Monday, October 31, 2016

Shiva doing upadesam - Temples

*ஈசன் உபதேசம்...*

*1, ஓமாம்புலியூர் –*

தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.

*2, உத்திரகோசமங்கை*

பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.

*3, இன்னம்பர் –*

அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.

*4, திருவுசாத்தானம்*

இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.

*5, ஆலங்குடி*

சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.

*6, திருவான்மியூர்*

அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.

*7, திருவாவடுதுறை*

அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.

*8, சிதம்பரம்*

பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.

*9, திருப்பூவாளியூர்*

நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.

*10, திருமங்களம்*

சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.

*11, திருக்கழு குன்றம்*

சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.

*12, திருமயிலை*

1000 முனிவர்கள் அறநெறிகளை அறிவுறையாக பெற்றது.

*13, செய்யாறு*

வேதம் பற்றி கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.

*14, திருவெண்காடு*

நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோயதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர்.

*15, திருப்பனந்தாள்*

அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.

*16, திருக்கடவூர்*

பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.

*17, திருவானைக்கா*

அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.

*18, மயிலாடுதுறை*

குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.

*19, திருவாவடுதுறை*

அகத்தியமுனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.

*20, தென்மருதூர்*

1000 முனிவர்க்கு உபதேசம் அருளியது.

*21, விருத்தாசலம்*

இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.

*22, திருப்பெருந்துறை*

மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம்.

*23, உத்தரமாயூரம்*

ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.

*24, காஞ்சி*

ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.

*25, திருப்புறம்பயம்*

சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.

*26, விளநகர்*

அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.

*27, திருத்துருத்தி*

சிவன் பிரம்மசாரியாய் வேதத்தை தாமே சொன்னது.

*28, கரூர்*

ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.

*29, திருவோத்தூர்*

ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்

Purattasi month - Periyavaa

ப்ரதீபப் பேழை--"ஒரு பழைய காமகோடி இதழ்"
_____________________________________________

கன்யையில் கன்யாபூஜையும் பித்ருபூஜையும்
பரிவர்த்தன ஏகாதசி, சிரவணத்வாதசி, விஸ்வரூப யாத்திரை, மஹாளயபக்ஷம், நவராத்திரி ஆரம்பம் முதலிய புண்ணிய நாட்கள் நிறைந்தது. கன்யா ராசியில் சூரியன் வரும் மாதம்.

अस्मै वै पितरौ पुत्रान् बिभृतः (யஜுர்வேதம் 6.1.6.) இதற்காகத்தான் பெற்றோர் புத்திரர்களைப் பரிக்கிறார்கள்.

ஸுபர்ணா என்னும் தாய் தன் புத்திரர்களை நோக்கிக் கூறும் சொல் இது. கத்ரூ என்பாள் ஸுபர்ணையை அடிமை கொண்டாள். அதிலிருந்து தன்னை விடுவிப்பது புத்திரர் கடமை என்று அவள் சொன்னாள். தன்னைத்தான் காத்துக்கொள்ள முடியாத சைசவத்தில் பல கஷ்டங்களை அநுபவித்துப் பெற்றோர் சிசுக்களைக் காப்பது எதற்காக? பெற்றோர் தம்மைக் காத்துக்கொள்ள முடியாதபோது புத்திரர்கள் பித்ருக்களைக் காப்பதற்காக அல்லவா?

ஸுபர்ணை கூறிய வண்ணம் ஸ்வர்க்கத்திலுள்ள ஸோமத்தைக் கொண்டு வர முயன்ற ஜகதீ, திருஷ்டுப் என்ற புத்திரர்கள் தம் பலத்தை இழந்து வெற்றி பெறாமல் திரும்பினர். காயத்திரி என்னும் புதல்வன் கிளம்பி, தேவலோகம் சென்றான்; சகோதரர் இழந்த பொருள்களையும் மீட்டு வந்தான்; ஸோமத்தையும் கொண்டுவந்து தாயை விடுவித்தான்.

இதையே பதினெண் புராணகர்த்தாவான வியாசர், "பாம்புகளின் தாயான கத்ரூ, கருடன் மாதாவான ஸுபர்ணையை அடிமையாக்கினாள். ஸ்வர்க்கத்திலுள்ள அமிருதத்தைக் கொண்டுவந்தால் அடிமை அகலுமென்று கத்ரூ கூறக் கேட்டார் கருடன். பெற்றோர் பெரியோர் ஆசியைப் பெற்று விண்ணுலகம் சென்றார்; வீரர்களுடன் போர் புரிந்தார்; வெற்றி கொண்டார்; தாயைக் காத்தார்" என்று சுவை நிறைந்த கதையால் வேதக் கருத்தைச் சித்திரித்துப் போஷித்தார்.

நம்மைப் பெற்றெடுத்து வளர்த்த பெற்றோர் ஐம்பூத உடலையும் மண்ணுலகையும் விட்டனர். விண்ணுலகில் ஜலமயமான உடல் பெற்றுப் பித்ருக்களாகி வைவஸ்வதன் ஆதியின் கீழ் ப்ரஜைகளாக வாழ்கின்றனர். அது போக பூமி. அங்கே அவர்கள் தம் உடலுக்கு வேண்டியதைத் தேட முடியாது. இந்தச் சமயத்தில்தான், தாம் செய்த உதவிக்குக் கைம்மாறு வேண்டுகின்றனர். யமதர்மராஜன் கருணைகொண்டு பித்ருக்களை அவ்வுலகிலிருந்து மண்ணுலகுக்கு அனுப்புகிறார். 'புத்திரரிடம் சென்று உண்டு வாருங்கள்' என்று. அந்தக் காலமே மஹாளய பக்ஷம் எனப்படும். பித்ருக்கள் வசித்த இடத்தைச் சுத்தம் செய்வதற்காகவோ அல்லது புத்திராதிகள் அளிக்கும் அன்னபானங்களை அருந்தி அவர்களை ஆசீர்வதிக்கட்டும் என்ற எண்ணங்கொண்டோ பித்ருக்களை அனுப்புகிறார். அவர்களும் 'அறுசுவை அன்னம் அகப்படும். பதினாறு நாட்களும் மஹாளய சிராத்தம் செய்வர்.

பெரும் உத்சவ காலம் அது' என்று சுருதிப் புத்திரரை அநுக்கிரகிக்கின்றனர். அதனால்தான் மஹா ஆலயம் உத்சவ ஆனந்தத்துக்கு இருப்பிடம் என்ற பெயர் தோன்றிற்றோ? அந்தத் தினங்களில் ஒரு நாளாவது மஹாளய சிராத்தம் செய்யாவிடில் ஏமாற்றமடைந்து துக்கத்துடன், "உனக்குச் சிராத்தம் செய்யப் புத்திரனில்லாமல் போகட்டும். மண்ணுலகிலும் உள்ள உணவு கிடைக்காது" என்று சபித்துச் செல்வார்கள். பித்ரு சாபத்துக்கு ஆளாகாமலிருப்போம்.

