Tuesday, April 22, 2025

Why to do pancha samskaram?

பஞ்ச ஸம்ஸ்காரங்கள் ஏன் அவச்யம் செய்து கொள்ள வேண்டும்!?

 ஏன் நமக்கு சதாசார்ய சம்பந்தம் ஆவச்யகம்? 

இதற்கெல்லாம் ப்ரமாணம் உண்டா என்று பலபேர் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்!

பொதுவாகவே...
நாம் அத்தனை ஞானம் படைத்தவர்கள் கிடையாது!

நம்முடைய முன்னோர்கள் அநுஷ்டித்ததையே நாம் அநுஷ்டிக்கிறோம்!

அவர்கள் காட்டிக் கொடுத்த வழியில் செல்கிறோம்!

அவர்களுக்கு எல்லா ப்ரமாணங்களையும் தெரிந்து கொள்வதற்கான சாத்யம் இருந்தது!

ஆனால்...நம் வாழ்நாள் பழுதே பல பகலும் போய்விட்டது!

அதனால் அவர்கள் பின்பற்றிய வழியையே நாமும் பின்பற்றுகிறோம்!

1...தாப: ....திருவிலச்சினைப் பெறுவது!

2...புண்டர:....நெற்றியில் திருமண்காப்பு

3...நாம:...ராமாநுச தாசன்...என்பது போல திருநாம்ம்!

4...மந்த்ர:.......அஷ்டாக்ஷரம்..த்வயம்...சரமஸ்லோகம்!

5....யாக:...திருவாராதனமே நமக்கு யாகம்!....
என்று ஐந்தும் அவச்யம்!

" கேசவன்" முதலான 12..திருநாமத்துடன் .....திருமண் காப்பு சாற்றிக் கொள்ள வேண்டும்..

ஶ்ரீசூர்ணத்துடன் அணிவதால்... 
பிராட்டியும்...
பெருமாளும் சேர்ந்து நம்மை ரக்ஷிக்கிறார்கள்!

எப்படி சுமங்கலிகளுக்கு திருமாங்கல்யமோ...அப்படித்தான் திருமண் இட்டுக் கொள்வது!என்று நஞ்சீயர் சாதிப்பாராம்...

அடுத்து....
தாஸ்ய நாமமே....நம் ஸ்வரூபம்!

அஷ்டாக்ஷரம்,சரம ச்லோகம்...த்வயத்தை அர்த்தத்துடன் அநுசந்திக்க வேணும்!

நம் க்ருஹத்தில் எம்பெருமானுக்கு திருவாராதனம் செய்து தளிகை அமுது செய்வித்து அந்த ப்ரஸாதத்தையே நாம் அமுது செய்ய வேண்டும்!

 வேதங்களில் இருந்து.......,,ஶ்ரீ பாஞ்சராத்ரம்......
ஶ்ரீராமாயணம், ஶ்ரீமத் பாகவதம்,ஶ்ரீ விஷ்ணு புராணம் போன்றவைகளே நமக்கு ப்ரமாணம்!!

இதில் எல்லாவற்றிலும் பஞ்ச ஸம்ஸ்காரத்தைப்பற்றி சொல்கின்றன !!

" ஆசார்யஸ்ஸ ஹரிஸ் ஸாக்ஷாத்...."..

ஆசார்யனாக இருப்பவர் ...நமக்கு தெய்வம்!
நாம் அவரை...
எம்பெருமானாகவே அவரைக் கருதவேண்டும்...என்று ப்ரமாணம் சொல்கிறது!

1......பாஹ்ய லக்ஷணம்....

கழுத்தில் துளசி மணி மாலை...
தாமரை மணிமாலை..
சங்கு சக்ர முத்ரைகள்...
திருமண்காப்பு...என்று வெளிப்படையாக இருப்பது...." பாஹ்ய லக்ஷணம்!"

பெரியாழ்வார் ஸாதித்தது எல்லோருக்குமே தெரியும்!
" தீயிற்..பொலிகின்ற...." என்ற பாசுரம்..

"பவித்ர மித்யக்நி: 
அக்நிர் வை ஸஹஸ்ராரா:
ஸஹஸ்ராரா நேமி:......"
என்கிறது வேதம்!
இதுவுமே நமக்கு ப்ரமாணம்!

ஸாம வேதமும்...சொல்கிறது!
 சங்கு சக்ர முத்ரைகளோடு இருப்பவர்கள்...
வைகுண்டத்தை அடைவார்கள் என்று!

ஆசார்யனை ஆச்ரயித்து ஸமாச்ரயணம் செய்து கொள்வது..சாதாரணம் அன்று!
பிறவிப் பயன்!
இது ஒரு வைதிக நிகழ்ச்சி !

 எம்பெருமானான ஶ்ரீ ஹரியின் பாதாரவிந்தமாகிய ஊர்த்வ புண்ட்ரங்களை ஶ்ரீசூர்ணத்துடன் சாற்றிக் கொண்டால்..மோக்ஷம் உறுதி!..என்று வேதம் சொல்கிறது!

(ஹரே: பாதாக்ருதிம் ஆத்ம நோஹிதாய .....
ஸ புண்யவாந் பவதி...ஸ முக்தவாந் பவதி!....)
இந்த பஞ்ச ஸம்ஸ்காரத்தினாலேயே ஒருவன் பவித்ரமாக ஆகிறான்!
இது பகவத் ஆஜ்ஞை!
பகவானே ஆகமத்தில் விளக்குகிறான்!
இதற்கெல்லாம் ப்ரமாணங்கள் உண்டு!

( தினமும் சாளக்ராம திருமஞ்சன தீர்த்தம் அல்லது பால்....நாம் ஸ்வீகரித்தால்...நம் உடல்,மனம் தெளிவு பெற்று..நல்ல தேஜஸ் உண்டாகும்!)
சாளக்ராம திருமஞ்சன தீர்த்தம் ஸகலத்திற்கும் ஔஷதம்!
ஆதி ..வ்யாதி..இரண்டையும் போக்கும்!!!🙏

.

No comments:

Post a Comment