Monday, October 13, 2025

Eight & seven at srirangam

எட்டும்.. ஏழும்..

அரங்கத்தில்
எட்டெழுத்து மந்திரத்தானின்
ஏழான அதிசயங்கள்..

♦️♦️

ஏழு உலகங்களை 
உள்ளடக்கியதன் பொருளாய்
ஏழு பிரகாரங்கள்
நம் அரங்கனுக்கு..

♦️♦️

பெரிய கோவில்..
பெரிய பெருமாள்..
பெரிய பிராட்டியார்..
பெரிய கருடன்..
பெரிய அவசரம்..
பெரிய திருமதில்..
பெரிய கோபுரம்..
இப்படி ஏழு பெரியவை
நம் அரங்கனின் சிறப்பு..

♦️♦️

ஸ்ரீதேவி..
பூதேவி..
துலுக்க நாச்சியார்..
சேரகுலவல்லி நாச்சியார்..
கமலவல்லி நாச்சியார்..
கோதை நாச்சியார்.. 
ரெங்கநாச்சியார்.. என
ஏழு தேவியர்கள்..
நம் அரங்கனுக்கு உண்டு!

♦️♦️

விருப்பன் திருநாள்..
வசந்த உத்சவம்..
விஜயதசமி..
வேடுபரி..
பூபதி திருநாள்..
பாரிவேட்டை.. 
ஆதி பிரம்மோத்சவம்.. என
வருடத்திற்கு ஏழுமுறைகள்
தங்கக் குதிரை வாகனத்தில்
நம்பெருமாளின் புறப்பாடு!

♦️♦️

சித்திரை.. வைகாசி..
ஆடி.. புரட்டாசி.. தை..
மாசி.. பங்குனி என
வருடத்திற்கு ஏழு முறைகள்
கோயிலை விட்டு வெளிவருவார்
நம் நம்பெருமாள்..

♦️♦️

சித்திரை.. வைகாசி..
ஆவணி.. ஐப்பசி.. தை..
மாசி.. பங்குனி என
வருடத்திற்கு ஏழுமுறைகள்
ஏழாம் திருநாளன்று
நெல்லளவு கண்டருளுவார்
நம் நம்பெருமாள்..

♦️♦️

நவராத்திரி உற்சவத்தில்
ஏழாம் திருநாளன்று
ஸ்ரீரெங்க நாச்சியாரின்
திருவடி சேவை..

♦️♦️

தமிழ் மாதத்தின்
ஏழாவது மாதமான
ஐப்பசி மாதத்தில்
முப்பது நாட்களும்
தங்கக் குடத்தில் புனித நீர்
யானை மீது வைத்து
நம் அரங்கனுக்குக்
கொண்டு வரப்படும்..

♦️♦️

இராமபிரானால்
பூஜிக்கப்பட்டவன்
நம் அரங்கன்..
இராம அவதாரம்
பெருமானின்
ஏழாவது அவதாரம்..

♦️♦️

இராப்பத்து உற்சவத்தின்
ஏழாம் திருநாளன்று
நம்பெருமாளின்
திருகைத்தலச் சேவை..

♦️♦️

கோடை உத்சவம்..
வசந்த உத்சவம்..
ஜேஷ்டாபிஷேகம்..
திருப்பாவாடை..
நவராத்திரி..
ஊஞ்சல் உத்சவம்..
அத்யயநோத்சவம்..
பங்குனி உத்திரம்.. என
அரஙகனின் நாயகிக்கு
சிறப்பான ஏழு உற்சவங்கள்..

♦️♦️

பன்னிரெண்டு ஆழ்வார்களும்
ஏழு சன்னதிகளில்..

♦️♦️

இராப்பத்து
ஏழாம் திருநாளில்
நம்மாழ்வார்
பராங்குச நாயகியாக சேவை..

♦️♦️

பெரிய பெருமாள்
திருமுக மண்டலம்
உள்ள இடமான தென் திசையில்
ஏழு கோபுரங்கள் உள்ளன..

நாழிகேட்டான் கோபுரம்..
ஆர்யபட்டாள் கோபுரம்..
கார்த்திகை கோபுரம்..
ரெங்கா ரெங்கா கோபுரம்..
தெற்கு கட்டை கோபுரம்..
தெற்கு கட்டை கோபுரம்-2..
இராஜகோபுரம்..

♦️♦️

ஏழு சேவைகள்
வருடத்திற்கு
ஒரு முறை மட்டுமே..

பூச்சாண்டி சேவை..
கற்பூர படியேற்ற சேவை..
மோகினி அலங்காரம்..
ரத்னங்கி சேவை..
வெள்ளி கருடன், குதிரை வாகனம்
உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும்
ராமநவமி சேர்த்தி சேவை
தாயார் திருவடி சேவை..
ஜாலி சாலி அலங்காரம்..

♦️♦️

ஏழு பிரகாரங்கள்..
ஏழு திருமதில்கள்..

♦️♦️

ஏழு ஆச்சார்யர்களுக்கு
தனி சன்னதி
அரங்கத்தில் உண்டு!!
இராமானுஜர்..
பிள்ளை லோகாச்சாரியார்..
திருக்கச்சி நம்பி..
கூரத்தாழ்வான்..
வேதாந்த தேசிகர்..
நாதமுனி..
பெரியவாச்சான் பிள்ளை..

♦️♦️

ஏழு முறை
சின்னப் பெருமாளுக்கு
தீர்த்தவாரி இங்கு உண்டு..

♦️♦️

மற்ற கோவில்களில்
காண முடியாதவை!
தச மூர்த்தி..
நெய் கிணறு..
மூன்று தாயார்கள்..
இருபத்தொன்று கோபுரங்கள்..
நெற்களஞ்சியம்..
தன்வந்தரி..
நான்கு திசைகளிலும்
இராமனுக்குச் சன்னதிகள்..

♦️♦️

இத்தனைப் பெருமைகள்
நம் அரங்கனுக்கு..
நம் திருவரங்கத்திற்கு..

♦️♦️

No comments:

Post a Comment