प्रेतपक्षं प्रतीक्षन्ते गुरुवाञ्छासमन्विताः।
कन्यागते सवितरि पितरो यान्ति वै सुतान्॥
ततो वृश्चिकसम्प्राप्तौ निराशाः पितरो गताः।
पुनः स्वभवनं यान्ति शापं दत्वा सुदारुणम्॥ ------माधवीये।
பிச்சை எடுத்து வாழ்பவர்கூட ஒரு பிடி அன்னமாவது பித்ருக்களை நாடி அளிக்க வேண்டும் என்கின்றனர் மஹரிஷிகள். மஹாபரணி வ்யதீபாதம், மத்யமாஷ்டமி, த்ரயோதசி இந்த நாட்களிலாவது சிராத்தம் செய்தால் கயா சிராத்த பலன் உண்டாகும்.

லௌகிக முறையில் சிறிது வாசா உபகாரம் செய்தவருக்குக்கூட வந்தனச் சொல் வழங்குவது நாகரிகமென்று கருதுகிறோம். பெற்றெடுத்து வளர்த்து நம்மை நல்ல நிலைக்குக் கொண்டுவந்தவர்கள் உணவுக்கு நம்மை நாடி வரும்பொழுது பதினாறு நாட்களிலும் எள்ளும் நீருமேனும் தராவிடில் அது த்ரோஹமல்லவா? பெற்றோர் திதியிலேனும் மஹாளயம் செய்வது அவர் பொருளுக்கு உரிமை பாராட்டுவோர் கடமையாகும்.

"பக்ஷ மஹாளயம் செய். சக்தி இல்லாவிடில் பஞ்சமியிலிருந்து தர்சம் வரையில், அல்லது அஷ்டமியிலிருந்து தர்சம் வரையில் அல்லது தசமி முதல் தர்சம் வரையிலாவது மஹாளயம் செய்" என்று தர்ம நூல் சக்தியில்லாதவருக்குச் சலுகை காட்டுகிறது. விதிப்படி அன்ன சிராத்தம் செய்க. அதற்குச் சக்தியில்லாதவர் ஹிரண்ய சிராத்தமேனும் செய்யட்டும். அதற்கும் பொருளில்லாதவர், ஸர்வஸுலபமான திலஜலமளித்துப் பித்ருக்கள் அருளால் ஸம்பத்தைப் பெறலாம்.

16 நாள் ஆண்டுக்கு ஒரு முறை பித்ருபூஜை நடத்தினர் முன்னோர். மஹாளயம் செய்யாவிடில் பிரத்யவாயம்; செய்தால் ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு வகையான பலன் உண்டு என்கிறார் ஆபஸ்தம்பர். முக்கியமாக பித்ருசாபத்தால்தான் புத்திரபாக்கியம் இல்லாமற் போகிறது.

पुत्रानयुस्तथारोग्यं ऐश्वर्यमतुलं तथा।
प्राप्नोति पञ्चमे दत्तश्राद्धं कामांस्तथापरान्॥
பஞ்சமே என்பது ஆஷாட்யாதி பஞ்சமாபரபக்ஷம் என்பதாம். இது ஜாபாலியின் உபதேசம்.

துரீயாச்ரமிகளுக்குத் துவாதசியிலும், அஸ்த்ர சஸ்திரங்களால் இறந்தோருக்குச் சதுர்த்தசியிலும் செய்ய வேண்டும். பக்ஷ மஹாளயம் செய்வோர் அமாவாஸ்யையில் இரண்டு தர்ப்பணங்கள் செய்ய வேண்டும். பித்ருக்களை நாடி ஒரே நாளில் இரண்டு சிராத்தம் செய்யக்கூடாது. ஆயினும் தர்சத்தில் பித்ரு மாதாமஹ வர்க்கம் இரண்டுக்கே தர்ப்பணம். மஹாளலயத்திலோ காருண்ய பித்ருக்களுக்கும் தர்ப்பணாதிகள் உண்டு.

காருண்ய பித்ருக்கள் யார்?
சிறிய தந்தை, பெரிய தந்தை, தமையன், தம்பி, தன் புத்திரர்கள், அத்தை, அம்மான், பெரிய தாயார், சிறிய தாயார், சகோதரிகள் அவர்களது புத்திரர்கள், மனைவி, மாமனார், மாமியார், நாட்டுப்பெண், மைத்துனன், குரு, யஜமானன், நண்பர்கள் ஆகியவர்களுக்கு மஹாளயத்தில் தர்ப்பணாதிகள் செய்ய வேண்டும்.

நமது ஆயுளில் ஒரு முறையாவது மஹாளய அன்னச்ராத்தம் செய்ய வேண்டாமா?

Good & Evil within us

There are four yugas widely accepted in Hinduism. They are :

1. Satya yug

2. Treta yug (Ramayana)

3. Dwapara yug (Mahabharata)

4. Kal yug (Present)

In satya yug, the fight was between two worlds.( Devalok and Asura lok) Asura lok being the evil, was a different WORLD.

In Treta yug, the fight was between Rama and Ravana. Both rulers from two different COUNTRIES.

In dwapara yug, the fight was between Pandavas and Kauravas. Both good and evil from the SAME FAMILY.

Kindly note how the evil is getting closer

For example, from a DIFFERENT WORLD to a DIFFERENT COUNTRY to the SAME FAMILY.

Now, know where is the evil in Kalyug? It is inside us.

Both GOOD AND EVIL LIVES WITHIN. The battle is within us. Who will we give victory to. Our inner goodness or the evil within?

Sangeetha Samrajya Sancharini song in Mohanam

https://www.youtube.com/watch?v=8favXfw8Ibw

Sangeetha Samrajya Sancharini
Ragam : Mohanam Thalam : Adhi

Sloka

Swetha padmasana
Swetha pushpopa shobitha
Swethambaradara
Swetha gandanu lepana
Swethaksha soothra hastha
Swetha chandana charchitha
Swetha veernadara
Swethalankara boositha
Swetha hamsagamini
Sringeri pura vaasini
Sree sharada thwam namasthe

Pallavi

Sangeetha samrajya sancharini
Srungara sringeri pura vasini (Sangeetha)



Anupallavi

Tunga Taranga Mandira vasini
Sannutha srichakra madya nivasini
Kaladi sankara kavya pravahini
Ashta dikpalaka brahma vishvasini (Sangeetha)

Charanam
Gandara panchama deivtha varshini
Neema rahitha lavanya roopini
Mandara kusuma mani maya booshani
Madurya mohana raga swaroopini

Sarasa raga rasa sakala kala
Hamsadoolika thalpa sthithe
Suragnadhi muni brahmathyachutha
Krishnadasa kritha gananuthe

Varada vamakara veena vadana
Pasha pusthaka malanuthe
Saras chandrika mukha kamala
Bahuvida mangala pala pradhe (Sangeetha)

Doing action without expectations - Spiritual story

🌳அர்சுணனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்த போது வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும் படி கேட்டார்.

