Tuesday, February 9, 2021

Chandrasekaramrutham - Periyavaa

Today's "amruta bindu" from Sri Chandrasekaramrutham - 

* ஒருத்தர், அம்மா - அப்பா இரண்டு பேருக்கும் புத்ரராயிருந்தாலும், லோகம் பூராவிலுமே வழக்கத்தில் அப்பா தான் குடும்பத் தலைவராகக் கருதப்படுவதற்கு ஏற்ப "இன்ன அப்பாவுடைய புத்ரர்" என்று தான் சொல்வதாக இருக்கிறது.

* இந்த வழக்கத்திற்கு மாறாக "ப்ருஹதாரண்யக உபநிஷத்"தின் இறுதிப் பகுதியில் (வம்ச ப்ராஹ்மணம்), லிஸ்ட் [list] ஆரம்பத்திலிருந்து ரொம்ப தூரம் வரை ஒவ்வொரு ரிஷியின் பேரையும், அவர் "இந்த அம்மாவின் புத்ரர்" என்பதாகத் தாய்மார்களின் பேர்களை வைத்தே கொடுத்திருக்கிறது.

* இதென்ன இப்படிப் பண்ணியிருக்கிறதே என்பதற்கு பதில், ஆசார்யாளின் பாஷ்யத்திலிருந்து தெரிகிறது. என்ன சொல்கிறார் என்றால், "புத்ரன் குணவானாக இருப்பதற்கு ஸ்த்ரீயே - அதாவது அவனுடைய தாயாரே, பிரதான காரணம் என்பது வெகுவாகப் புகழ்ந்து சொல்லப்படும் விஷயம்.

* ஸ்த்ரீ ஜாதிக்குள்ளே அதே விசேஷத்தினாலேயே புத்ரன் விசேஷம் பெறுவதால் தான் இங்கே ஆசார்ய பரம்பரை இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது" என்கிறார்.

No comments:

Post a Comment