ஏனமுன் னாகி யிருநில மிடந்தன்
றினையடி யிமையவர் வணங்க
தானவ னாகம் தரணியிற் புரளத்
தடஞ்சிலை குனித்தவெந் தலைவன்
தேனமர் சோலைக் கற்பகம் பயந்த
தெய்வநன் னறுமலர் கொணர்ந்து
வானவர் வணங்கும் கங்கையின் கரை மேல்
வதரியாச் சிரமத்துள் ளானே
பெரிய திருமொழி 978
முதற் பத்து. நான்காம் திருமொழி. இதில் பத்து பாசுரத்திலும் மேன்மை பொருந்திய கங்கை என்னும் தலை நதியின் கரையில் அமைந்ததின் பெருமையை பாசுரந்தோறும் விவரித்து மகிழ்கிறார் ஆழ்வார்.
வராஹ அவதாரமெடுத்து பூவுலகை மீட்ட பொழுது பிரமனும் மற்றும் வானவரும் வணங்க இருந்தவனும், இராவணனின் உடல் மண்ணில் புரளும்படியாக வில்லை வலைத்தவனுமாகிய என் தலைவன், தேன் மிகுந்த சோலயாக உள்ள கற்பக மரம் பூத்த தெய்வத் தன்மை பொருந்திய நல்ல மணம் மிக்க பூக்களைக் கொண்டு வந்து, தேவர்கள் வணங்குகின்ற கங்கையின் கரைப் பகுதியில் உள்ள திருவதரியாச்சிரமம் என்னும் இடத்தில் எழுந்தருளியிருக்கிறான்.
தானவன் – இராவணன் என்று இங்குப் பொருள்.
பத்ரிநாத்
மூலவர் – பத்ரி நாராயணன் வீற்றிருந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் – அரவிந்த வல்லி
தீர்த்தம் – தப்த குண்டம்
ஸ்தல விருக்ஷம் – பதரி ( இலந்தை) விருக்ஷம்
விமானம் – தப்த காஞ்சந விமானம்
இங்கு பெருமாளுக்கு முன் திரை இல்லை. திருமஞ்சனம், நைவேத்யம் எல்லாம் நம் எதிரிலேயே நடக்கின்றன. இங்கு பிரதம அர்ச்சகர் நம்பூதிரி பிராமணர். இரவு நேரம் சாந்தி பஞ்சகம் போன்ற மந்திரங்களை ஸேவிக்க ஆடைகளையும் மாலைகளையும் களைந்து சிறிய துண்டு சார்த்தும் காட்சிக்கு கீத கோவிந்தம் என்று பெயர்.
பெருமான் சதுர் புஜமாய் மேல் கைகளில் சக்ரம் சங்கு தரித்து, கீழ் வலது இடது கைகளை யோக முத்திரையாகக் கொண்டு பத்மாஸனத்தில் ஸேவை சாதிக்கிறார். கருடன், குபேரன், நாரதர், தேவரிஷி, உத்தவர், நாராயணர், நரர் முதலியோர் உள்ளனர்.
இங்கு சிரார்த்தம் செய்தால் ஈரேழு தலைமுறைகளும் மோக்ஷமடைவதாகவும் பிறகு சிரார்த்தம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை என்றும் நம்பப்படுகிறது. பகீரதன் தவம் செய்து ஆகாய கங்கையை பூமிக்குத் தருவித்தான். அப்போது கங்கை பாதாள லோகம் வரை பாய்ந்து பகீரதனின் பித்ருக்களின் சாம்பலின் மேல் பட்டதால் மோக்ஷம் கிட்டியதை நினைவில் கொள்ளத் தக்கது.
அருகாமையில் உள்ள வஸுதாரா என்ற நீர் வீழ்ச்சியின் திவலைகள் தன் மேல் பட்டு புனிதமாவதற்கு யாத்ரீகர்கள் அங்கு செல்வதுண்டு.
பத்ரியின் பெருமை எல்லையற்றது. விசாலபுரி என்றும் பெயர் உண்டு.
மங்களாசாஸனம் – பெரியாழ்வார் 399 திருமங்கையாழ்வார் – 968-987 2673
மொத்தம் 22 பாசுரங்கள்.

No comments:
Post a Comment