சந்தியாகாலத்தில் செய்யக்கூடிய தேவதாவந்தனம் சந்தியாவந்தனம் எனப்படும். அதிகாலை, மத்யான்னம், மற்றும் சாயங்காலம் என்று சந்தியாகாலங்கள் மூன்று ஆகும். சந்தியாவந்தனத்தில் அர்க்யப்ரதானம், காயத்ரீ ஜபம் மற்றும் உபஸ்தானம் என்ற மூன்று கர்மாக்கள் ப்ரதானமாக உள்ளன. சந்தியாவந்தனத்தில் காயத்ரீ ஜபம் செய்யும்போது வேதங்களையே சொல்லிய பலன் கிடைப்பதால் காயத்ரீ ஜபத்தைத் தான் சந்தியாவந்தனத்தில் ஜபிக்க வேண்டும் என சாஸ்திர நியமமுண்டு. இந்தக் காயத்ரீ மந்த்ரம் 24 அக்ஷரங்களைக் கொண்டு, 24 ரிஷிகளையும், அக்னி முதலிய 24 தேவதைகைகளையும், 24 சந்தஸ்களையும், 24 தத்துவங்களையும் மற்றும் 24 சக்திகளையும் கூறுகிறது. 108, 54 அல்லது 27 முறை காயத்ரீ மந்திரத்தை ஜபிக்க வேண்டும். ஜபத்திற்குப் பிறகு உபஸ்தானம், திக்பந்தனம், அபிவாதனத்தைச் செய்ய வேண்டும்.
நம்முடைய நித்ய கர்மாக்களில் சந்தியாவந்தனம் மற்றும் காயத்ரீ ஜபங்களுக்கு முக்கியத்வம் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.
அஹரஹ: சந்த்யாம் உபாஸீத என்று சந்தியாவந்தனத்தின் விதியில் கூறப்பட்டுள்ளது. செய்யக்கூடிய கர்மாக்கள் 'நித்ய', 'நைமித்திக', 'காம்ய' என்று பிரிக்கப்பட்டுள்ளது. பலனை விரும்பாமல் கடமையின் பாவத்துடன் செய்யக்கூடிய நித்ய கர்மாக்களின் வரிசையில் சந்தியாவந்தனம் அடங்கியுள்ளது. ஒரு நிமித்தத்தை உத்தேசித்து செய்யக்கூடிய கர்மம் நைமித்யக கர்மம் என்று கூறப்படுகிறது. இதுதான் பித்ரு ஸ்ராத்தம். காம்ய கர்மம் மூன்றாவதாகும். இதைச் செய்வதோ செய்யாமலிருப்பதோ கர்த்தாவின் விருப்பம் ஆகும். காம்ய கர்மத்தைச் செய்யாமல் இருந்தாலும் தோஷம் கிடையாது. ஆனால் முன்பு சொல்லப்பட்டவை அவ்வாறு அல்ல. புத்ர ப்ராப்திக்காக செய்யக்கூடிய புத்ரேஷ்டி காம்ய கர்மத்தில் அடங்கும்.
நித்ய கர்மாவில் அடங்கிய சந்தியாவந்தனத்தைச் செய்யாமல் இருந்தால் 'பாபபாக்' (பாபி) ஆகிவிடுவான். தேவீபாகவதத்தில் -
(சந்த்யாவிஹீநோ ஸுசிர்நித்யம் அநர்ஹ: சர்வகர்மஸு
யதன்யத் குருதே கர்ம ந தஸ்ய பலபாக்பவேத்)
சந்த்யாவந்தனம் செய்யாதவன் அபவித்ரன். அவனுக்கு ஆன்மிக கர்மாக்களில் ஈடுபடத் தகுதியில்லை. அவன் எந்த யாகத்தைச் செய்தாலும் அதன் பலனை அடையமாட்டான். ஈஸ்வரீய ஞானம் கிடைக்கவேண்டும் என்றால் நரஜன்மத்திலே பிறக்க வேண்டும்
No comments:
Post a Comment