Saturday, October 18, 2025

Thula snaan

துலா ஸ்னானம் -  


துவங்கும் ஐப்பசி மாதத்தில் 
ஸூர்யன் துலா ராசியில் சஞ்சரிப்பதால் 
ஐப்பசி துலா மாதம் எனப்படுகிறது.

இதில் விசேஷம் என்னவென்றால் 
வடக்கே உள்ள பெரிய ஜீவநதிகளான  
கங்கை யமுனை கோதாவரீ முதலிய 
அனைத்து புண்ய நீர்களும் தெற்கே  
காவேரிக்கு வந்து ஐக்யமாகிறது.  
சும்மா வரவில்லை. கங்கா யமுனா 
கோதாவரி எல்லாம் அவர்களது  
பாபங்களை போக்கிக்கொள்ள 
காவேரியில் ஸ்னானம் பண்ண 
வருகிறார்கள். 

ஆகவே ஐப்பசி 30 நாளும் காவேரியில்
 முறைப்படி ஸ்னானம் செய்து நமது  
பாபங்களை போக்கிக்கொள்ள வழி 
இருக்கிறது.  

பாபம் போவது இருக்கட்டும். 
முதலில் மன நிம்மதி பெறலாம்.  
மாயவரம், திருச்சி ஸ்ரீரங்கம் போன்ற 
காவேரி நதி தீரத்தில் வசிப்பவர்களுக்கு 
யோகம். நாம் முடிந்தால் போய் வரலாம்.  
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்திலிருந்து 
தங்க குடத்தில் ஜலம் எடுத்து 
ரங்கநாதருக்கு துலா ஸ்னான 
அபிஷேகம் நடக்கிறது. 

மாயவரத்தில் காவிரிக்கரையில் 
துலா கட்டம் இருக்கிறது. சுற்று
வட்டார எல்லாக் கோயில்களிலும்  
உள்ள உத்ஸவ மூர்த்திகள் தீர்த்த
வாரிக்காகக் காவிரிக்கு வருவார்கள்.  
ஆகவே பக்தர்கள் கூட்டத்துக்கு 
கேட்கவே வேண்டாம். திருச்சியில் 
அம்மா மண்டபத்திலும் எண்ணற்ற 
பக்தர்கள் குழுமுவார்கள்.  

ஐப்பசி முழுதும் காவேரி ஸ்னானம்
 கங்கா ஸ்நானத்தை விட அதிக 
புண்யம் வாய்ந்ததாகிறது. 
கங்கையும் காவேரியோடு இணைந்து
விடுகிறாளே.

காவேரி துலா ஸ்னானம் பண்ணும்
போது சொல்கிற ஒரு மந்திரம்; 

नमस्ते तटितां मुख्ये निगमागम सम्स्तुते 
पापकायं पारिशुध्यं आयुरारोग्य मेव च । 
सौभाग्यमपि सन्तानं ज्ञानं देहि मरुदूधे ।।

நமஸ்தே தடிதாம் முக்2யே 
   நிக3 மாக3ம ஸம்ஸ்துதே
பாபகாயம் பாரிசு'த்4யம் 
    ஆயுராரோக்2ய மேவ ச
ஸௌபா4க்2யமபி ஸந்தானம் 
   க்ஞானம் தே3ஹி மருத்3 வ்ருதே4

நதிகளில் புண்யம் மிகுந்த 
காவேரியம்மா, வேத மந்த்ரங்கள்
 போற்றும் காவேரி மாதா,  
பாபங்கள் நிறைந்த என்னுடை 
தேகத்தையம், உன்னை பருகும்
போது என்னுள்ளே இருக்கும்  
பாபங்களையும் போக்கி 
பரிசுத்தமாக்கி அருள்வாய்.

