Training.

Thursday, April 24, 2025

Story on Logic - persons coming out from coal chimney

● அந்த இளைஞன் மெத்தப் படித்தவன். 
ஊரே அவனை ஜீனியஸ் என்றும் மேதாவி என்றும் கொண்டாடுகிறது.

அவன் ஒரு நாள் தன் குருவிடம் சென்றான். "குருஜி! நான் வேதங்களைப் படிக்க விரும்புகிறேன்" என்றான்.

"உனக்கு சம்ஸ்க்ருதம் தெரியுமா?" 
என்று கேட்டார் குருஜி.

இளைஞன் : "எனக்குத் தெரியாது."

குருஜி :"சரி, அது போகட்டும், இந்திய தத்துவமாவது நீ படித்திருக்கிறாயா?"

உரையாடல் தொடர்ந்தது.

"இல்லை. தத்துவம் எதையும் நான் படிக்கவில்லை. ஆனால் அதற்கும் மேலாக ஹார்வர்டில் தர்க்கம்.. அது தான் லாஜிக் பற்றி படித்து டாக்டர் பட்டம் பெற்றேன். இப்போது கொஞ்சம் வேதமும் படிக்கலாமே என்று உங்களிடம் வந்தேன்."

"வேதம் படிக்க நீ தயாராக இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. மிக ஆழ்ந்த ஞான அறிவைக் கொண்டது அது. இருந்தாலும் உன் ஆசையை நான் பெரிதும் மெச்சுகிறேன். நீ படித்த தர்க்கம் – அது தான் ஹார்வர்டில் பெரிய பட்டம் வாங்கி இருக்கிறாயே – அதைக் கொஞ்சம் சோதித்துப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். நீ தர்க்கத்தில், எனது சோதனையில் தேறி விட்டால் உடனே வேதத்தை ஆரம்பிக்கலாம், சரியா?"

"பூ! இவ்வளவு தானா! லாஜிக்கில் நான் தான் மாஸ்டர். என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளுங்கள். ஹார்வர்ட் ஆன்ஸர் தயார்!"

குருஜி இரண்டு விரல்களைக் காட்டினார்.இதோ பார்! இரண்டு பேர்கள்! இவர்கள் இருவரும் ஒரு புகைக்கூண்டிலிருந்ந்து இறங்கி வந்தனர்.ஒருவன் முகம் கரி படிந்திருந்தது. இன்னொருவன் முகம் சுத்தமாக இருந்தது. இந்த இருவரில் யார் முதலில் முகத்தைக் கழுவிக் கொள்வான்?"

ஹார்வர்டு மாஸ்டர் டிகிரிக்கு ஒரே சிரிப்பாக வந்தது. இது ஒரு கேள்வியா?

குருவைப் பார்த்தான், ஏளனம் தொனிக்க, " இது லாஜிக் டெஸ்டுக்குத் தகுதியான கேள்வி தானா, சொல்லுங்கள் குருஜி!" என்றான்.

குருஜி சொன்னார்: "அது கிடக்கட்டும், பதிலைச் சொல்லேன், மாஸ்டர்!"

இளைஞன்: "எவன் முகம் கரி படிந்திருக்கிறதோ அவன் தான் முதலில் முகத்தைக் கழுவுவான்."

குருஜி : "தப்பு! சுத்தமாக இருக்கும் முகத்தைக் கொண்டவனே முதலில் முகத்தைக் கழுவுவான். ஏனெனில் கரி பூசிய முகத்தோடு இருப்பவன் சுத்தமான முகத்தைக் கொண்டிருப்பவனைப் பார்த்து தானும் சுத்தமாக இருப்பதாக நினைத்துக் கொள்வான். ஆகவே அவன் முகம் கழுவ மாட்டான். ஆனால் சுத்தமான முகத்தை உடையவனோ கரி பூசிய முகம் கொண்டிருப்பவனைப் பார்த்து தன் முகமும் இப்படி கோரமாக இருக்கும் என்று நினைத்து முதலில் முகம் கழுவப் போவான்!"

இளைஞனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. "சரி இன்னொரு கேள்வி கேளுங்கள், குருஜி! இந்த முறை சரியாக பதிலைச் சொல்கிறேன்"

"சரி, இதோ எனது கேள்வி! இரண்டு பேர்கள் ஒரு புகைக்கூண்டிலிருந்ந்து இறங்கி வந்தனர்.ஒருவன் முகம் கரி படிந்திருந்தது. இன்னொருவன் முகம் சுத்தமாக இருந்தது. இந்த இருவரில் யார் முதலில் முகத்தைக் கழுவிக் கொள்வான்?"

"அது தான், ஏற்கனவே பதில் இருக்கிறதே! யார் முகம் சுத்தமாக இருக்கிறதோ அவன் தான் முதலில் முகம் கழுவச் செல்வான்!"

"தப்பு! இருவருமே முதலில் முகம் கழுவச் செல்வர். சுத்தமாக இருக்கும் முகத்தைக் கொண்டவனை கரி பிடித்த முகம் கொண்டவன் பார்த்து தனது முகம் சுத்தம் என்று நினைப்பான். கரி பிடித்த முகத்தைக் கொண்டவனைப் பார்த்து சுத்தமாக இருக்கும் முகத்தைக் கொண்டவன் தன் முகமும் கரி பிடித்திருக்கிறது என்று நினைப்பான். ஆகவே சுத்தமாக இருக்கும் முகத்தைக் கொண்டவன் தன் முகத்தைக் கழுவச் செல்வான். அவனைப் பார்த்த கரிபிடித்த முகக்காரனும் தன் முகத்தைக் கழுவச் செல்வான். இருவருமே தங்கள் முகத்தைக் கழுவிக் கொள்வர்!"

"இப்படி நான் நினைக்கவில்லையே! தர்க்கத்தில் இப்படி ஒரு தப்பை நான் செய்வேன் என்று நினைக்கவே இல்லை, குருஜி, தயவு செய்து இன்னும் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டு என்னைச் சோதியுங்கள்!"

"சரி, இதோ எனது கேள்வி! இரண்டு பேர்கள் ஒரு புகைக்கூண்டிலிருந்ந்து இறங்கி வந்தனர்.ஒருவன் முகம் கரி படிந்திருந்தது. இன்னொருவன் முகம் சுத்தமாக இருந்தது. இந்த இருவரில் யார் முதலில் முகத்தைக் கழுவிக் கொள்வான்?"

"இரண்டு பேருமே தங்கள் முகத்தைக் கழுவிக் கொள்வர்."

தப்பு! இருவரில் யாருமே தங்கள் முகத்தைக் கழுவிக் கொள்ள மாட்டார்கள்! கரி பிடித்த முகம் கொண்டவன் சுத்தமான முகம் கொண்டவனைப் பார்த்து தானும் அதே போல் இருப்பதாக நினைப்பதால் அவன் முகம் கழுவச் செல்ல மாட்டான். சுத்தமான முகம் கொண்டவன் கரி பிடித்த முகக் காரனைப் பார்த்து அவனே தன் முகத்தைக் கழுவச் செல்லாத போது தான் ஏன் முகம் கழுவச் செல்ல வேண்டும் என்று நினைத்து சும்மா இருப்பான். ஆகவே இருவருமே சும்மா தான் இருப்பார்கள்!"

ஹார்வர்ட் மாஸ்டர் வெறுத்துப் போனான். தன் படிப்பு என்ன ஒரு படிப்பு என்று அவனுக்குத் தோன்றியது; "குருஜி! கடைசி சான்ஸ்! தயவு செய்து கடைசி கடைசியாக ஒரே ஒரு முறை ஒரு கேள்வியைக் கேளுங்களேன்!"

"சரி, இதோ எனது கேள்வி! 
இரண்டு பேர்கள் ஒரு புகைக்கூண்டிலிருந்ந்து இறங்கி வந்தனர்.ஒருவன் முகம் கரி படிந்திருந்தது. இன்னொருவன் முகம் சுத்தமாக இருந்தது. இந்த இருவரில் யார் முதலில் முகத்தைக் கழுவிக் கொள்வான்?"

இளைஞன் நன்கு முழித்துக் கொண்டான். பெருமையாக, "இருவருமே முகம் கழுவிக் கொள்ள மாட்டார்கள்" என்றான்.

