Wednesday, April 17, 2019

Jnana samhitai in tamil

*முதல் அம்சம்* 

*ஞான சம்ஹிதை*

*புராண வரலாறு*

அதற்கு முன்  நைமிசாரண்யம் வனம் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

தற்போதைய உத்தராஞ்சல் மாநிலம் சீத்தாபூர் மாவட்டத்தில் லக்னோவில் இருந்து 89 கி மீ தொலைவில் கோமதி  ஆற்றக் கரையில் அமைந்துள்ள அழகிய திவ்ய தேசம்  நைமிசாரண்யம். இதை நைமிசார்  நிம்கார் என்றும் அழைக்கிறார்கள்.

ஒரு முறை முனிவர்கள் பிரம்மாவை அணுகி  "ஹே! ப்ரம்மதேவா!அமைதியாக பன்னிரெண்டு ஆண்டுகள் தவமிருந்து மாபெரும் வேள்வி செய்ய ஏற்றதொரு இடத்தை பூலோகத்தில் எங்களுக்கு காண்பித்தருள வேண்டும்" என வேண்டினர். 

அப்போது பிரம்மா ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து சக்கர வடிவில் வளைத்து அதனை உருட்டி விட்டு "இந்தச் சக்கரம் எங்கு போய் நிற்கிறதோ அதுவே நீங்கள் விரும்பிய இடம்" என்றார். அந்தச் சக்கரம் நின்ற இடம் தான் இந்த நைமிசாரண்ய வனம்.  நேமி என்றால் சக்கரம்  ஆரண்யம் என்றால் காடு என்றும் பொருள்.

நைமிசாரண்யத்தில் வேள்வியை நிறைவு செய்த முனிவர்கள் வேள்வியின் பலனை மகவிஷ்ணுவுக்கு தர எண்ணினார்கள். அதன் படியே வேள்வி குண்டத்தில் எழுந்தருளிய விஷ்ணுவும் அவிர்பாகம் பெற்றார். இத்தகைய புண்ணிய யாக பூமி தான் நைமிசாரண்யம். எனவே தான் அங்கு பல முனிவர்கள் வசித்து வருகிறார்கள்.

ஒரு காலத்தில், இத்தகைய நைமிசாரண்யம் எனும் புண்ணிய வனத்தில் வசிக்கின்ற தவ முனிவர்கள் அனைவரும் கூடினர். அவர்கள் அனைவரும் சேர்ந்து அதிவிநய பக்தியோடு, வியாஸ மகரிஷியின் சிஷ்யரும் நற்குணங்களையுடைய  சூத முனிவரை தரிசித்து அவரை வணங்கி தங்கள் சந்தேகங்களை பின்வருமாறு கேட்டார்கள்.

"மகாபாக்கியசாலியான சூத முனிவரே! நீங்கள் நீண்ட நெடுங்காலம் சிரஞ்சீவியாகச் சுகத்தோடு வாழ்வீர்களாக! நாங்கள் தங்களிடம் சிலவற்றை கேட்டு தெளிவு பெற விரும்புகிறோம். 

நீங்கள் வியாஸ பகவானது திருவருளால் கிருத கிருத்தியர் என்ற தன்மையை அடைந்தவர். கடந்த காலத்தில் நடந்தவைகளையும் நிகழ்காலத்தில் நடப்பவைகளையும் இனிவரும் காலத்தில் நடக்கப் போகும் விருத்தாந்தங்களையும் அறிந்து சொல்லக் கூடிய ஆற்றல் படைத்த திரிகால ஞானியாதலால் தங்களுக்குத் தெரியாத விஷயம் துளியுமிராது! 

குருவான வியாஸ பகவானின் கருணையால் அனைத்துமே சுலபமாக செய்யப்பட்டன. நீங்கள் தயவு செய்து சர்வோத்கர்ஷமான சிவபெருமானின் தத்துவத்தையும். அவருக்குரிய சிறந்த பூஜை முறையையும் பரமசிவனாரின் பற்பலவிதமான சரித்திரங்களையும் எங்களுக்குக் கூறியருள வேண்டும். 