मरुद्र्धे महादेवि महाभागे मनोहरे ।
श्री कावेरि नमस्तुभ्यं मम पापं व्यपोहय

மருத்3 வ்ருதே4! மஹாதே3வி ! 
மஹாபா4கே3! மநோஹரே! 
ஸ்ரீகாவேரி! நமஸ்துப்4யம் 
மமபாபம் வ்யபோஹய

சௌபாக்கியவாதி ஸ்ரீ காவேரி 
மாதா, உன்னை ஸ்னானம் செய்து 
நமஸ்கரிக்கிறேன். என் சகல 
பாபங்களையும் போக்கி அருள்வாய். 

" நமஸ்தே தவிதாம் முக்யே 
நிகமாகம ஸம்ஸ்துதே   
பாபகாயம் பாரிஸூத்யம் 
ஆயுராரோக்ய மேவ ச
ஸெளபாக்யமநி ஸந்தானம்
 க்ஞானம் தேஹி மருத்வ்ருதே"

எங்களுக்கு பாபத்தை போக்குவதோடு,  
பரிசுத்தம் பெற, ஆயுள், ஆரோக்கியம் 
பெற, சகல சௌபாக்யங்களோடு வாழ,  
சந்தான அபிவிருத்தி பெற, ஞானம் 
பெற அருள்வாய் தாயே. '' 

குளிக்கும்போதே எல்லாவற்றுக்கும் 
தலை முழுகிவிட்டு நல்லதையே  
பிடித்துக் கொள்ள அருமையான 
மந்திரம்அல்லவா ?  

துலா என்றால் தராசு, இப்போதுள்ள 
 டிஜிட்டல் எடை வருவதற்கு முன்  
பழங்காலத் தில், கடைகளில்  
ரெண்டு பக்கம் தட்டுகள் கொண்ட 
தராசு மேலே தராசுக்கோல் நடுவில் 
முள்ளோடு ரெண்டுபக்கம் சரி 
சமமாக காட்டும். ஒரு தட்டில் எடைக்கல் , 
மற்றொரு தட்டில் நமக்கு தேவையான 
பொருள். கண்ணெதிரில் சரியான 
எடையில் கிடைக்கும். 

துலாம் மாசம்,இரவு பகல் ரெண்டுமே 
சரி சமமாக தலா 12 மணி நேரம் 
கிடைக்கும். 

கங்கை யமுனை கோதாவரி தவிர 
ஈரேழு பதினான்கு லோகங்களிலும்
 உள்ள ஆறு கோடி தீர்த்தங்களும் 
ஐப்பசி மாதத்தில் காவிரியில் வந்து
 கலப்பதாக ஐதீகம்.

ஐப்பசி மாத 30 நாட்களும் காவேரி 
ஸ்னானம் பண்ண கொடுத்து 
வைத்தவர்கள் அஸ்வமேத யாகம் 
பண்ணிய பலன் பெற்றவர்கள்.  
நம்மால் வணங்கத்தக்கவர்கள் 
என்று தோன்றுகிறது.  

ஐப்பசியின் அனைத்து நாட்களிலும் 
காவிரியில் நீராடினால் அஸ்வமேத 
யாகம் செய்த பலன் கிடைக்கும்.  
விடிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் 
ஸ்னானம் பண்ணினாள் மஹா 
விஷ்ணுவின் அருள் பெறலாம்.

 ஐப்பசி மாதத்தில் காவிரி கரையில் 
முன்னோர்களுக்கு செய்யப்படும்  
தர்ப்பணம், சிராத்தம், பிண்ட 
தானம், ஆகியவை கல்ப கோடி 
வர்ஷபர்யந்தம் பித்ருக்களை 
திருப்திபடுத்தக் கூடியதாகும்.

ஐப்பசி துலா ஸ்னானம் நாம் 
மட்டும் பண்ணவில்லை. சிவன், 
பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்
மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி 
தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும், 
சித்தர்களும் காவிரியில் சூரிய 
உதயத்துக்கு முன்பே ஸ்நானம் 
பண்ணுகிறார்கள். 

 சரஸ்வதி, லட்சுமி, கெளரி, 
இந்திராணி என்று பல தேவியரும்   
இங்கே நம்மோடு காவேரி 
ஸ்னானம் பண்ணுகிறார்கள். 