🍀அர்சுணன் மனமிரங்கி 1000 பொற்காசுக்களை கொடுக்க, ஆகா இது நம் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்காவது உபயோகப்படுமே என்றெண்ணி சந்தோசத்தோடு வீட்டிற்கு எடுத்து சென்றார் வயோதிகர்

🍀 இதை தொலைவிலிருந்து கவனித்த கள்வனொருவன் களவாடி சென்று விட்டான்.

🌳சுமார் 10 தினங்கள் கழிந்து மீண்டும் அவ் வழியே வந்த அர்சுணன் இதை கேள்விப் பட்டு, இந்த முறை விலையுயர்ந்த நவரத்தினக் கல்லை கொடுத்து இதையாவது பத்திரமாக வைத்திருந்து வாழ்க்கையை சுகமாக களியுங்கள் என்றான். 

🌼இந்தமுறை மிகக் கவனத்துடன் அதை வீட்டிற்கு கொண்டு சென்றவன் தன் மனைவி பிள்ளைகளிடம் கூட சொல்லாமல் பரணில் இருந்த ஒரு பானையில் போட்டு வைத்து அவ்வப்போது விட்டில் யாருமில்லா சமயம் மட்டும் எடுத்துப் பார்த்துக் கொண்டு கவனமாக பாதுகாத்து வந்தான்.

🌼இதையறியாத அவன் மனைவி ஒருமுறை பரணிலிருந்த அந்த பானையே எடுத்துக் கொண்டு அருகிலிருந்த ஆற்றிற்கு நீரெடுக்கச் சென்றாள். 

🍂அப்போது பானையை கழுவும் போது அது ஆற்றில் தவறி விழுந்து விட்டது.

🍀அவள் நீரெடுத்து வீட்டில் நுழையும் சமயம் வெளியே சென்ற வயோதிகர் அந்த குடத்தை பார்த்து அதிர்ச்சியாகி எங்கே அதிலிருந்த கல் என்று மனைவியை கேட்டான்.

🍄ஏது மறியாத மனைவி நடந்ததை கூற, உடனே ஆற்றிற்கு சென்ற அவன் அன்றிரவு வரை தேடியும் பலனின்றி வீட்டிற்கு சோகத்துடன் திரும்பினான்.

🌹சிலதினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்சுனனும் அவனைப் பார்க்கும் போது, அவன் நடந்ததைக் கூற அர்சுனன் கண்ணனிடம் இவன் அதிர்ஷ்டமே இல்லாதவன் என்று கூறனார்.

🌾அதை ஆமோதித்த கண்ணனும் இந்த முறை நீ இவனுக்கு 2 வராகன்களை மட்டும் கொடு என்றார்.

🌳ஆச்சர்யப்பட்டான் அர்சுனன், ஆனாலும் 2 காசுகள் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, இதென்ன விந்தை….!வெறும் 2 காசுகள் மட்டும் அவனுக்கு என்ன சந்தோசத்தை கொடுத்து விடும் எனக் கேட்டான்…?

🍁எனக்கும் தெரியவில்லை..?
என்னதான் நடக்கிறது பார்க்கலாம் வா, அவன் பின்னால் செல்லலாம், எனக்கூறி இருவரும் பின் தொடர்ந்தனர்.

🌿அவன் வீட்டடிற்குச் செல்லும் வழியில் மீனவன் ஒருவன் உயிருடன் தான் பிடித்து வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கி கொள்கிறாயா என கேட்டான்…?

🍀உடனே தனக்குள் யோசித்த இவன் இந்த 2 சாதாரண காசு எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியை கூட போக்காது என எண்ணி அந்த மீன்களை விலை கொடுத்து வாங்கி ஆற்றிலே திரும்ப விட வேண்டும் என்ற முடிவுடன் வாங்கி விட்டான்.

🌼அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டு விட்டு அடுத்ததை விடும் முன் அது சுவாசிக்க முடியாமல் அதன் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதை பார்த்து மீனின் வாயில் விரலை விட்டு சிக்கியிருந்ததை எடுத்தான். 

🌂அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றான்.ஆம், அவன் மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த கல் தான் அது…! 

🌷உடனே சந்தோசத்தின் மிகுதியால் என்னிடமே சிக்கி விட்டது என்று கூச்சலிட்டான்.

🌴அதே நேரம் யதார்த்தமாக அவ்வழியே, இவனிடம் கொள்ளையடித்த கள்வன் வர அவன் திடுக்கிட்டு, தன்னைத்தான் கூறுகிறான் என்றெண்ணித் திரும்ப ஓடுகையில் கண்ணனும் அர்ச்சுணனும் அவனைப் பிடித்து விட்டனர்.

🍀அவன் அனைத்தையும் ஒப்புக்கொண்டு இவனிடம் களவாடியது மற்றுமல்லாது மற்ற காசுகள் மற்றும் அணிகலன்கள் அனைத்தையும் கொடுத்து விட்டான்.

 🌳அதை அனைத்தையும் வயோதிகருக்கு கொடுத்து அனுப்பிவிட்டு, ஆச்சர்யப் பட்ட அர்சுணன் கண்ணனிடம் இது எப்படி சாத்தியம் எனக் கேட்க…?கண்ணனும் சிரித்துக்கொண்டே…!

🌳இதே வயோதிகர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என எண்ணினார்.

🌿அடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல் மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார்.

🌻ஆகவே அவையிரண்டும் அவரிடம் தங்கவில்லை.

🌲ஆனால் இப்போதோ தன்னிடமிருந்தது மிகக்குறைவானது என்பது தெரிந்தும் தனக்கு உதவாவிட்டாலும் இன்னொரு உயிராவது வாழட்டுமே என தன்னலமில்லாது நினைத்ததால்….!!

🍁அவனை விட்டு சென்ற செல்வம் அவனுக்கே கிடைத்தது. இதில் எனது செயல் ஏதுமில்லை எனக் கூறினார்.

🌂இதைப் போலத்தான் ஒவ்வொருவரும் பலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்கள் உரிய நேரத்தில் பயனளிக்கும்.