நிர்க்குணனான மகேஸ்வரன் எப்படி சகுணனாகிறார்? 

உலகத்திற்கு சுகம் நல்குபவருமான சங்கரன் என்னும் திருப்பெயரையுடைய மகாதேவ பகவான் இந்த உலக படைப்புக்கு முன்பும் படைப்பின் மத்திய காலத்திலும் முடிவான பிரளய காலத்திலும் எவ்விதமாக இருக்கிறார்? 

அவர் எப்படித் தோற்றமளிக்கிறார்? 

எப்படிப் பிரசன்னமாகி இவ்வுலகங்களை முன்னிட்டு அவர் எத்தகைய பயன்களைக் கொடுக்கிறார்? 

எந்த உபாயத்தினால் சர்வேஸ்வரன் விரைவாகப் பிரசன்னமாவார்? 

என இவற்றையும் இன்னும் நாங்கள் கேட்டு அறியாத பல விஷயங்களையும் உத்தம் விரத சீலரான தாங்கள் தான் சொல்ல வேண்டும்?"

என்று சவுனகர் முதலான சனக முனிவர்கள் அதிக விருப்போடு கேட்கவே சூதமாமுனிவர் மிகவும் உற்சாகத்தோடு கூறலானார்.
[26/03, 18:56] +91 89393 42052: *ஜோதிர் லிங்கம் தோன்றிய கதை* 

சூத முனிவரும், "முனிவர்களில் சிறந்தவர்களே! நீங்கள் இப்பொழுது என்னிடம் கேட்ட விஷயங்களைப் போலவே முன்பொரு சமயம் நாரத முனிவர் பிரம்ம ஞானத்தை அறிவதற்காக அவரது பிதாவான நான்முக பிரம்மாவைக் கேட்டார். அதன் விவரத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று நாரத ப்ரம்ம சம்வாதத்தை கூறலானார்.

"அந்தணோத்தமர்களே திரிலோக சஞ்சாரியான நாரத முனிவர் ஒரு சமயம் எல்லா உலகங்களிலும் சஞ்சரித்து வரும் போது பரமாத்மாவான சிவபெருமானின் தத்துவத்தை அறிவதற்காக அவரது பெயரை சிந்தித்துக் கொண்டே தம் தந்தையான பிரும்ம தேவரிடம் சென்றார். 

பிரம்மாவை வணங்கி  "பிதாவே! பிரம்ம ஞானிகளில் சிறந்தவரே இவ்வுலகங்களையும் உயிரினங்களையும் படைத்து பிதா மகனாக விளங்கும் சிருஷ்டி கர்த்தாவே தங்கள் தயவினால் உத்தமமான விஷ்ணுவின் மகத்துவம் முழுவதையும் பக்தி மார்க்கத்தையும் ஞான மார்க்கத்தையும் செயற்கரிய தவமார்க்கத்தையும் தானமார்க்கத்தையும் அறிந்தேன். 

ஆனால் சிவபெருமானது தத்துவத்தையும், விதிப்படிக் கிரமமாகச் செய்யவேண்டிய அவருடைய பூஜையையும் அவரது சரிதங்களையும் நான் அறிந்து கொள்ளவில்லை. நிர்க்குணமான சிவதத்துவத்தைப்பற்றி, சர்வஞானியான தங்களைத் தவிர வேறு யாரை நான் கேட்கப்போகிறேன்? 

ஆகையால் சிவபெருமானது மகிமையையும் உலகுய்ய அவரால் அருளப்பட்ட விரதங்களையும் அவற்றால் அவர் மகிழ்ந்து உலகங்களுக்கு எந்தெந்தப் பயன்களைக் கொடுக்கிறாரோ அவற்றையும் சிவலிங்க உற்பத்தியையும் அவர் பார்வதியை மணந்த திருக்கல்யாண மகோத்சவத்தையும் நான் கேட்காத பிறவற்றையும் சொல்ல வேண்டும். 

