Wednesday, March 17, 2021

Sabhari Moksha in Valmiki Ramayana

COURTESY: Sri. Balasubramanian Vaidyanathan

ஶபரீ பாக்யம்

தியாகப்ரஹ்மம் 'எந்தனி நே வர்ணிந்து ஶபரீ பாக்யம்' க்ருதியில் ஶபரீ பாக்யத்தை எப்படி வர்ணிப்பது எனத் தடுமாறுகிறார். மனதை அடக்கிய பல ரிஷிகளின் பத்தினிகளிருக்கையில், ஶபரீ பெற்ற பேற்றினை எண்ணி ஆச்சர்யமுறுகிறார். அந்த ஶபரீ பாக்யத்தை இன்று எழுதினேன். 

கபந்தனால் ஶபரீ பற்றித்தெரிவிக்கப்பட்டு ராமன் பம்பா புஷ்கரணியின் மேற்குக்கரையிலுள்ள ஶபரீயுடைய ரம்யமான ஆச்ரமத்தை அடைந்தனர். அதன் பின்னர் உள்ள ஶ்லோகங்களைக் கீழே தந்துள்ளேன்.

तौ च दृष्ट्वा तदा सिद्धा समुत्थाय कृताञ्जलिः।
रामस्य पादौ जग्राह लक्ष्मणस्य च धीमतः।।3.74.6।।
पाद्यमाचमनीयं च सर्वं प्रादाद्यथाविधि।
ஸித்தியுடையவள் நன்கு எழுந்து அஞ்ஜலி புரிந்தாள். அறிவாளியான ராமனுடைய பாதங்களையும் லக்ஷ்மணனுடையவற்றையும் பற்றிக்கொண்டாள். பாத்யம், ஆசமனீயம் மற்றும் ஸர்வத்தையும் விதிப்படி அளித்தாள். 

तामुवाच ततो रामश्श्रमणीं संशितव्रताम्।।3.74.7।।
कच्चित्ते निर्जिता विघ्नाः कच्चित्ते वर्धते तपः।
कच्चित्ते नियतः क्रोध आहारश्च तपोधने।।3.74.8।।
कच्चित्ते नियमाः प्राप्ताः कच्चित्ते मनसः सुखम्।
कच्चित्ते गुरुशुश्रूषा सफला चारुभाषिणि।।3.74.9।।
உழைப்பாளியும் (ச்ரமணீ) வ்ரதத்தில் உறுதியானவளுமான அவளிடம் ராமன் கூறுகின்றான் -
"தபோதனமுடையோளே! உன் விக்னங்கள் ஜெயிக்கப்பட்டதன்றோ? உன் தவம் வளர்கின்றதன்றோ? க்ரோதம், ஆஹாரம் கட்டுப்பட்டுள்ளதன்றோ? சாருபாஷிணி! (அழகிய பேச்சினள்) உன் நியமங்கள் அடையப்பெற்றதன்றோ? உன் மனம் ஸுகமாக உள்ளதன்றோ? உன் குரு சுஷ்ருஷை பலனுடன் கூடியதாயிற்றன்றோ?"