குருஜி சிரித்தார் :"தப்பு! உனது தர்க்க அறிவு ஏன் வேதம் படிக்கப் போதாது என்று கூறுகிறேன் என்பதை எண்ணிப் பார்! ஒரே புகைக் கூண்டிலிருந்து ஒரே சமயத்தில் இறங்கும் இருவரில் ஒருவன் முகத்தில் மட்டும் கரி படிந்திருக்கும், இன்னொருவன் முகம் சுத்தமாக இருக்கும் என்பதை நீ நம்புகிறாயா? அது சாத்தியம் தானா?! 

இந்தக் கேள்வியே சுத்த மடத்தனமான கேள்வி! அதைச் சுட்டிக் காட்டுவதற்கு பதில் விடை வேறு கூறிக் கொண்டிருக்கிறாய்! இப்படி உனது வாழ்க்கை முழுவதும் முட்டாள்தனமான கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் நீ வேதம் படிக்கத் தகுதியானவன் தானா! உண்மையில் எண்ணிப் பார்த்துப் பதிலைச் சொல்! நீ தகுதியானவன் தானா?!

இளைஞன் விக்கித்துப் போனான்.

Gems in Ramayana

ராமாயண ரத்தினங்கள் : ரத்தினம் : 1

ஓம் கம் கணபதியாய நமஹ

வால்மீகி : (Re-Post)

திரேதா யுகம் :

"அயோத்யாவை ஒட்டிய அடர்ந்த வனப்பகுதியில் "ரத்னாகர்" என்னும் கொள்ளையன் வாழ்ந்து வந்தான்... வனத்தின் வழியாக செல்லும் யாத்ரீகர்களை கொன்று அவர்களின் செல்வங்களை கொள்ளையிட்டு வாழ்ந்து வந்தான்...

நாரத மகரிஷி அவ்வழியே பயனித்த போது, அவரைத் தடுத்தான் ரத்னாகர்,

ரத்னாகர் : ஏய் உன்கிட்ட இருக்கிறத எல்லாம் என்கிட்ட கொடுத்துடு, உன்ன உயிரோடு விட்டுரேன்"

நாரதர் : "ஏனப்பா, நானோ ஒரு முனிவன், உன்னிடம் கொடுக்க, என்னிடம் என்ன இருக்கிறது? என்னை விட்டு விடு...

ரத்னாகர் : அதெல்லாம் விட முடியாது, என் அப்பா, அம்மா, பொண்டாட்டி, பிள்ளைங்க, எல்லாம் சாப்பிட்டு 3 நாளாச்சி, உன்கிட்ட இருந்து எதாச்சும் கொண்டு போனாதான் இன்னைக்கு எங்களுக்கு சாப்பாடு, அதனால மரியாதையா உன்கிட்ட இருக்கிறத குடுத்துடு, இல்ல உன்ன கொன்னுடுவேன்...

"உன்னிடம் இருப்பதை கொடு, உன்னிடம் இருப்பதைகொடு , என்று கேட்கும், கொள்ளையன் ரத்னாகரை பார்க்கும் போது ஏனோ பரிதாபம் தோன்றியது நாரதருக்கு... எனவே, தன்னிடம் இருக்கும் ஞானத்தை அவனுக்கு தர முடிவெடுத்தார், "ரத்னாகரா, நீ வேண்டியபடி என்னிடம் இருக்கும் மிக உயர்ந்த ஒன்றை உனக்கு தருகிறேன், ஆனால் அதற்கு முன் என் கேள்விகளுக்கு பதிலளி...

ரத்னாகர் : என்ன கேள்வி? சீக்கிரம் கேளும்...

நாரதர் : கொள்ளை அடிக்கும் பொருளை என்ன செய்வாய்?

ரத்னாகர் : என் குடும்பத்தினரோடு பங்கிட்டு உண்பேன்...

நாரதர் : அப்படியா? சரி கொள்ளையடித்த பொருளை பங்கிட்டு கொள்ளும் உன் குடும்பத்தார், கொலை, கொள்ளையால், உன் தலையில் நீ சுமந்திருக்கும் பாவ மூட்டையையும் பங்கிட்டு கொள்வார்களா?