இந்த விஷயங்களைப் பற்றி முன்பு நான் பலரிடம் பலவிதமாகக் கேட்டிருந்தும் எனக்கு திருப்தி ஏற்படவில்லை" என்றார் நாரதர். 

நாரதர் அவ்வாறு கேட்டதும் பிதா மகனான பிரம்மதேவர் சொல்ல தொடங்கினார்.
[26/03, 18:56] +91 89393 42052: நாரதா! எதை கேட்பதனால் அனைத்து உலகங்களின் எல்லா வித பாவங்களும் ஒழிந்து போகுமோ அத்தகைய சிவபெருமானது மிகச் சிறந்த தத்துவத்தையும் அவருடைய அற்புதமான திருவுருவத்தையும் என்னாலோ மஹாவிஷ்ணுவினாலோ கூட சரியாக அறிய முடியவில்லை. ஆயினும் எனக்கு  தெரிந்த வரையில் சொல்கிறேன் கேள் நாரதா! 

நித்யமானதாக தோற்றளிக்கின்ற நிலையற்றதான இந்த உலகம் எப்பொழுது கண்ணுக்கு புலப்படாததாக ஆகிவிடுகிறதோ, அப்பொழுது பிரம்மமாக ஆகவிடுகிறது. 

அப்பொழுது அந்த பிரம்மம் ஆனது ஸ்தூலமும் (பருமையும்) அல்ல சூக்ஷ்மமும் (நுண்மையும்) அல்ல; உற்பத்தியுடையதும் அல்ல; நாசதத்தை அடைவதும் அல்ல; ஆனால் அப்பொழுது அது உயர்ந்த சக்தியத்தையும் மிகச் சிறந்த அறிவையும் உடையதாக ஆகிறது. 

அத்தகைய பிரம்மத்தை யோகியர்கள் எப்பொழுதுமே ஞானக் கண்ணால் தான் பார்க்கிறார்கள். யாவுமாக ஆகி சிறந்ததாகவும் விளங்குகிற அந்த பிரம்மம் ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் வழங்கியது. 

சிலகாலம் இவ்வாறே கழிந்த பிறகு அந்தப் பிரம்மத்திற்கு இச்சை உண்டாயிற்று. (விஷ்ணு புராணத்தில் இந்த ஸ்ருஷ்டி இச்சை பற்றி விரிவாக கண்டோம்.) அதையே பிரகிருதி என்றும் மூலகாரணம் என்றும் சொல்வார்கள்.

அந்த  பிரகிருதி என்பவள் எட்டு கைகளையும் விசித்திரமான ஆடையையும் ஆயிரம் பூர்ண சந்திரர்களுக்குச் சமமான முகத்தையும் உடையவள். அநேக வித ஆபரணங்களை அணிந்தவள். அனைத்திற்கும் காரணமானவள். 

அவள் அழகு முதலியவற்றால் அத்விதீயையாகவும் புருஷக் கலப்பால் ஸ்தலதீயையாயும் இருக்கிறாள். அவளே மாயாதேவி ஆகிறாள். 

அந்த மாயாதேவி எந்த பிரம்மத்திடமிருந்து எந்தக் காலத்தில் தோன்றினாளோ, அந்த பிரமத்தினிடமிருந்தே அதே காலத்தில் புருஷனும் உண்டானான். அந்த இருவரும் ஒன்று சேர்ந்து நாம் இருவரும் யாது செய்ய வேண்டும்? என்று ஒருவரோடு ஒருவர் யோசித்தார்கள், அவர்கள் யோசனை செய்வதில் ஆவல் கொண்டவர்களாக இருந்தனர்.

இவ்வாறு அவர்கள் யோசித்து கொண்டிருக்கும் போது மங்களகரமான ஒரு அசரீரி வாக்கு, "உங்களுக்கு தோன்றிய சந்தேகத்தைப் போக்க, நீங்கள் இருவரும் தவம் செய்ய வேண்டும்" என்று கூறியது. அந்த வாக்கைக் கேட்க பிரகிருதி, புருஷன் ஆகிய இருவரும் மிகக் கடினமான தவம் புரிந்தார்கள். 