रामेण तापसी पृष्टा सा सिद्धा सिद्धसम्मता।
शशंस शबरी वृद्धा रामाय प्रत्युपस्थिता।।3.74.10।।
अद्य प्राप्ता तपस्सिद्धिस्तव संदर्शनान्मया।
अद्य मे सफलं तप्तं गुरवश्च सुपूजिताः।।3.74.11।।
अद्य मे सफलं जन्म स्वर्गश्चैव भविष्यति।
त्वयि देववरे राम पूजिते पुरुषर्षभ।।3.74.12।।
चक्षुषा तव सौम्येन पूतास्मि रघुनन्दन।
गमिष्याम्यक्षयान्लोकांस्त्वत्प्रसादादरिन्दम।।3.74.13।।
चित्रकूटं त्वयि प्राप्ते विमानैरतुलप्रभैः।
इतस्ते दिवमारूढा यानहं पर्यचारिषम्।।3.74.14।।
तैश्चाहमुक्ता धर्मज्ञैर्महाभागैर्महर्षिभिः।
आगमिष्यति ते रामस्सुपुण्यमिममाश्रमम्।।3.74.15।।
स ते प्रतिग्रहीतव्यस्सौमित्रिसहितोतिथिः।
तं च दृष्ट्वा वरान्लोकानक्षयांस्त्वं गमिष्यसि।।3.74.16।।
मया तु विविधं वन्यं सञ्चितं पुरुषर्षभ।
तवार्थे पुरुषव्याघ्र पम्पायास्तीरसम्भवम्।।3.74.17।।
ராமனால் வினவப்பட்ட தபஸ்வினியும், ஸித்தியுடையோளும், ஸித்தர்களின் ஏற்புடைய வ்ருத்தாவும் (வயது முதிர்ந்தவள்) ஆன அந்த ஶபரீ அருகில் நின்றவளாக ராமனுக்குத் தெரிவித்தாள் - 
" உன் தரிசனத்தினால் இன்று என்னால் தவ ஸித்தி அடையப்பட்டது, இன்று என் தவம் பலனுடன் கூடிற்று. குருவினரும் நன்கு பூஜிக்கப்பட்டோராயினர். இன்று என் ஜன்மம் பலனுடையதாயிற்று. புருஷர்களில் ஏறே! ராமா! தேவர்களில் சிறந்தவனான நீ பூஜிக்கப்படுகையில் ஸ்வர்கமும் நிகழும். ரகுநந்தனா! ஸௌம்யமான உன் கண்களால் தூய்மை அடைந்துள்ளேன். அரிந்தமா! உன் ப்ரஸாதத்தினால் அழிவற்ற உலகங்களும் செல்வேன். 
நீ சித்ரகூடம் அடைகையில், எவருக்கு நான் பணிவிடை செய்தேனோ, அவர்கள் இணையற்ற ப்ரபையுடைய விமானத்தில் இங்கிருந்து விண்ணுலகம் ஏறினர். தர்மஞ்ஞர்களும் மகா பாக்யமுடையோரான அவர்களால், ராமன் புண்யமான உன் ஆச்ரமத்திற்கு வருவான், நீ ஸௌமித்ரி ஸஹிதனான அவனை அதிதியாக எதிர்கொண்டு, அவனைப் பார்த்தபின் அழிவற்ற சிறந்த லோகங்களைச் சென்றடைவாய் என நான் கூறப்பட்டேன். புருஷ ரிஷபா! புருஷ வ்யாக்ரா! உன் பொருட்டு பம்பா தீரத்தில் உருவான பலவிதமான வனப்பொருட்கள் என்னால் சேகரிக்கப் பட்டுள்ளன. "

एवमुक्तस्स धर्मात्मा शबर्या शबरीमिदम्।
राघवः प्राह विज्ञाने तां नित्यमबहिष्कृताम्।।3.74.18।।
दनोस्सकाशात्तत्त्वेन प्रभावं ते महात्मनः।
श्रुतं प्रत्यक्षमिच्छामि सन्द्रष्टुं यदि मन्यसे।।3.74.19।।
இவ்வாறு ஶபரீயால் உரைக்கப்பட்ட அந்த தர்மாத்மா ராகவன் விஞ்ஞானத்தினிடம் என்றும் புறக்கணிக்கப்படாத அந்த ஶபரீயிடம் இதைச்சொன்னான்.
"மஹாத்மா தனு (கபந்தன்) வின் அருகாமையினால் உன் ப்ரபாவம் கேட்கப்பட்டது. நீ ஏற்பாயெனில் ப்ரத்யக்ஷமாகக் காண விரும்புகிறேன்."