Sunday, October 30, 2016

Dashakshara mantra stotram of Ganesha from Mudgala purana

Courtesy:Sri.Mandalapati

दशाक्षरमन्त्रस्तोत्रम्
 
श्रीगणेशाय नमः ।
मुद्गल उवाच ।
असच्छक्तिश्च सत्सूर्यः समो विष्णुर्महामुने । अव्यक्तः शङ्करस्तेषां संयोगे 
गणपो भवेत् ॥१॥
संयोगे मायया युक्तो गणेशो ब्रह्मनायकः । अयोगे मायया हीनो भवति मुनिसत्तमा ॥२॥
संयोगायोगयोर्योगे योगो गणेशसञ्ज्ञितः । शान्तिभ्यः शान्तिदः प्रोक्तो भजने 
भक्तिसंयुतः ॥३॥
एवमुक्त्वा गणेशस्य ददौ मन्त्रं स मुद्गलः । एकाक्षरं विधियुतं ततः 
सोऽन्तर्हितोऽभवत् ॥४॥
ततोऽहं गणराजं तमभजं सर्वभावतः । तेन शान्ति समायुक्तश्चरामि त्वकुतोभयः ॥५॥
न गणेशात्परं ब्रह्म न गणेशात्परं तपः । न ग़णेशात्परं कर्म ज्ञानं न 
गणपात्परम् ॥६॥
न गणेशात्परो योगो भक्तिर्न गणपात्परा । तस्मात्स सर्वपूज्योऽयं सर्वादौ 
सिद्धिदायकः ॥७॥
गणेशानं परित्यज्य कर्मज्ञानादिकं चरेत् । तत्सर्वं निष्फलं याति भस्मनि 
प्रहुतं यथा ॥८॥
सर्वांस्त्यज्य गणेशं यो भजतेऽनन्यचेतसा । सर्वसिद्धिं लभेत्सद्यो ब्रह्मभूतः 
स कथ्यते ॥९॥
एवमुक्त्वाऽत्रितस्तस्मै ददौ मन्त्रं दशाक्षरम् । विधियुक्तं ततः 
साक्षादन्तर्धानं चकार ह ॥१०॥
इति दशाक्षरमन्त्रस्तोत्रं समाप्तम् ।

Tyagraja Krithis App for Android and Apple mobile devices

Courtesy:Sri.Jayaram Haravu


Dear Sri. Ramesh

I am very happy to announce that of 108 krithis of Tyagaraja in the mobile App called Krithis is now available both on Android and Apple IOS. Those interested, please go to the Google Play store or the Apple store and search for Krithis. The app's icon is a postage stamp that was issued by the Govt., of India to commemorate the Saint musician. The App can now be downloaded and installed. 

The description of the App is given below:

The App contains insightful commentaries that describe the subtleties and nuances of 108 krithis of Tyagaraja. Each krithi has been sung by a well-known singer who voluntered to sing for the App in its original form as a CD application developed in 1996-98. Entries for each krithi include details such as Raga, Tala, Theme, Vocalist, Lyrical content (meanings of Telugu words used in the krithi), Notes, Summary of the krithi. The App preserves the krithi and other details as present in the CD application which became outdated due to a change in the technology then used. Special Commentaries written by Sri. B R C Iyengar (now late) elucidate the speciality of the krithi, where in a concert it might be fitted to be sung, and often the mood of the Saint Composer.. The App is useful to teachers and learners of vocal Carnatic music. It is also valuable for music lovers as they are able to better appreciate the lyric and song. An informative audio-visual slide-show appears right at the top of the list of krithis in the App. The slide show describes, the background, life, works and the spiritual mission that drove the composer musician. 

Your comments are welcome. 

You may like to bring this App to the notice of members in your group. I would appreciate knowing from those who download and install the App. 

Regards.

Jayaram Haravu

Friday, October 28, 2016

Name of atheist - Sanskrit joke

एक: अतीव नास्तिक:स्वपुत्र नामदेयं  " देव: नास्ति" इति स्थापितवान् |
An atheist named his son - NO GOD

उपस्थिति  परिशोधन समये -
While checking attendance

अध्यापक:  देव: नास्ति  
Teacher : NO GOD

छात्रः  अस्मि भो: 
student: Present sir

Thursday, October 27, 2016

Deepavali snanam - Periyavaa

ஸ்ரீ மஹாபெரியவாள் தீபாவளி ஸ்நானம் செய்ய முதலில் தரையில் எண்ணையால் 7 பொட்டு வைத்து பிறகு வலது துடையிலும் 7 பொட்டு வைத்துக்கொண்டு பிறகு அந்த எண்ணையை வழித்து கீழ்கண்ட ஸ்லோகத்துடன் தலையில் வைத்துக்கொண்டு ஸ்நானம் செய்வார்கள். நாமும் அதை பின்பற்றி ஸ்ரீசரணாள் அனுக்ரஹிக்க ப்ரார்த்திப்போம் இந்த தீபாவளித்திருநாளில். அஸ்வத்தாமா பலிர் வ்யாஸ: | ஹனுமான்ச விபீஷண:|ஸுகன்ச பரசுராமஸ்ச ஸப்தைதே சிரஞ்சீவிந: தைலே லக்ஷ்மி ஜலே கங்கா| தீபாவளி தினே வசேது|அலக்ஷ்மி பரிகாரார்த்தம்|அப்யஞ்கணம் ஆசரேது

marriage in same gotra

Both Manu as well as Matsya Purana prohibit marriage with sapinda relatives on the mother's  side and sagotra relatives on the father's side. 

Quoted in Dharmakosa -
असपिण्डा या मातुरसगोत्रा च या पितुः /
सा प्रशस्ता द्विजातीनां दारकर्मणि मैथुने //


Dharmakosa, pub. Prajna pathasala mandal, Wai, Satara. III.1.p.177 ff

Shiva temples in Tamilnadu

Courtesy:Sri.Maasila Gopi Krishnan


தமிழ்நாடு சிவன் கோயில்கள் - இருப்பிட விபரங்கள் ...

தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் இயற்றப்பெற்ற தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்பெற்றுள்ள 274 சிவஸ்தலங்களில்
தமிழ்நாட்டில் மட்டும் (பாண்டிச்சேரி உட்பட) 264 சிவஸ்தலங்கள் உள்ளன. இந்த 264 கோவில்களிலும் 190 சிவஸ்தலங்கள் முன் காலத்தில் சோழ நாடு என்று குறிப்பிடப்படும் பகுதியான திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் (Districts) அமைந்துள்ளன.
இவை காவிரியின் வடகரையில் 63ம்,
காவிரியின் தென்கரையில் 127ம் ஆக 190 சிவஸ்தலங்கள்.
மற்ற 74 சிவஸ்தலங்களில்
பாண்டிய நாட்டில் 14,
கொங்கு நாட்டில் 7,
தொண்டை நாட்டில் 31,
நடு நாட்டில் 22 ஆக அமைந்துள்ளன.

நடு நாட்டில்   அமைந்துள்ள விபரம் கீழே காண்க.