நாரதா! கவனமாகக் கேள்! யோக மார்க்கத்தை முக்கியமாக கருதிய அந்தப் பிரகிருதியும், புருஷனும் அதிக காலம் கழித்து தவ நிலையில் இருந்து கண் விழித்து, ஆஹா நம்மால் எவ்வளவு காலம் தவம் செய்யப்பட்டது? என்று வியந்தார்கள், 

அப்போது அவ்விருவருடைய தேகங்களிலிருந்து பலவிதமான நீர்ப் பெருக்குகள் உண்டாகி, சகல உலகங்களிலும் வியாபித்தது எல்லையற்றதாகவும் தொட்டவுடனே பாபத்தை போக்குவதுமான அந்தத் தண்ணீரானது பிரம்மரூபமாக ஆயிற்று.

அப்போது புருஷன் மிகவும் களைப்படைந்து பிரகிருதியுடன் சேர்ந்து, அந்த ஜலத்தில் பற்பலகாலம் பிரியத்தோடு துயில் கொண்டான். அந்த மஹாத்மாவான புருஷனுக்கு, அந்த ஜல சயன காரணத்தால், நாராயணன் என்ற பெயர் வழங்கலாயிற்று. 

அந்தக் காலத்தில் அவர்கள் இருவரையும் தவிர வேறொன்றும் உண்டாகவில்லை. பிறகு தான் பரமாத்மா சம்பந்தமான தத்துவங்கள் உண்டாயின.
பிரகிருதியினிடத்தில் மஹத்தும் அந்த மஹத்தினிடத்தில் ஸத்வம், இராஜஸம் தாமஸம் என்ற முக்குணங்களும் தோன்றின.

இந்த மூன்று குணங்களில் இருந்து ஸப்தம்; ஸ்பரிசம், ரூபம், ரஸம், கந்தம் (ஓசை ஊறு, ஒளி, சுவை, நாற்றம்) என்ற பஞ்ச தன் மாத்திரைகளும் அவற்றிலிருந்து, ஆகாயம் வாயு, தேயு, அப்பு பிருத்வி என்ற பஞ்ச பூதங்களும் (வானம், காற்று, நெருப்பு, நீர், நிலம், என்ற ஐம்பெரும் பருப்பொருட்களும்) தோன்றின. 

அந்த பஞ்ச பூதங்களில் இருந்து, வாக்கு, பாதம், பாணி பாயுரு உபஸ்தம் என்ற கண்மேந்திரியங்களும் (வாய், கால், கை, மலவாய், கண், மூக்கு, செவி என்ற ஞான இந்திரியங்களும்) (ஐம்பொறிகளும்) மனம், புத்தி, சித்தம் என்ற அந்தக் கரணங்களும், (உட்கருவிகளும்) தோன்றின. 

இந்த தத்துவங்கள் இவ்வாறான எண்ணிக்கைப்பட்டது ஆகும். பிரகருதி மற்றும் புருஷனை தவிர அந்த தத்துவங்கள் ஜல மாயமாகும். 24 தத்துவங்களுடன் சேர்ந்துள்ள அந்த தத்துவங்கள் பிரகிருதி புருஷர்களால் ஒன்றாக சேர்க்கப்படுகிறது.

அத்தகைய தத்துவத்தை தன் சுவாதீனப் படுத்திக் கொண்டு பிரம்ம ஸ்வரூபமான ஜலத்தில் நித்திரை செய்யும் தேவன் நாராயணன். அந்த நாபியிலிருந்து எண்ணிறந்த இதழ்களுடன் கூடியதாகவும் தாதுக்களால் பரவியதாகவும், பலயோசனை அகல உயரமும், பல கோடி சூரிய காந்தியும் கொண்டதாகவும் பேரழகுள்ள அதி உன்னதத் தாமரை மலர் ஒன்று தோன்றியது. 

