Saturday, September 18, 2021

Yadhavabhyudayam Gopi Vastrapaharanam

Courtesy:Smt.Sraoja Ramanujam
யாதவாப்யுதயம் -அத்தியாயம் 4- தொடர்ச்சி -கோபீவஸ்த்ராபஹரணம்
மார்கழி மாதத்தில் கோபகன்னியர் கண்ணனின் சங்கமம் வேண்டி தேவியை துதித்து பாவை நோன்பு அனுஷ்டித்தனர். அவர்கள் தேவியை துதித்த ஸ்லோகம்,
காத்யாயனி மஹாமாயே மகாயோகின்யதீச்வரி
நந்த கோபஸுதம் தேவி பதிம் மே குரு தே நம:
இது காத்யாயனிக்கு பூஜை என்பார் சிலர்.ஸ்ரீ பாகவதத்தின்படி காத்யாயனியின் அந்தர்யாமியாகிய பெருமாளுக்கு பூஜை என்பர் சிலர். திருப்பாவையில் அருளியது எம்பெருமானுக்கே பூஜை என்பதாகும்.
தேசிகர் கோபி வஸ்த்ராபஹரணத்தை பின் வருமாறு வர்ணிக்கிறார்.
நிசாத்யயே ஸ்நானஸமுத்யதானாம்
நிக்ஷிப்தம் ஆபீரகுமாரிகாணாம்
கூலாதுபாதாய துகூலஜாலம்
குந்தாதிரூடோ முமுதே முகுந்த:
கோபசிறுமியர் அதிகாலையில் யமுனையில் நீராடச்சென்றபோது வெண்மை பட்டாலான தங்கள் ஆடைகளைக் களைந்து கரையில் வைத்தனர். அப்போது கிருஷ்ணன் அவைகளை எடுத்துக்கொண்டு மகிழ்வுடன்குந்த மரத்தில் ஏறிக் கொண்டான்.
உத்தமூர் ஸ்வாமி இதை விளக்கையில் கூறுகிறார்.' கூலதுகூல ஸங்கமாத் பர: குந்த முகுந்த ஸங்கம: ' அதாவது முதலில் கூல (கரை) துகூல (பட்டாடை) ஸங்கமம், (சேர்க்கை). பிறகு குந்த ( குந்த மரம் )முகுந்த ஸங்கமம். கூல துகூல ஸங்கமம் என்பது உலக இச்சைகளைக் களைந்த பின் கிருஷ்ணானுபவம் ஏற்படுவதைக் குறிக்கும். குந்த: என்றால் கும் – பாபத்தை , த்யதி- களைதல் . முகுந்த: என்ற நாமத்திற்கு முக்திம் ததாதி, முக்தியைக் கொடுப்பவன் என்று பொருள்.
அவர்கள் கண்ணனிடம் தங்கள் ஆடைகளைக் கொடுக்கும்படி வேண்டுகையில் அவன் அவர்கள் செய்த ஒற்றைக்கை நமஸ்காரத்தை ஏற்க மறுத்து அவர்கள் இருகைகளையும் கூப்பி தொழுததைக் கண்டு சிரித்தான்.
அவர்களை தலை மேல் கை கூப்ப சொன்னது, தேஹாத்ம புத்தியை ( தேகமே நான் என்னும் புத்தி) விடுவதன் பொருட்டே ஆகும். பிறகே முக்தி சித்திக்கும். மேலும் 'எல்லோருள்ளும் ஆத்மாவாக இருக்கும் என்னிடம் எதை மறைக்க முயலுகிறீர்கள் என்பதுதான் கண்ணைன் சிரிப்பிற்குக் காரணம் என்றும் வைத்துக்கொள்ளலாம்.பூரண சரணாகதியைக் குறிக்கும் சம்பவம்.
இதைத்தான் 'வாஸாம்ஸி ஜீர்நாணி யதா விஹாய –என்ற பகவத்கீதை ஸ்லோகம் விளக்குகிறது. அதாவது எவ்வாறு ஒருவர் பழைய வஸ்திரங்களை விடுத்து புதியவை அணிந்து கொள்கிறாரோ அதுபோல ஆத்மா பழைய சரீரத்தி விட்டு புதிய சரீரம் எடுத்துக் கொள்கிறது.
பூரண சரணாகதி அடையும் வரை இந்த சரீர மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது, தேஹாத்மா புத்தியை விட்டால் ஏற்படும் புதிய விழிப்புணர்வு என்பதுதான் கண்ணன் ஆடைகளை திருப்பித் தருவதன் பொருள்.
தேசிகர் கூறுகிறார்,
ஆயர்சிறுமியர் தங்கள் ஆனந்தத்தின் ராஜதானியாகவே கண்ணனை எண்ணினர். அவன் லீலைகள் அந்த ராஜதானியின் பாதுகாப்பான சேனைகளாகவும், அவன் அழகொளி அதன் மதிலாகவும் இருந்தது.
.அதாவது பிரேமபக்தி என்பது கோபியரின் தனிப்பட்ட , எவராலும் புரிந்துகொள்ள இயலாத ஒன்றாக இருந்தது.
.

No comments:

Post a Comment