ரத்னாகர் : யோவ் முனிவரே, என்ன கேள்வி இது? செல்வத்தை, சுகத்தை பங்கிட்டு, பெற்றுக் கொள்பவர்கள், பாவத்தை பெற்று கொள்ள மறுப்பார்களா? நிச்சயம் நான் செய்கின்ற பாவங்களின் பங்கையும் பெற்றுக் கொள்வார்கள்...

நாரதர் : நிச்சயமாகத்தான் சொல்கிறாயா?

ரத்னாகர் : ஆம், கண்டிப்பாக பெற்றுக் கொள்வார்கள், அதிலென்ன சந்தேகம்? முதலில் உன்னிடம் இருப்பதை கொடு...

நாரதர் : இல்லை ரத்னாகரா, எதற்கும் அவர்களிடம் கேட்டுவிடேன், நீ சென்று கேட்டு வா, நான் இங்கேயே காத்திருக்கிறேன்...

ரத்னாகர் : ஓஹோ! நான் அந்த பக்கம் சென்றதும் இந்தப் பக்கம் ஓட திட்டமிடுகின்றாயா?

நாரதர் : நிச்சயமாக இல்லை, நான் இங்கேயே உனக்காக காத்திருப்பேன்...

ரத்னாகர் : யோவ்! உம்மை நம்ப முடியாதய்யா, நீர் ஒடிவிட்டால்?

நாரதர் : ரத்னாகரா! நான் ஒரு முனிவன், கொடுத்த வாக்கை மீற மாட்டேன், அதோடு இன்று, இங்கு எனக்கு நிறைய வேலையிருக்கிறது, எனவே சென்று வா...

ஒரு முடிவோடு கூறினார் நாரத மகரிஷி...

ரத்னாகரன் சென்று குடும்பத்தாரிடம் கேட்டான் , "நான் உங்களுக்காக கொள்ளையடிக்கிறேன், வழிப்பறி செய்கிறேன், அதனால் ஏற்படும் பாவத்தை பங்கிட்டு கொள்வீர்களா?

பெற்றோர் : மகனே, உன்னை பெற்று, சிறு வயதில் இருந்து வளர்த்து இருக்கிறோம், அதற்கு பிரதி உபகாரமாகவே, நீ இப்போது எங்களை காப்பாற்றுகிறாய், இது உன் கடமை, எனவே நீ உன் கடமையை செய்வதனால் ஏற்படும் பாபத்தை நாங்கள் பங்கிட மாட்டோம்...

மனைவி :
என்னை காப்பதாக வாக்களித்து மணம் புரிந்தீர், எனவே தமது பாவங்களில் எனக்கு பங்கில்லை.

பிள்ளைகள் :
இன்று எம்மை நீர் ஆதரித்தால், நாளை உமக்கு முதுமை வரும் காலத்தில், உம்மை நாங்கள் ஆதரிப்போம், எனவே நீர் செய்யும் பாவங்களில் நாங்கள் பங்கேற்கமாட்டோம்...

அனைத்தையும் கேட்டு அதிர்ந்தான் ரத்னாகர், பூமியே பாதத்திலிருந்து நழுவுவது போல இருந்தது... எந்த குடும்பத்தின் நலனுக்காக ஊரை கொள்ளையடித்தானோ, அதர்மங்களை புரிந்தானோ, அக்குடும்ப உறுப்பினர்கள், அவன் செய்த பாவங்களில் பங்கேற்க மறுத்துவிட்டனர்... இதுவே நிதர்சனம்...

ரத்னாகர் கண்ணீருடன் திரும்பி வருவதை கண்ட நாரத மகரிஷிக்கு எல்லாம் தெளிவாக விளங்கியது... ரத்னாகர், மனமொடிந்து, "சாமி! நீங்க சொன்னது நெசந்தான்னு எனக்கு இப்பதான் புரியுது, என்னை காப்பாத்துங்க" என்று நெடுஞ்சான்கிடையாக மகிரிஷி நாரதர் காலில் விழுந்தான், பாதம் பணிந்தவனுக்கு, முன்னர் கூறியபடி, தன்னிடமிருந்த ஞானத்தை வழங்கிட எண்ணினார், ஆம் கிடைத்தற்கரிய, மோட்சம் தரவல்ல மந்திரமான "ராமா " நாமத்தை உபதேசித்தார், ஆனால் ரத்னாகர் அதுவரை செய்த பாபாங்களின் விளைவால், அவனால் புனிதமான "ராம" நாமத்தை மனத்தில் இருத்தவோ, உச்சரிக்கவோ இயலவில்லை...