அந்தத்தாமரை மலரிலிருந்து ஹிரண்யகர்ப்பனான நான் புத்திரனாக உதித்தேன். நாராயணனுடைய மோகமாயையால் நான் யார்? எங்கிருந்து தோன்றினேன்? நான் யாது செய்ய வேண்டும்? நான் யாருக்கு புத்திரன்? என்னை உண்டு பண்ணியவர் யார்? இவ்வாறான யோசனைகளிலும் சந்தேகங்களிலும் ஆழ்ந்திருந்த எனக்கு ஒன்றும் நிச்சயமாகத் தோன்றவில்லை 

மறுபடியும் நான் வந்த காரணத்தால் மோகத்தை அடைந்தேன். பிறகு 'இந்த தாமரையின் அடிப்பகுதி எங்கு இருக்கிறதோ அங்கு தான் என்னை சிருஷ்டி செய்தவனும் இருப்பான் அதற்குச் சந்தேகமே இல்லை' என்று மனோதிடம் செய்து கொண்டு தாமரை மலரிலிருந்து கீழே இறங்கினேன்.

அநேக ஆண்டுகள் ஒவ்வொரு நாளத்திலும் சுற்றியும் மோகிதனான நான் உத்தமமான அந்தத் தாமரையின் அடிப்பகுதியைக் காணவே இல்லை. பிறகு சந்தேகத்தோடு அதன் மலரையடைய விரும்பினேன். அதன் காம்பு வழியாகவே மேல் நோக்கி ஏறினேன். அப்போதும் மலரின் மொக்கையையும் நான் அடையவில்லை. 

இந்த விதமாக அந்த காம்பின் வழியிலேயே சுற்றி கொண்டிருந்தேன் ஆண்டுகள் பலவாயின. க்ஷணநேரம் நான் களைப்பினால் மூர்ச்சையானேன், அப்போது ஒரு வாக்கு "தவம் செய்!" என்று மங்களகரமாக ஒலித்தது. அந்த அசரீரியை கேட்ட நான், 12 ஆண்டுகள் தவம் செய்தேன்.
என் தவத்தின் பலனாக அப்போது, சங்கு, சக்கரம், கதை, ஏந்திய திருக்கரங்களோடு ஸ்ரீ விஷ்ணுமூர்த்தி எனக்கு அருள் புரிவதற்காக காட்சியளித்தார். பிரகிருதியோடு உண்டு செய்யப்பட்ட விஷ்ணு ரூபத்தைப் பார்த்த நான் ஆனந்தமடைந்தேன். 

தங்கமயமான காந்தியோடு வெளிக்கு ஸத்வகுணப்பிரதனாக தோன்றிய போதிலும் துஷ்டர்களை நாசம் செய்யும் பொருட்டு உள்ளத்தில் தபோ குணப்பிரதனாகவும் நாராயணனாகவும் இருந்தார்.

யார் ஒருவர் என் கண்களுக்குப் புலப்பட்டாரோ, அத்தகைய ஸ்ரீ விஷ்ணுவின் மாயை வயப்பட்ட நான், அவரை "நீ யார்? என்று சொல்" என்று கேட்டேன். நான்
அவ்வாறு கேட்டதும் விஷ்ணு என்னைப் பார்த்து, "நல்ல விரதமுடையவனே!  குழந்தாய்! ஸத்வ குணத்தால் வியாபதனாக உன்னை நிர்மாணம் செய்தவனும் விஷ்ணுவும் நான் தான் என்பதை அறிந்து கொள்! இவ்விஷயம் உண்மை!" என்று புன்னகை செய்தார். 

அவரது வார்த்தையைக் கேட்டதும் அவரது மாயை வசப்பட்டு நான் வாதிட துவங்கினேன். "எப்படி குருவானவன் தன் சீடனை எளிதாகப் பேசுவானோ. அவ்வாறு படைப்புத் தொழில் புரியும் என்னை பார்த்து அடா, குழந்தாய் என்று சொல்கிறாய். 

உன்னை மட்டும் இந்த உலகங்களை உற்பத்தி செய்கிறவன் என்றும் மாயையை வியாபிக்கச் செய்யும் விஷ்ணு என்றும் உலகங்கள் யாவற்றையும் தன்னிடத்தில் வைத்துக் கொண்டு இருப்பவன் என்றும் இரட்சிப்பவன் என்றும் நீயும் என் மோகத்தால் இப்படிப் பேசுகிறாய். அதற்கு காரணம் வேண்டாமா" அதைச் சொல் என்று கேட்டேன். 

