Tuesday, May 19, 2020

Rama looks like Shiva

Courtesy:Sri.Balasubramanian Vaidyanathan

ராமன் சிவன் போலாதல் - ஆரண்யகாண்டம் 16 வது ஸர்கம்.

பஞ்சவடியில் வசித்திருக்கையில் சிறிதுகாலம் கழித்து சரத்காலம் முடிந்து ஹேமந்தருது வந்தது. அப்போது ராகவன் ஸ்நானம் செய்ய லக்ஷ்மணனுடனும், ஸீதையுடனும் கோதாவரிக்குச் செல்கிறான். லக்ஷ்மணன் அந்தப்பனிக்காலத்தை வர்ணித்துப் பல ஶ்லோகங்களை (33) சொல்கிறான். அதன் நிறைவில் பரதனை நினைவுகூர்கிறான். ராகவன் உணர்ச்சிவசப்படுகிறான்.

இப்போது மூன்று ஶ்லோகங்களை வால்மீகி கூறி ஸர்கத்தை முடிக்கிறார்.

इत्येवं विलपंस्तत्र प्राप्य गोदावरीं नदीम्।
चक्रेऽभिषेकं काकुत्स्थस्सानुजस्सह सीतया।।3.16.41।।
तर्पयित्वाऽथ सलिलैस्ते पितृ़न्दैवतानि च।
स्तुवन्ति स्मोदितं सूर्यं देवताश्च समाहिताः।।3.16.42।।
कृताभिषेकस्सरराज रामः सीताद्वितीयस्सह लक्ष्मणेन।
कृताभिषेको गिरिराजपुत्र्या रुद्रस्सनन्दी भगवानिवेशः।।3.16.43।।

காகுத்ஸ்தன் இவ்வாறெல்லாம் புலம்பி கோதாவரி நதியையடைந்து அனுஜனுடன் ஸீதையுடனும் அபிஷேகத்தைச்செய்தான். பின் மனத்தையடக்கியோராக அவர்கள் நீரினால் பித்ருக்களுக்கும், தேவதைகளுக்கும் தர்ப்பணம் செய்து, உதிக்கின்ற ஸூர்யனையும், தேவதைகளையும் துதித்தனர். ( எப்போதும் ஸந்த்யாவந்தனாதிகளான கர்மானுஷ்டங்களைச் செய்பவனாகவே வால்மீகியால் ராமன் காட்டப்படுகிறான். காட்சியில் ஸந்த்யாகாலமிருப்பின் ஸந்த்யாவந்தனத்தைப்பற்றிய குறிப்பு நிச்சயம் 😃) அப்போது ஸீதையுடனான அந்த ராமன் லக்ஷ்மணனுடன் அபிஷேகம் செய்தவனாக, கிரிராஜபுத்ரியுடன் நந்தியுடன் அபிஷேகம் செய்யப்பட்டவனான பகவானான ஈஶன் ருத்ரன் இருப்பது போல, மின்னினான்.

No comments:

Post a Comment