விழுப்புரம் மாவட்டம்
திருநாவலூர்,
திருநெல்வெண்ணை,
திருக்கோவிலூர்,
திருஅறையணிநல்லூர்,
திருவிடையாறு,
திருவெண்ணைநல்லுர்,
திருத்துறையூர்,
திருமுண்டீச்சரம்,
புறவர் பனங்காட்டூர்,
திரு ஆமாத்தூர்
கடலூர் மாவட்டம்
திருநெல்வாயில்
அரத்துறை,
தூங்கானை மாடம்
(பெண்ணாகடம்),
திருக்கூடலையாற்றுர்,
திருஎருக்கத்தம்புலியூர்,
திருத்திணை நகர்,
திருச்சோபுரம்,
திருவதிகை,
திருமாணிகுழி,
திருப்பாதிரிப்புலியூர்,
திருமுதுகுன்றம்
திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை

காவிரி நதியின் வடகரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
கடலூர் மாவட்டம்
சிதம்பரம்,
திருவேட்களம்,
திருநெல்வாயல்,
திருக்கழிப்பாலை,
திருஓமாம்புலியூர்,
திருக்கானாட்டுமுல்லூர்,
திருநாரையூர்,
திருக்கடம்பூர்
நாகப்பட்டிணம் மாவட்டம்
திருநல்லுர் பெருமணம்,
திருமயேந்திரப்பள்ளி,
திருமுல்லைவாயில்,
திருக்கலிக்காமூர்,
திருசாய்க்காடு,
திருபல்லவனீச்சுரம்,
திருவெண்காடு,
கீழை திருக்காட்டுப்பள்ளி,
திருக்குருகாவூர் வெள்ளடை,
சீர்காழி,
திருகோலக்கா,
திருபுள்ளிருக்குவேளூர்,
திருக்கண்ணார்கோவில்,
திருக்கடைமுடி,
திருநின்றியூர்,
திருபுன்கூர்,
நீடூர்,
திருஅன்னியூர்,
திருவேள்விக்குடி,
திருஎதிர்கொள்பாடி,
திருமணஞ்சேரி,
திருக்குருக்கை,
திருக்கருப்பறியலூர்,
திருக்குரக்குக்கா,
திருவாளொளிப்புத்தூர்,
திருமண்ணிப்படிக்கரை
தஞ்சாவூர் மாவட்டம்
திருபந்தனைநல்லூர்,
திருகஞ்சனூர்,
திருகோடிக்கா,
திருமங்கலக்குடி,
திருப்பனந்தாள்,
திருஆப்பாடி,
திருசேய்ஞலூர்,
திருந்துதேவன்குடி,
திருவியலூர்,
திருக்கொட்டையூர்,
திருஇன்னாம்பர்,
திருப்புறம்பியம்,
திருவிசயமங்கை,
திருவைகாவூர்,
வடகுரங்காடுதுறை,
திருப்பழனம்,
திருவையாறு,
திருநெய்த்தானம்,
திருப்பெரும்புலியூர்,
திருக்கானூர்
அரியலூர் மாவட்டம்
திருமழபாடி,
திருப்பழுவூர்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
திருஅன்பில் ஆலாந்துறை,
திருமாந்துறை,
திருபாற்றுறை,
திருவானைக்கா,
திருப்பாச்சிலாச்சிராமம்,
திருபைஞ்ஜிலி,
திருஈங்கோய்மலை

காவிரி நதியின் தென்கரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
கரூர் மாவட்டம் (2)
திருகடம்பந்துறை,
திருப்பராய்த்துறை
திருச்சிராப்பள்ளி மாவட்டம் (6)
திருவாட்போக்கி,
திருகற்குடி,
திருமூக்கீச்சரம்,
திருச்சிராப்பள்ளி,
திருஎறும்பியூர்,
திருநெடுங்களம்
தஞ்சாவூர் மாவட்டம் (35)
மேலை திருக்காட்டுப்பள்ளி,
திருவாலம்பொழில்,
திருபூந்துருத்தி,
திருக்கண்டியூர்,
திருசோற்றுத்துறை,
திருவேதிகுடி,
திருதென்குடித்திட்டை,
திருபுள்ளமங்கை,
திருசக்கரப்பள்ளி,
திருக்கருகாவூர்,
திருப்பாலைத்துறை,
ஆவூர் பசுபதீச்சரம்,
திருபட்டீச்சரம்,
திருசத்திமுற்றம்,
பழையாறை வடதளி,
திருவலஞ்சுழி,
திருக்குடமூக்கு,
திருக்குடந்தை கீழ்கோட்டம்,
திருக்குடந்தைக் காரோணம்,
திருநாகேஸ்வரம்,
திருவிடைமருதூர்,
தென்குரங்காடுதுறை,
திருநீலக்குடி,
திருவைகல் மாடக்கோவில்,
திருநல்லம்,
திருக்கோழம்பம்,
கருவிலிக்கொட்டிட்டை,
திருபேணுபெருந்துறை,
திருநறையூர்,
அரிசிற்கரைப்புத்தூர்,
சிவபுரம்,
திருகலயநல்லூர்,
திருக்கருக்குடி,
திருச்சேறை,
திருப்பரிதிநியமம்
நாகப்பட்டிணம் மாவட்டம் (21)
திருவாவடுதுறை,
திருத்துருத்தி,
திருவழுந்தூர்,
மயிலாடுதுறை,
திருவிளநகர்,
திருப்பறியலூர்,
திருசெம்பொன்பள்ளி,
திருநனிபள்ளி,
திருவலம்புரம்,
திருதலைச்சங்காடு,
திருஆக்கூர்,
திருக்கடவூர்,
திருக்கடவூர் மயானம்,
திருப்புகலூர்,
திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம்,
திருசெங்கட்டாங்குடி,
திருமருகல்,
நாகைக் காரோணம்,
சிக்கல்,
திருக்கீழ்வேளூர்,
தேவூர்,
புதுவை மாநிலம் (4)
திருவேட்டக்குடி,
திருதெளிச்சேரி,
திருதர்மபுரம்,
திருநள்ளாறு
திருவாரூர் மாவட்டம் (59)
திருநல்லூர்,
திருக்கோட்டாறு,
அம்பர் பெருந்திருக்கோவில்,
அம்பர் மாகாளம்,
திருமீயச்சூர்,
திருமீயச்சூர் இளங்கோவில்,
திருதிலதைப்பதி,
திருப்பாம்புரம்,
சிறுகுடி,
திருவீழிமிழிலை,
திருவன்னியூர்,
திருவாஞ்சியம்,
நன்னிலம்,
திருகொண்டீச்சரம்,
திருப்பனையூர்,
திருவிற்குடி,
இராமனதீச்சுரம்,
திருபயற்றூர்,
திருச்சாத்தமங்கை,
பள்ளியின் முக்கூடல்,
திருவாரூர்,
திருவாரூர் அரநெறி,
ஆரூர் பறவையுன்மண்டளி,
திருவிளமர்,
திருக்கரவீரம்,
திருப்பெருவேளுர்,
திருதலையாலங்காடு,
திருக்குடவாயில்,
திருநாலூர் மயானம்,
கடுவாய்க்கரைப்புத்தூர்,
திருஇரும்பூளை,
திருஅரதைப் பெரும்பாழி,
திருஅவளிவநல்லூர்,
திருவெண்ணியூர்,
திருப்பூவனூர்,
திருப்பாதாளீச்சரம்,
திருக்களர்,
திருசிற்றேமம்,
திருவுசத்தானம்,
திருஇடும்பாவனம்,
திருக்கடிக்குளம்,
திருத்தண்டலை நீணெறி,
திருக்கோட்டூர்,
திருவெண்டுறை,
திருக்கொள்ளம்புதூர்,
திருப்பேரெயில்,
திருக்கொள்ளிக்காடு,
திருதெங்கூர்,
திருநெல்லிக்கா,
திருநாட்டியாத்தான்குடி,
திருக்காறாயில்,
திருகன்றாப்பூர்,
திருவலிவலம்,
திருகைச்சினம்,
திருக்கோளிலி,
திருவாய்மூர்,
திருமறைக்காடு,
அகத்தியான்பள்ளி,
கோடியக்கரை

தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் .

