Sunday, December 29, 2024

Don't ask anything from GOD - HH Bharati Teertha Mahaswamigal

*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின்  அருளுரைகள்..* 

குசேலன் பகவானுடைய ஸந்நிதிக்குச் சென்றபோது தனக்கு "இது வேண்டும், அது வேண்டும்" என்றெல்லாம் சொல்லவில்லை..ஒரு பிடி அவலை பகவானிடம் கொடுத்தான், "இதனால் கிருஷ்ண பரமாத்மா ஸந்தோஷமாகட்டும்" என்ற ஒரே எண்ணத்தில் கொடுத்தான்..பகவான் அதை அப்படியே வாயில் போட்டுக் கொண்டு " தனக்கு திருப்தியாய்விட்டது" என்றார்..அதே ஸமயத்தில் குசேலன் குபேரனாகிவிட்டான்..ஸர்வக்யனான பகவானிடம் நாம் ஒன்றும் கேட்கவேண்டியதில்லை, என்பதற்கு இது ஒன்று போதாதா..! அதனால் நாம் செய்யும் நல்ல காரியமோ பூஜையோ ப்ரசாரத்திற்காக அல்ல..அதனால் ஈசுவரன் திருப்தி அடைய வேண்டும்..அதனால் தான் பீஷ்மர் *" யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்சேன்னர: ஸதா"* என்று கூறி, பக்தியினால் ஒருவன் பகவான் நாமத்தை ஜபித்தால், அதுவே பெரிய தர்மம், என்று சுட்டிக் காட்டினார்...

No comments:

Post a Comment