எனவே, நாரத மகரிஷி, ரத்னாகரனுக்கு, "மரா மரா" என்று தொடர்ந்து உச்சரிக்குமாறு அறிவுறுத்தினார்... ஆம், ரத்னாகரனின் கர்ம வினையை, தன் புத்தியால் வென்றார்... "மரா மரா" என்று சொல்லும் போது நாளடைவில் அது "ராம ராம" என்று மாறிவிடும்...

நாரதர் சென்ற பின், மரத்தடியில் அமர்ந்து, தொடர்ந்து ஜபித்தார், பல நூறு ஆண்டுகள் கழிந்தது, ரத்னாகரரை சுற்றி புற்று வளர்ந்தது, தவம் தொடர்ந்தது...

இறுதியில், பிரம்மதேவர் தோன்றினார், ரத்னாகர், புற்றை பிளந்து கொண்டு எழுந்த போது, "வால்மீகி " என்றார் பிரம்மதேவர், (சமஸ்கிருதத்தில், எறும்பு புற்றுக்கு, வால்மீகம் என்று அர்த்தம், புற்றை பிளந்து, பூமியின் மைந்தனாக மறுபிறப்பு போல தோன்றியமையால் வால்மீகி என்றழைக்கப்படுகிறார்...)

பின், பிரம்மதேவர் வால்மீகி மகரிஷிக்கு, முக்காலமும் உணரும் வரத்தோடு, இராமாயணத்தை இயற்றும் வாய்ப்பையும் வழங்கினார்...

இராமன் அவதரிப்பதற்க்கு பல காலம் முன்பே, இராமயணத்தை இயற்ற துவங்கினார், மகரிஷி வால்மீகி...

ஜெய் ஸ்ரீ ராம்...

எழுத்து : பாலமுருகன் ராமமூர்த்தி...😍

Wednesday, April 23, 2025

Who is a 'Bhaagavatottama?'

Who is a 'Bhaagavatottama?' (Supreme devotee of God)

In this chapter of the Narada Purana, Lord Srihari replies to a question of Markandeya:

नारदपुराणम्- पूर्वार्धः/अध्यायः ५

After listing noble traits such as pure conduct, human values, etc. the traits of a Bhagavatottama, supreme devotee of God, are stated: 

शिवप्रियाः शिवासक्ताः शिवपादार्च्चने रताः
त्रिपुण्ड्रधारिणो ये च ते वै भागवतोत्तमाः ६८

He who loves Shiva, is fully devoted, delights in the worship of Shiva, dons the Tripundra (Bhasma on the forehead, etc.) is a Bhagavatottama.

व्याहरन्ति च नामानि हरेः शम्भोर्महात्मनः
रुद्राक्षालंकृता ये च ते वै भागवतोत्तमाः ६९

Those who chant the divine names of Hari and Hara, adorned with the Rudraksha necklace is a Bhagavatottama.

ये यजन्ति महादेवं क्रतुभिर्बहुदक्षिणैः
हरिं वा परया भक्त्या ते वै भागवतोत्तमाः ७०

Those who perform vedic sacrifices with copious dakshina (gifts/fees to scholars) addressed to Hari or Hara with great devotion are Bhagavatottamas.

शिवे च परमेशे च विष्णौ च परमात्मनि
समबुद्ध्या प्रवर्त्तन्ते ते वै भागवताः स्मृताः ७२

Those who conduct themselves with the idea of non-difference between Hari and Hara are Bhagavatas.


शिवाग्निकार्यनिरताः पञ्चाक्षरजपे रताः
शिवध्यानरता ये च ते वै भागवतोत्तमाः ७३

Those who are involved in fire-sacrifices addressed to Shiva, delight in the chanting of the Panchakshara and revel in the meditation on Shiva are Bhagavatottamas. 


In the Padmapurana while eulogising the greatness of the 12th canto of the Bhagavatam it is said that those who do not differentiate between Hari, Hara and Durga and look upon the Triad as Para Brahman are Vaishnavottamas: Greatest devotees of Vishnu. 

