Sunday, January 19, 2025

On Love - Maha periyavaa

ॐ श्री गुरुभ्यो नमः। सर्वेभ्यः सुप्रभातं तथा मम नमस्कारः। ஓம் ஶ்ரீ குருப்யோ நம:! அனைவருக்கும் நற்காலையும் என்னுடைய வணக்கங்களும்!

Today's "amruta bindu" from Sri Chandrasehēkharāmrutam - 24.02.23 - சுபக்ருத் வருஷம், மாசி 12, சுக்ல பக்ஷ பஞ்சமி, ரேவதி & அசுவினி, வெள்ளி:

* அன்பு என்றால் என்ன? நம் மனஸ் இன்னொரு மனஸில் அப்படியே கலந்து விடுவது!

* முடிவு நிலை என்ன? ஆத்மாவிலே மனஸ் கரைந்து விடவேண்டும். அப்படி ஆத்மாவிலே மனஸ் கரைவதற்கும் இன்னொரு மனஸிலே அன்பாலே கலப்பதற்கும் என்ன சம்பந்தம்?

* கரைவதற்கும் முந்தைய stage கலப்பது. சர்க்கரையை முதலில் பாலில் போட்டுக் கலக்க வேண்டும். அப்புறம்தான் அது கரையும். இரண்டு வஸ்துக்கள் ஒன்றுக்கு ஒன்று அந்யமாக [வேறாக] இருக்கும்போது இரண்டும் ஒன்றோடொன்று கலக்கின்றன. அப்புறம் ஒன்றிலே மற்றது கரைய ஆரம்பித்து முடிவாகக் கரைந்து முடிந்தபின், இரண்டு இல்லை; ஒன்று தான் இருக்கிறது. இதனை "ஐக்யம்" ஆகிவிடுவது என்பார்கள். "ஏகம்" என்ற ஒன்றின் தன்மையை அடைவதே "ஐக்யம்".

* பாலில் சர்க்கரையைக் கலக்கும்போது பாலும் சர்க்கரையும் வெறேயாகத்தான் இருக்கும். "கலப்பு" என்பது இரு வேறு வஸ்துக்கள் உள்ளபோது தான் ஏற்பட முடியும். அது ஏகமான, அத்வைதமான கரைப்பில்தான் முடிந்ததாக வேண்டும் என்றில்லை. த்வைதக் கலப்பு அப்படியே நின்றுவிடலாம் - அக்ஷதையையும் எள்ளையும் வாத்யார் கலந்து வைக்கிறார். அவை ஒன்றில் இன்னொன்று கரைந்து ஐக்யமாகி விடுவதில்லை.

* ஆத்மா வேறு ஒன்றின் கலப்பே இல்லாமல் ஸ்வச்சமான ஏகமாக, தன்னில் தானாக, தனியாக இருப்பது என்று பார்த்தோம். அதனால், அதிலே கொண்டுபோய் மனஸைக் கலப்பது என்றால் முடியாத கார்யம். மனஸ்தான் ஆத்மாவின் கிட்டேயே போகமுடியாத! இதை எப்படி அதில் போய்க் கலக்கும்படி செய்வது?

* இந்த இடத்தில் தான் இரண்டாக இருந்து கலக்கக்கூடியதாக அந்த ஆத்மாவையே "ஈஶ்வரன்" என்று வைத்து பக்தி பண்ண வேண்டியிருப்பது. பரமாத்மா, ஜீவாத்மா என்று த்வைதமாகப் பிரித்துச் சொல்வது இங்கே தான்.

* ஜீவாத்மா சின்ன மனஸ்; பரமாத்மா மஹா மனஸ் என்று பார்த்தோம். சின்ன மனஸ் எந்த தொடர்புமில்லாத ஆத்மாவோடு கலக்கமுடியாது. ஆனால், அதைப் படைத்த மஹா மனஸோடு கலக்க முடியும். இதை அதுதான் படைத்தது என்பதாலேயே, தாயாரிடம் குழந்தை அன்போடு கலக்கிறது மாதிரி கலக்கமுடியும். அந்த பரமாத்மாவும் தாயார் மாதிரி அன்போடு ஜீவாத்மாவுடன் கலந்து அனுக்ரஹம் செய்வார்/செய்வாள்/செய்யும்.

* ஜீவாத்மா பக்தனாகிப் பரமாத்மா என்ற ஈஶ்வரனிடம் அன்பில் கலக்கிறான். இரண்டாக கலந்தபின் இரண்டறக் கலந்து கரைகிற நிலையை ஈஶ்வரனே அனுகிரஹிக்கிரான். அப்புறம் த்வைதமான ஜீவாத்ம - பரமாத்ம பேதம் இல்லாமல் ஒரே ஆத்மா என்றாகி விடுகிறது.

प्रदोष शङ्कर। प्रत्यक्ष शङ्कर।।
Pradosha Shankara। Pratyaksha Shankara।। 🙏🙏🙏🙏

No comments:

Post a Comment