एतत्तु वचनं श्रुत्त्वा रामवक्त्राद्विनिस्सृतम्।
शबरी दर्शयामास तावुभौ तद्वनं महत्।।3.74.20।।
पश्य मेघघनप्रख्यं मृगपक्षिसमाकुलम्।
मतङ्गवनमित्येव विश्रुतं रघुनन्दन।।।3.74.21।।
इह ते भावितात्मानो गुरवो मे महावने।
जुहवाञ्चक्रिरे तीर्थं मन्त्रवन्मन्त्रपूजितम्।।3.74.22।।
इयं प्रत्यक्स्थली वेदिर्यत्र ते मे सुसत्कृताः।
पुष्पोपहारं कुर्वन्ति श्रमादुद्वेपिभिः करैः।।3.74.23।।
तेषां तपःप्रभावेण पश्याद्यापि रघूद्वह।
द्योतयन्ति दिशस्सर्वाश्श्रिया वेद्योऽतुलप्रभाः।।3.74.24।।
अशक्नुवद्भिस्तैर्गन्तुमुपवासश्रमालसैः।
चिन्तितेऽभ्यागतान्पश्य सहितान्सप्तसागरान्।।3.74.25।।
कृताभिषेकैस्तैर्न्यस्ता वल्कलाः पादपेष्विह।
अद्यापि नावशुष्यन्ति प्रदेशे रघुनन्दन।।3.74.26।।
देवकार्याणि कुर्वद्भिर्यानीमानि कृतानि वै।
पुष्पैःकुवलयैस्सार्धं म्लानत्वं नोपयान्तिवै।।3.74.27।।
कृत्स्नं वनमिदं दृष्टं श्रोतव्यं च श्रुतं त्वया।
तदिच्छाम्यभ्यनुज्ञाता त्यक्तुमेतत्कलेबरम्।।3.74.28।।
तेषामिच्छाम्यहं गन्तुं समीपं भावितात्मनाम्।
मुनीनामाश्रमो येषामहं च परिचारिणी।।3.74.29।।
ராமனின் வாயினின்று வெளியான இந்த வசனத்தைக்கேட்டு அவ்விருவருக்கும் மஹத்தான அந்த வனத்தை ஶபரீ காண்பித்தாள். 
" ரகுநந்தனா! பார்ப்பாய். மேகக்கூட்டம் போன்ற ம்ருகபக்‌ஷிகள் நிறைந்த மதங்கவனம் என்றறியப்படுவது இதுவே. மஹாவனத்தில் ஆத்மனை பாவித்தோராக என் குருவினர் இங்கே மந்திர பூஜிதமான தீர்த்தத்தில் மந்த்ரவத்தாக ஆஹுதிகள் இட்டனர். என்னால் ச்ரமத்துடன் நடுங்கும் கரங்களால் நன்கு ஸத்க்ருதர்களான அவர்கள் எங்கே புஷ்ப உபஹாரம் செய்தனரோ, அந்த ப்ரத்யக்ஸ்தலி வேதி இது. ரகூத்வஹனே! அவர்களுடைய தவ ப்ரபாவத்தால் இணையற்ற ப்ரபையுடையதான வேதிகள் ச்ரியையுடன் இன்றும் கூட அனைத்துத்திக்கிலும் ஒளிவிட்டுக்கொண்டிருப்பதைக் காண்பாய். உபவாஸ ச்ரமத்தினால் அலஸா ( வேகம் குன்றிய ) உற்ற, செல்லச் சக்தியற்ற அவர்கள் சிந்தித்ததால் இணைந்து வந்த ஸப்த ஸாகரங்களைக் காண்பாய். ரகுநந்தனா! இங்கே ப்ரதேசத்தில் அபிஷேகமானவர்களாக அவர்களால் மரங்களின் மீது போடப்பட்ட மரவுரிகள் இன்றும் கூட முழுமையாகக்காயவில்லை. தேவகார்யங்கள் புரிகையில் குவலயத்துடன் (தாமரை) எந்தப் புஷ்பங்கள் இடப்பட்டனவோ, அவை உலரவில்லை.
உன்னால் முழுமையான இவ்வனம் காணப்பட்டது. கேட்கப்படவேண்டியது கேட்கப்பட்டது. அதனால் அனுமதிக்கப்பட்டோளாக இந்தக் களேபரத்தைத் (உடல்) துறக்க விரும்புகிறேன். அந்த ஆத்மனைப்பாவித்தோரான ஆச்ரம முனிவர்கள் எவரிடம் நான் பரிசாரிணியாகவிருந்தேனோ, அவர்களின் ஸமீபம் செல்ல விழைகிறேன்."