In the Kapila Upa Purana, 21st chapter, the non-difference of Hari and Hara is emphatically stated along with the censure of the idea of difference between the two and that the Moksha Jnana that is stated in this chapter should not be given out to 'non-Vaishnavas'. From this it is implied that those who differentiate between Hari and Hara are not Vaishnavas.  

In the Mahabhashya of Patanjali (Vyakarana shaastra) there is the mention of the word 'Shiva-Bhagavata' as a compound word, as an example for a type of samasa (compound words). A Bhagavata is a devotee of Bhagavan. A Shiva-Bhagavata is a devotee of Bhagavan Shiva. https://tinyurl.com/2p8hpwkw

Theme courtesy: Gowtham Kalidass in FB

Sanskrit conversation is shoe shop

जूता दूकान में
------------------
जितेन्द्र = क्या आप एक्शन कम्पनी का कपड़े का जूते बेचते हैं ?
(अपि भवान् एक्शन इति नाम्नः पटोपानहं विक्रीणाति ?)
----
दुकानदार= हां,महाशय।आपको किस नाप के चाहिए ?और आपको कौन-सा रंग पसंद है?
(आपणिक: = आम्।महाशय! भवते किं मानम् आवश्यकम्?तथा भवते किं वर्णं रोचते ?)
---------
जितेन्द्र= मुझे छह नम्बर के चाहिए।और जहां तक रंग की बात है , मुझे काला रंग पसंद है।
= ( मह्यं षट्संख्यकम् आवश्यकम्।यतो रङ्गस्य प्रश्नस्य प्रश्नोऽस्ति , मह्यं कृष्णवर्णं इष्टम् ।)
-------
दुकानदार = यह रही आपकी पसंद।
(तवेष्टा अत्रास्ति)
-------
जितेन्द्र =आह!यह जूता जरा टाइट हो रहा है ।
(अह!एतद् उपानहद्वयं तु किञ्चित् निबिडयति)
-----------
दुकानदार = ठीक है। और दूसरा जोड़ा देखिए।
(अस्तु।इतोऽपि अन्यम् उपानहद्वयं परीक्ष्य अवलोकयतु।)
---------
जितेन्द्र = बहुत अच्छा।यह जूता तो मेरे पैर में अच्छी तरह से फिट बैठ रहा है।इस जोड़े की कीमत क्या है?
(शोभनम्।एतत् उपानहद्वयं तु मम पादाभ्यां पूर्णतया उपयुक्तम्।एतस्य उपानहद्वयस्य मूल्यं किम् ?)
------
दुकानदार = बस पांच सौ साठ रुपए।
(केवलानि षष्ट्याधिकं पञ्चशातानि रुप्यकाणि।)
-----
जितेन्द्र = ठीक है।इसे पैक कर दीजिए।
(अस्तु।एनं पोट्टलीकरोतु)

Tuesday, April 22, 2025

Mobile phone - accused

*நான் குற்றவாளியா?*

கைபேசியான என்மீது குற்றம் சொல்லிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு நீங்கள் 
குற்றம் செய்யாமல் 
இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

நீங்கள் "பேசிக்கொள்வீர்கள்"
என்று தான் நான் நினைத்தேன்! 
நீங்கள் "பேசியே! கொல்வீர்கள்" என்று நான் நினைக்கவே இல்லை.

"பொழுதுபோக்காக" என்னில் சில இருப்பது உண்மைதான்.
ஆனால் நீங்கள் அதில் 
"பொழுதையே! போக்கினால்" 
அதற்கு நான் பொறுப்பல்ல.

கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று பேசுவீர்கள். அதெல்லாம்
வெறும் வாய் சொல்தானா?

குடும்பத்தோடு "பாசப்படங்கள்"
எடுத்து மகிழ்ச்சியடைய சொன்னால் "ஆபாசப்படங்களை" பார்த்து மகிழ்ந்தால் உங்களுடைய 
ஆறாவது அறிவு எங்கே ? எதற்கு ?