சென்னை மாவட்டம்
திருமயிலை (சென்னை),
திருவான்மியூர் (சென்னை)
திருவள்ளூர் மாவட்டம்
திருவிற்கோலம்,
திருவாலங்காடு
திருப்பாசூர்
திருவெண்பாக்கம்
திருக்கள்ளில்
திருவொற்றியூர் (சென்னை),
திருமுல்லைவாயில் (சென்னை)
திருவேற்காடு (சென்னை)
காஞ்சீபுரம் மாவட்டம்
கச்சி ஏகம்பம் (காஞ்சீபுரம்),
திருக்கச்சி மேற்றளி,
திருஓணகாந்தான்தளி
கச்சி அநேகதங்காபதம்,
கச்சிநெறிக் காரைக்காடு,
திருமாகறல்,
இலம்பையங்கோட்டூர்,
திருவிற்கோலம்
திருக்கச்சூர் ஆலக்கோவில்,
திருஇடைச்சுரம்,
திருக்கழுகுன்றம்,
அச்சிறுபாக்கம்
திருவண்ணாமலை மாவட்டம்
திருகுரங்கணில் முட்டம்,
திருவோத்தூர்,
திருப்பனங்காட்டூர்
வேலூர் மாவட்டம்
திருவல்லம்,
திருமாற்பேறு,
திருஊறல் (தக்கோலம்)
விழுப்புரம் மாவட்டம்
திருவக்கரை,
திருஅரசிலி
கடலூர் மாவட்டம்
இரும்பை மாகாளம்

பாண்டிய நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் ......

மதுரை மாவட்டம்
திருஆலவாய் (மதுரை),
திருஆப்பனுர்,
திருவேடகம்,
திருப்பரங்குன்றம்
சிவகங்கை மாவட்டம்
திருகொடுங்குன்றம்,
திருப்புத்தூர்,
திருக்கானப்பேர்
புதுக்கோட்டை மாவட்டம்
திருப்புனவாயில்
ராமநாதபுரம் மாவட்டம்
இராமேஸ்வரம்,
திருவாடானை,
திருப்பூவணம்
விருதுநகர் மாவட்டம்
திருச்சுழியல்
திருநெல்வேலி மாவட்டம்
குற்றாலம்,
திருநெல்வேலி

பஞ்ச பூதத் தலங்கள்
உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. மண், நீர், தீ, வளி,வான், என்பன ஐம்பூதங்கள். இவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்றும் கூறப்படுகின்றன. இவற்றைப் பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும்.
1. காஞ்சீபுரம்
2. திருவானைக்கா
3. திருவண்ணாமலை
4. சிதம்பரம்
5. திருக்காளத்தி
இவற்றில் திருக்காளத்தியைத் தவிர மற்ற நான்கு தலங்களும் தமிழ்நாட்டிலுள்ளன. திருக்காளத்தி ஆந்திர மாநிலத்தில் உள்ளது.
பஞ்ச சபைத் தலங்கள்
இறைவன் நடராசர் உருவத்தில் அருட்கூத்து ஆடுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்து தலங்களைக் குறிப்பிடுவர். அந்த ஐந்து சபைகள் அமைந்துள்ள இடங்கள் (சிவாலயங்கள்) இவையாகும்
1. தில்லை(சிதம்பரம்) - கனக சபை
2. திருவாலங்காடு - இரத்தின சபை
3. மதுரை - வெள்ளி சபை
4. திருநெல்வேலி - தாமிர சபை
5. திருக்குற்றாலம் - சித்திர சபை

Taste of Bhagavan's name

மந்திரம்,ஸ்தோத்திரம், ஹோமம் இவை எல்லாவற்றையும் விட, இறைவனின் நாமம் (பெயர்) சொல்வது மிக எளிமையானது. ராமா, கிருஷ்ணா என்று சொல்வதில் என்ன சிரமம்! இது அபரிமிதமான பலன் தரவல்லது என பெரியோர்கள் கூறுகின்றனர்.
* கலியுகத்தைக் கடப்பதற்கு நாமஸ்மரணம் என்னும் இறைநாமத்தை ஜெபிப்பதே சிறந்தது என ஞானிகள் கூறுகின்றனர்.
* நாரதர், சுகபிரம்மம், பிரகலாதர், உத்தவர் போன்ற மகான்கள் ஆதிகாலத்தில் இறைநாமத்தின் மகிமையை உலகிற்கு எடுத்துரைத்தனர்.
* வைகுண்டபதியான நாராயணனே நாம சங்கீர்த்தனத்தின் சிறப்பை எடுத்துக்காட்ட கிருஷ்ண சைதன்யராக அவதரித்தார். நாமத்தின் பெருமையை, ""கேட்டதை தரும் கற்பக விருட்சம்'' என குறிப்பிடுகிறார்.
* கபீர்தாசர், சூர்தாசர், துக்காராம், ஞானேஸ்வரர், ஏக்நாத், சோகாமேளர், ஜக்குபாய், மீரா முதலிய ஞானிகள் கலியுகத்தில் அவதரித்து நாமசங்கீர்த்தனத்தின் பெருமையை நிலைநாட்டியுள்ளனர்.
* போதேந்திர சுவாமிகள், சத்குரு ஸ்ரீதர ஐயாவாள், மருதாநல்லூர் சத்குருசுவாமி பஜனை சம்பிரதாயத்தை தென்னகத்தில் பரப்பினர்.
* கடலிலேயே பெரிய கடல் பிறவிக்கடல். நாமஸ்மரணத்தில் ஈடுபடுவர்கள் பிறவிக்கடலை சுலபமாக தாண்டி விடுவர். கோடி ஜென்மங்களில் செய்த புண்ணியத்தின் பயனாக மட்டுமே, ஒருவரது மனம் இதில் ஈடுபடும் என துளசிதாசர் கூறுகிறார்.
* எங்கெல்லாம் ராமநாமம் ஜெபிக்கப்படுகிறதோ அந்த இடத்தில் ராமதூதர் ஆஞ்சநேயர் எழுந்தருளி அருள்புரிவார்.
* ஹரிநாமம் ஜெபிப்பதற்கு எவ்வித தடையும் இல்லை. காலநேரம் பார்க்கத் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் ஜெபிக்கலாம். இதனால் வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும். அந்த வீடே வைகுண்டம் போலாகிவிடும் என்று ஞானேஸ்வரர் குறிப்பிடுகிறார்.
* ராமானுஜர் எல்லோரும் மோட்சத்திற்குச் செல்லவேண்டும் என்பதற்காக, ""ஓம் நமோ நாராயணாய' என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்து அருள்செய்தார்.
* ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் பகவான் நாம மகிமையைக் கூற முடியாமல் ஓய்ந்து விட்டதாக ஸ்ரீதர ஐயாவாள் குறிப்பிடுகிறார்.
* எட்டெழுத்து மந்திரமான நாராயணநாமத்தின் பெருமையை திருமங்கையாழ்வார், ""நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்,'' என்று போற்றுகிறார்.
* இறைநாமத்தை ஜெபித்தால் உயிரும் உள்ளமும் உருகுவதாக கூறுகிறார் வள்ளலார்.
* இதயத்தின் ஆழத்தில் இருந்து பக்தியுடன் தனியாகவோ, கோஷ்டியாகவோ நாமசங்கீர்த்தனம் செய்யும்போது இறைவன் நம்மைத் தேடி வருவது உறுதி.
* இசையோடு நாமசங்கீர்த்தனம் செய்யும் போது இறைவனும் நம் இசைக்கேற்ப நர்த்தனமாடி வருவான். நம் இதயக்கோயிலில் ரத்தினசிம்மாசனம் இட்டு அமர்வான். அப்போது பரமானந்தம் நம்முள் ஊற்றெடுக்கும்.
* இந்த ஆனந்த அனுபவத்தை பிறருக்கு எடுத்துரைக்க முடியாது. கரும்பின் இனிமையை வார்த்தைகளால் எப்படி வர்ணித்தாலும் கரும்பைச் சுவைத்தவரைத் தவிர மற்றவர்க்கு அதனை உணரமுடிவதில்லை.
* இறைநாமத்தின் சிறப்பை "நாமருசி' என்று குறிப்பிடுவர். இதனை ரசித்து ருசித்தால் தான், நம் பிறவி அர்த்தமுள்ளதாகும்.