அதற்கு அந்த விஷ்ணு நானே உலக காரணன் என்னுடைய சரீரத்திலிருந்து தான் நீயே உண்டானாய். இவ்வுலகங்களை உருவாக்க செய்வதற்கு உண்டான என்னை நீ மறந்து விட்டாய். இந்த விஷயத்தில் தவறு உன்னுடையதல்ல. இது எனது மாயையின் செயல் பிரம்மாவோ: உண்மையாகச் சொல்லுகிறேன். 

முன்பு என்னால் உற்பத்தி செய்யப்பட்ட இருபத்து நான்கு தத்துவங்களும் என்னிடத்திலேயே இருக்கின்றன" என்று கூறினார். 

ஸ்ரீமந்நாராயணனின்  அந்த வார்த்தையைக் கேட்டு கோபங் கொண்ட நான் நீ யார்? இவ்வளவு பேசும் உன்னையும் உண்டு பண்ணியவன் ஒருவன் இருக்கத்தான் வேண்டும்!" என்றுகூறி அவருடன் தீவிரமாக வாக்கு யுத்தஞ் செய்தேன்.

இவ்விதம் நாங்கள் இருவரும் வாதப் போர் புரிந்து வன்முறைச் செயலில் ஈடுபட்டபோது எங்கள் இருவருடைய விவாதத்தைத் தீர்ப்பதற்காகவும் எங்களுக்கு ஞானம் தோன்றச் செய்யவும் எங்களிருவருக்கும் நடுவே அதி அற்புதமான ஒரு ஜோதிலிங்கம் உண்டாயிற்று.

நாரதா! பல்லாயிரம் கோடி ஜ்வாலைகளால் பூரணமாகவும் காலாக்கினிக்கு இணையாகவும் நாசவிருத்திகள் இல்லாததாகவும் ஒப்பற்றதாகவும் வாக்குக்கும் மனத்திற்கும் எட்டாததாகவும் பிரகாசம் இல்லாததாகவும் உலகங்களை உண்டு பண்ணத்தக்கதாகவும் விளங்கியது. 

அந்த சோதிலிங்கத்தின் சுடர்களால் மயக்க நிலையடைந்த விஷ்ணு என்னைப் பார்த்து  "பிரம்மாவே! நீ ஏன் யுத்தம் செய்கிறாய்? நான் ஏன் உன்னுடன் யுத்தம் செய்ய வேண்டும்? நம் இருவருக்கும் மத்தியில் தோன்றிய இந்த லிங்கம் எப்படித் தோன்றியது? யாரால் தோன்றியது? ஆகவே இந்த இடத்தில் மூன்றாவது நபர் ஒருவர் இருக்கிறார். நம் இருவரின் போராட்டத்தையும் நிறுத்திக் கொள்வோம். அக்கினி மயமாக இங்கே தோன்றியுள்ள இந்த ஜோதிலிங்கம் எங்கிருந்து உண்டாயிற்று? அதை முதலில் கண்டறிவோம். 

நான்கு திசைகளிலும், விண்ணிலும், மண்ணிலும் இதற்குரிய ஆதாரம் எங்கிருக்கிறது என்று தேடி காண்போம். அதற்காக நீ அன்னப் பறவையின் உருவத்தை எடுத்துக் கொண்டு காற்றின் வேகத்தை விட விரைந்து சென்று அதி வேகமாக ஆகாயத்தில் புகுந்து ஆராய வேண்டும், 

நானும் வராக வடிவம் (பன்றியுருவம்) எடுத்த இந்த லிங்கத்தின் அஸ்திவாரத்தையே பார்த்து விடுகிறேன்!" என்று சொல்லிவிட்டு பன்றி வடிவமெடுத்து பூமியைத் தோண்டித் துளைத்துக் கொண்டு சென்றார்

No comments:

Post a Comment