கூட்டம் ரொம்ப ஜாஸ்தி.

ஐப்பசி 1ம் தேதி திருப்பராய்த்
துறையிலும், ஐப்பசியின் கடைசி
 நாளில் மயிலாடுதுறையிலும் 
காவிரியில் நீராடுவது மிகவும் 
விசேஷமான பலனை தரக் 
கூடியதாகும். நம்மைப்போல் 
முப்பது நாளும் ஸ்னானம் பண்ண 
முடியாதவர்கள் ஒரு மூன்று நாலாவது
 காவேரி ஸ்னானம் பண்ணலாம். 
இன்னொரு வழியும் உண்டு. 
ஐப்பசி கடைசி நாள் அன்றாவது  
துலா ஸ்னானம் பண்ணலாம். 
கடைமுகம், என்று அதற்கு பெயர்.

அதுவும் முடியாத பொது ஒரு நாள்  
அதிகப்படி எக்ஸ்டென்ஷன் கூட  
இருக்கிறது. கார்த்திகை முதல் நாள். 
அதற்கு முடவன் முழுக்கு என்று பெயர்.  

அதற்கு பின்னால் ஒரு கதை ;

எல்லோரும் காவேரி ஸ்னானம் 
பண்ண போகிறார்களே நாமும் 
பண்ணவேண்டாமா என்று வயதான 
முடவருக்கு ஆசை. அவர் இருந்த 
கிராமம் மாயவரத்துக்கு ரொம்ப 
தூரம். கால் ஊனமுற்ற அவர் எந்த 
வண்டியில் வந்து சேர்வார். மெதுவாக 
நொண்டி நொண்டி நடந்தே வந்தார்.  
அவர் வரும் நத்தை வேகத்தில்  
ஐப்பசி மாதமே முடிந்து போய்விட்டது. 
 ஒருவழியாகி காவேரி கரைக்கு 
வந்தபோது கார்த்திகை முதல் தேதி.  

''அம்மா காவேரி, கடை முழுக்காவது 
கிடைக்கும் என்று ஆசைப்பட்டேன். 
மஹா பாவி எனக்கு, முடியாமல் 
போய்விட்டதே'' என்று அழுதார் 

''அப்பனே அழாதே நானே வெகு 
தூரத்தில் இருந்து தான் இங்கே 
வந்து காவேரி அக்காவோடு 
இணைந்தேன். நான் போகிற 
வேளையில் நீ வந்திருக்கிறாய். 
உன் மனோதிடத்தை நான் மெச்சுகிறேன். 
முடியாமல் நொண்டி நொண்டி  
நடந்து ஐப்பசி முடிவதற்குள் வர 
முயற்சித்தாய். ஒரு நாள் அதிகமாகி 
விட்டதே என்று கவலைப்படாதே. 
உனக்காக நான் ஒருநாள் இன்று 
இங்கே இருந்து நீ ஸ்னானம் 
பண்ணிய பிறகு நாளைக்குள் 
போகிறேன்.

அந்த முடவர் புண்யத்தால் நாமும்  
கார்த்திகை 1ம் தேதியாவது 
காவேரியில் முடவன் முழுக்கு 
போட்டு புண்யம் சம்பாதிக்கலாம்.

"காவேரி நமஸ்தேஸ்து, 
மகா பாவநாசினி, 
புண்யம் தத் துலா ஸ்நானே,
 ப்ரதேஹி பரமேஸ்வரி.

கங்கை ச யமுனே சைவ 
கோதாவரி சரஸ்வதி, 
நர்மதே சிந்துஹ் காவேரி 
ஜலேஸ்மின் ஸந்நிதிம் குரு"

நீரில் மூழ்குவதாக எண்ணி தலையில் 
ஒரு மக் MUG தண்ணீர் விட்டு 
நனைத்துக் கொள்வோம். அம்புட்டு
தான் நம்மால் முடிந்தது.

-------------------

No comments:

Post a Comment