HH.Gnanandagiri & Periyavaa

ஆடு உருவத்தில் காஞ்சி மஹானை சந்தித்த ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள்
மஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது. ஆனால் அவர்களை வழிபடுபவர்களின் மனப்பக்குவத்தில் தான் வித்தியாசம் ஏற்படுகிறது. ஒரு குருநாதரை ஏற்று கொண்டு மற்றவரை வெறுக்காமல், மஹானுக்கு மஹான் வித்தியாசம் என்ற நிலை மேற்கொள்ளாமல் அனைவரும் சமம் என்று வணங்கவேண்டும் .
ஒரு சமயம் தபோவனத்தில் பகல் வேளையில் குருநாதர் (ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள்) முன்னிலையில் அமர்ந்து பாடி கொண்டிருந்தோம். திடீரென்று எழுந்த ஸ்வாமிகள் உள்ளே சென்று பின் வெகு நேரமாகியும் வெளி வரவில்லை. நாங்கள் தொடர்ந்து பாடிகொண்டிருந்தோம். சுமார் 2 மணி நேரம் கழித்து அப்போது தான் குளித்துவிட்டு வந்தது போன்ற தோற்றத்துடன் வெளியே வந்தார். வந்தவுடன் சொன்னார் "அங்கே இளையாத்தங்குடியில் ஆச்சார்யாள் பெரிய பூஜை பண்றாங்க. அதுக்கு ஸ்வாமி யை கூப்பிட்டு இருந்தாங்க. போய் வர நேரம் ஆகிவிட்டது".
பலருக்கு அது ஸ்வாமியின் பல ஆச்சரிய லீலைகளில் ஒன்று என தோன்றினாலும் ஒரு சிலருக்கு மட்டும் சுவாமியின் வார்த்தைகளில் சந்தேகம் வந்தது. சிறிது நேரத்திற்கேல்லாம் பஜனை முடிந்தது. சந்தேகப்பட்ட நபர்கள் ஊர் திரும்பி செல்ல உத்தரவு வேண்டி நின்றனர். ஸ்வாமி அவர்களை "இருந்து விட்டு நாளை போகலாம்" என்று கூற அவர்களும் ஸ்வாமியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு தங்கிவிட்டனர்.
மறுநாள் காலையில் தினசரி வழிபாட்டுக்கு ஒரு புதிய தம்பதியர் வந்தனர். ஸ்வாமி அவர்களை பார்த்து "நாம் எங்கிருந்து வருகிறது" என்று கேட்க அவர்கள் " இளையாத்தங்குடியிலிருந்து வருகிறோம்" என்றனர். அதற்க்கு ஸ்வாமி "அப்படியா! அங்கு என்ன விசேஷம் " என்று கேட்க அவர்கள் சொன்னார்கள் " நேற்று மஹா பெரியவர்கள் விசேஷ பூஜை பண்ணினார்கள். நைவேத்யம் செய்யும் சமயம் ஒரு ஆடு வந்தது. பெரியவாள் அந்த நைவேத்தியத்தை அதனிடம் காண்பிக்க அந்த ஆடு சிலவற்றை சாப்பிட்டவுடன் பெரியவாள் தீபாரதனை பண்ணினார்கள். பிறகு அந்த ஆடு அங்கிருந்து போய் விட்டது. அப்போது பெரியவாள் "இன்றைய பூஜைக்கு தபோவனம் பெரியவாளை கூப்பிட்டுருந்தேன். அவர்கள் தான் இப்போது வந்து சென்றார்க்ள்" என்று சொன்னவுடன் நாங்கள் ஊருக்கு கிளம்பும் சமயம் அவரிடம் தபோவனம் பெரியவாள் யார் ஸ்வாமி என்று கேட்க அவர் தங்களை பற்றி சொல்லி அவசியம் தரிசித்து வரவும் என்று ஆசிர்வதித்து அனுப்பினார் என்றனர்.உடன் இருந்த அந்த சந்தேகப்பட்ட நபர்கள் நால்வரும் வெட்கி தலை குனிந்தனர்.

Hunger/Desire - Story

ஒரு அறிவு கதை :
ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன்! அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன்!!
அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான்...
அப்போது வந்த அரசர் "ஏன் சோகமாக இருக்கிறாய்?" என கேட்க "இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாது போது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே!"என விவரித்தான் இளவரசன்...
மன்னர் சிரித்துவிட்டு "எலியைக் கொள்ள வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே!" என்றார்.உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது...
அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். "என்ன அரசே..நீங்களும்இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்?" என்றார்.
அதற்கு அரசர் நடந்ததை கூறினார். "நம் நாட்டு பூனைகள் எதற்கு லாயக்கு...? ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம்" என்றார் மந்திரி. அதேபோல் அவ் நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.
ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத்தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது. எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் "இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும்" என்றான். மன்னருக்கு நப்பிக்கை ஏற்படவில்லை. "என்ன.. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா?" என்றார்...
உடனே இளவரசர் மறித்து "சரி...எடுத்து வா உனது பூனையை" என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் "லபக்" என்று கவ்விச்சென்றது.இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். "என்ன இது அதியசம்!
ஜப்பான், பாரசீக அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்?" என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார்...
அதற்குக் காவலாளி "பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே... என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான்" என்றான்...
உடனே இளவரசருக்கு "சுரீர்" என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவெற்று தெரிய வாய்பில்லை. எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்?.
ஆக எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றாள், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும்!!!
அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்!!!

