Wednesday, April 17, 2019

Vishnu Sahasranama 250 to 257 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ரநாமம் -28

250.அஸங்க்யேய:-ஸங்க்ய விஷயம் அதிக்ராந்த: - அளவிடமுடியாதவன் . எண்ணிக்கையில் அடங்காத அனந்த கல்யாண குணங்களை உடையவன். பிரதேசத்தினாலும் காலத்தினாலும் அளக்க முடியாதவன். என்றும் உள்ளவன் எங்கும் உள்ளவன் ஆனதால்.

' நாந்தோ அஸ்தி மம திவ்யானாம் விபூதீனாம் ,' (ப. கீ. 1௦.40.) 
"என்னுடைய மகிமைகளுக்கு முடிவே இல்லை..

251.அப்ரமேயாத்மா- அறியமுடியாதவன். -பிரமேயம் என்றால் , நேரில் கண்டு அறிவது, ஊகித்து அறிவது , கேட்டு அறிவது , உவமானத்தினால் அறிவது என்னும் ஏதாவது ஒரு வகை பிரமாணத்தினால் வரும் அறிவு. பகவானை இவை எதனாலும் அறிய முடியாது. ஏனென்றால் அவன் அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டவன்.

'யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ,' எதை அறியமுடியாமல் வாக்கும் மனமும் திரும்பிவிட்டனவோ ,' –தைத்திரீய உபநிஷத்,

252.விசிஷ்ட: - எல்லாவற்றிற்கும் மேம்பட்டவர். 'மத்த: பரதரம் ந அன்யத் கிம்சித் அஸ்தி,' (ப.கீ. 7.7)" எனக்கு மேம்பட்டது என்பது ஒன்றும் இல்லை."

253.சிஷ்டக்ருத் , சுசி: - பக்தர்களை ஆட்கொண்டு அவர்களை புனிதமாக்குபவர்.

254. ஸித்தார்த்த: -வேண்டியவை எல்லாம் தமக்குத்தாமே அமைந்திருப்பவர். அவாப்த ஸமஸ்த காம: .

'ஸத்யகாம: ஸத்ய ஸங்கல்ப:,' (சாந்தோக்ய உப. ) 
'ந மே பார்த்த அஸ்தி கர்த்தவ்யம் த்ரிஷுலோகேஷு கிம்சன, நானவாப்தவ்யம் ஆப்தவ்யம் ,' (ப. கீ. 3.22)
"பார்த்தா எனக்கு மூவுலகிலும் செய்யவேண்டிய கருமம் ஒன்றும் இல்லை.அடைய வேண்டியது ஒன்றும் இல்லை."

ஸித்தானாம் அர்த்த: ஸித்தார்த்த: என்ற பொருளில் பார்த்தால் முமுக்ஷுக்களின் லட்சியமாக இருப்பவர்.

255. ஸித்தஸங்கல்ப: - தான் எண்ணுவதை முடிப்பவராக மட்டும் இல்லாதது பக்தர்கள் எண்ணுவதையும் முடித்துத் தருபவர். பீஷ்மரின் பிரதிக்ஞையை நிறைவேற்றியது போல.

256. ஸித்தித: - காரிய சித்தியை அளிப்பவர். அஷ்டமாசித்திகளையும் அளிப்பவர். முக்தியை அளிப்பவர்

257. ஸித்தி ஸாதன: - ஸித்தியை அடையும் ஸாதனம் ஆகவும் இருப்பவர். The Lord is both the means and the goal. 'அவனருளால் அவன் தாள் வணங்கி ,' என்பது போல.


No comments:

Post a Comment