धर्मिष्ठं तु वचश्श्रुत्वा राघवस्सहलक्ष्मणः।
प्रहर्षमतुलं लेभे आश्चर्यमिति तत्त्वतः।।3.74.30।।
तामुवाच ततो रामश्श्रमणीं संशितव्रताम्।
अर्चितोऽहं त्वया भक्त्या गच्छकामं यथासुखम्।।3.74.31।।
தர்மிஷ்டமான வசனத்தைக்கேட்டு லக்ஷ்மணனுடனான ராமன் 'உண்மையில் ஆச்சர்யம்' என இணையில்லா மகிழ்வை அடைந்தான். பின் ராமன் "உன் பக்தியால் அர்ச்சிக்கப்பட்டவனாக நான் உள்ளேன். விருப்புடன் யதாஸுகம் செல்வாய்." என உறுதியான வ்ரத்த்தினளும் ச்ரமணியுமான அவளிடம் கூறினான்.

इत्युक्ता जटिला वृद्धा चीरकृष्णाजिनाम्बरा।
तस्मिन्मुहूर्ते शबरी देहं जीर्णं जिहासती।।3.74.32।।
अनुज्ञाता तु रामेण हुत्वात्मानं हुताशने।
ज्वलत्पावकसङ्काशा स्वर्गमेव जगाम सा।।3.74.33।।
दिव्याभरणसंयुक्ता दिव्यमाल्यानुलेपना।
दिव्याम्बरधरा तत्र बभूव प्रियदर्शना।।3.74.34।।
विराजयन्ती तं देशं विद्युत्सौदामिनी यथा।
यत्र ते सुकृतात्मानो विहरन्ति महर्षयः।
तत्पुण्यं शबरी स्थानं जगामात्मसमाधिना।|3.74.35।।

இவ்வாறு கூறப்பட்ட ஜடையினளும், வ்ருத்தையும், பழைய கருப்பு மான் தோலாடையினளுமான ஶபரீ அந்த முஹூர்த்தத்திலேயே துறக்க விரும்பியவளாக, ராமனால் அனுமதிக்கப்பட்டவளாக ஹுதாசனனிடத்தில் (அக்னி) ஜீர்ணமான உடலை ஆஹுதியிட்டு, ஜொலிக்கும் பாவகனை (அக்னி) நிகர்த்தவளாக ஸ்வர்கத்தையே அடைந்தாள். திவ்யாபரணங்கள், திவ்யமாலைகள் கூடியவளாக, லேபனங்கள் தரித்து, திவ்ய உடைகள் தரித்து, வித்யுத் ஸௌதாமினி (மின்னல்) போன்று அத்தேசத்தை ஒளிரச்செய்து அங்கே ப்ரியதர்ஷனாவாகத் தோன்றினாள். ஶபரீ ஆத்மஸமாதியுடன் ஸுக்ருதாத்மனர்களான அந்த மஹரிஷிகள் எங்கு உலவினரோ, அந்தப் புண்யமான ஸ்தானத்திற்குச் சென்றாள்.

இவ்வாறு ஆதிகாவ்யமான வால்மீகி ராமாயணத்தின் ஆரண்யகாண்டத்தின் எழுபத்திநான்காவது ஸர்கம் நிறைவுற்றது.

என்னுடைய விளக்கங்களையும் தர விரும்பினேன். நேரக்குறைவால் அவற்றை இப்பதிவில் தரவியலவில்லை. இவ்வார இறுதிக்குள் பதிய முயற்சிக்கிறேன்.

#ராமம்பஜேஶ்யாமளம்


No comments:

Post a Comment