பிள்ளைகள் விளையாட்டு விளையாடுவதால் படிப்பு கெட்டுப்போகிறது என்று குற்றங்களை என் மீது கொட்டுபவர்களே அன்று குழந்தை பருவத்தில் நிலாவைக்காட்டி
மலர்களைக்காட்டி பாடிக்காட்டி ஆடிக்காட்டி பாலும் சோறும்
ஊட்டினார்கள்.
நீங்களோ உங்களுடைய 
சோம்பேறித்தனத்தால் "என்னை காட்டி சோறும் பாலும் ஊட்டி
கெட்ட பழக்க வழக்கங்களை 
கற்று கொடுக்கின்றீர்கள்.
"தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை" என்பது உங்களுக்கு தெரியாதா என்ன ?

என்னுடைய நன்மைகளை நான் சொல்கிறேன் கொஞ்சம் கேளுங்கள்.
 
என்னில் கடிகாரம் இருக்கும் 
கட்டவேண்டியதில்லை.

காலண்டர் இருக்கும் 
கிழிக்க வேண்டியில்லை.
 
கேமரா இருக்கும் ஃபிலிம் போட 
வேண்டியில்லை.
 
மின் விளக்கு இருக்கும் மின்சாரக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
 
பாட்டு கேட்கலாம் 
கேசட் போட வேண்டியில்லை.
 
கால்குலேட்டர் பயன்படுத்தலாம்
சக்தி தேவையில்லை.
 
வழி காட்டுவேன். யாரிடமும் கேட்க 
வேண்டியதில்லை.
 
பணம் அனுப்புவேன் கூலி கொடுக்க 
வேண்டியதில்லை.
 
தகவல்களை அனுப்பி வைப்பேன் 
தேடிச்செல்ல வேண்டியதில்லை.

அவசரத்துக்கு மட்டுமல்ல அன்றாடம் உதவிகளையும் செய்வேன்
ஆனால் உங்களிடம் நன்றியகை்கூட 
நான் எதிர்பார்ப்பதில்லை.
"சொல்லும் நேரத்திற்கு 
எழுப்பி விடுவேன்"
என்றுமே தவறியதில்லை.
 நினைவுப்படுத்த சொன்னதை
"நினைவுபடுத்துவேன்" 
என்றுமே மறந்ததில்லை.

உங்களுக்கு ஒன்று தெரியுமா ?
காவலர்களுக்குப் பயப்படாத 
அரசியல்வாதிகளும்சமூக விரோதிகளும் அதிகாரிகளும் கூட 
என்னில் இருக்கும் சமூக ஊடங்களுக்கு பயப்படுவார்கள் 
தெரிந்து கொள்ளுங்கள்.

"பகுதி நேர வேலை" வாய்ப்பைக்கூட 
ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறேன் 
கொஞ்சம் பார்த்து பேசுங்கள்.

எதில் இல்லை தீமை? 
மின்சாரத்தை தவறாகத்தீண்டினால் 
மரணத்தை ஏற்படுத்தவில்லையா? 
நெருப்பை தவறாக பயன்படுத்தினால் எதுவானாலும் எரித்து சாம்பலாக்கவில்லையா? 
வெள்ளமாக வரும் தண்ணீர்
ஊரையே அடித்துச்செல்ல வில்லையா?
பொறுமைக்கு உவமையாக சொல்லும் பூமியே! 
நிலநடுக்கத்தால் 
புதைக்குழியாகவில்லையா?

அளவுக்கு மீறி உண்டால் உணவே 
ஆளைக்கொல்லவில்லையா? 

"ஆறறிவு" படைத்தான் என்று மார்பு தட்டிக் கொள்ளும் நீ "ஓறறிவு" கூட இல்லாத நான் குற்றம் செய்வதாக
சொல்கிறாய். உன்னை நினைத்து 
அழுவதா சிரிப்பதா என்றே
தெரியவில்லை.

வாகனம் ஒரு மனிதனின் மீது 
மோதிவிட்டால் வாகனத்தைத்தானே 
கைது செய்ய வேண்டும் ?
ஏன் வாகனத்தை இயக்கிய
 ஓட்டுநரை கைது செய்கின்றீர்கள் ?
அப்படி என்றால் 
நான் குற்றவாளியா?
என்னை இயக்கும் 
*நீங்கள் குற்றவாளியா......*