Who can wear Rudraksha?

Courtesy:http://omnamashivaayaa.blogspot.in/2014/03/blog-post_15.html

ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மஹா பேரானந்தத்தைத் தரும்

                         ருத்ராட்ஷத்தின் - மகிமை

ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது?
              சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார்.  எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முகம் ஒரு ருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்க வேண்டும்
ஆப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா?
                ஆமாம்! ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம்.  எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம்.  நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.
                     சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும்.  ருத்ராட்ஷத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள்.  இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில்  வெற்றியு்ம் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும்.  ஆகையால் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியவேண்டும்.
சுத்தபத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே? 
                          குளித்தவர்கள்தான் சோப்பு உபயோகப்படுத்த வேண்டும் என்று யாராவது சொல்வார்களா? ஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து: நோயில் தவிப்பவனுக்கு கிடையாது, என்று எவரேனும் சொன்னால் ஏற்றுக்கொள்வோமா? அது போலத்தான் சுத்தமாக இருப்பவர்கள்தான் ருத்ராட்ஷம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதும்.
                          ருத்ராட்ஷம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும்.  எனவே உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாமல் நம்பிக்கையோடு ருத்ராட்ஷம்  அணிந்து கொள்ளுங்கள். எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல  ருத்ராட்ஷம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றை படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு, பன்றி மாமிசம் எப்போதும் சாப்பிடக்கூடாது).,

ருத்ராட்ஷத்தில் முகமா? அப்படியென்றால் என்ன?  யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்ஷம் அணியலாம்?
                        ருத்ராட்ஷத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம்,  இதற்குத்தான் முகம் என்று பெயர்.  ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம்.  ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான்.  எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க  எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும்.
                           அதுமட்டுமல்ல, எல்லா இடங்களிலும் எளிதில், மிகமிக சகாயமான விலையில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம் அணிவதே போதுமானது. பகவானின் திருமுகம் ஐந்து.  நமச்சிவாய ஐந்தெழுத்து.  பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்).நமது கை கால் விரல்கள் ஐந்து.  புலன்கள் ஐந்து.  ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார்.  ஆகையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே மிகச் சிறப்பு.  இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம்.  ஐந்து முக ருத்ராட்ஷத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்ஷங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.
பெண்கள் ருத்ராட்ஷம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே?
                    பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம் (பாடல் எண் 330) பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும்ருத்ராட்ஷத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம்.  பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்ஷம் அணிந்து கொள்கிறாள்!.  எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.  மேலும்,                 சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.

எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்ஷம் அணியலாமா?

                   பெண்கள், தங்களுடைய தாலிக் கொடியில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர்.  அதை எல்லா நாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும்  எப்போதும் அணிந்திருப்பதுண்டே? இவற்றைப் போல் ருத்ராட்ஷத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிய வேண்டும்.  ருத்ராட்ஷம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல.  உயிரின் ஆத்மாவிற்காகவே சிவபெருமானால் அருளப்பட்டது.


 ருத்ராட்ஷம் கண்டிப்பாக அணிய வேண்டுமா?
                  இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண் - பெண் இருபாலரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.  ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், வேதனை, துன்பம், வலி இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.  ருத்ராட்ஷம் அணிந்தால் மறுவிறவி இல்லை மஹா பேரானந்தமே.  ருத்ராட்ஷம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள்,  அதைப் பொருட்படுத்தக் கூடாது.  இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்ஷம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும்.  ருத்ராட்ஷம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது. சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில்  இருந்து தோன்றியதே ருத்ராட்ஷம்.  ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார்.  சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பாரா?.  அதனால் யார் என்ன சொன்னாலும் கண்டிப்பாக ருத்ராட்ஷத்தை அணியவேண்டும்.  ருத்ராட்ஷதை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது.  நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை.  நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய சொல்லி வந்தாலே போதுமானது.

நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு, கணவன் - மனைவி இல்லறதாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாமா?

                  முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே.  இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது.  நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார்.  இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியலாம்.  அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.

சரி ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டேன், இதன் பலன்கள் தான் என்ன?  
நிராடும் போது ருத்ராட்ஷம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.  பாவங்களினால் தான் நமக்குக் கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்ஷம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும்.  இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும்.
                    மேலும் ருத்ராட்ஷம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு பகவானின் பேரின்பமும், ஆனந்தமும் கிடைக்கும் என்று சிவ மஹா புராணம் அறுதியிட்டுக் கூறுவதையும் கருத்தில் கொள்க.
                   இது மட்டுமல்ல ருத்ராட்ஷம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய்  போன்றவற்றின் தீவிரம் குறைவதாக வெளிநாட்டவர்களின் ஆய்வுகள் கூறுகின்றன.  எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்ஷத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது.  திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிந்து தினந்தோறும் 108 முறை எழுத்தாலோ  மனதலோ பஞ்சாட்சரத்தை சொல்லிவந்தால் 18 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும்.

ருத்ராட்ஷம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா?

                  சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன் தால் வணங்கி அவர் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூட நாம் சொல்ல முடியும்.  அப்படியிருக்க அவர் ருத்ராட்ஷத்தையே நமக்கு அளித்துள்ளாரே அதனால் திருநீறு தரித்தல், ருத்ராட்ஷம் அணிதல், பஞ்சாட்சர மந்திரமான "ஓம் நமசிவாய"  உச்சரித்தல், இம்மூன்றும் ஒரு சேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை  அடைவீர்.  இம்மூன்றும் இந்து தர்மங்கள், தர்மத்தை விடாதவர்களை இறைவன் கைவிடமாட்டார்.  மேலும் நவகிரஹங்கள் நன்மையே செய்யும்(ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ராகு-கேது)  தோஷத்தின் தாக்கங்கள் குறையும்.  ருத்ராட்ஷம் அணிந்திருக்கும் வேலையில் உயிர் பிரிந்தால் சிவபெருமான் திருவடியை அடைந்து நற்கதி எற்படும்.  பேய், பிசாசு, பில்லி, சூனியம், மந்திரம், தந்திரம், இவை அனைத்தும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது.  ஆகையால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ஒருவர் ஏழுஜென்மங்கள் தொடர்ந்து புன்னியம் செய்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்ஷம் அணியும் மஹா பாக்கியம் கிடைக்கும்,.

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான 

தத்துவனே

     இத்தனை மேன்மைகள் இருந்தும் சிலர் திருநீறு, ருத்ராட்ஷம் அணியத் தயங்குகிறார்களே?

                     உலகில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அவர்களின் மத சின்னங்களை அணிய வெட்கப்படுவதில்லை.  நாம் நமது மதச் சின்னங்களாகிய விபூதி, ருத்ராட்ஷம் மற்றும் நமசிவாய என்ற ஜபம் ஆகியனவற்றை ஏன் விடவேண்டும்? இதற்காக யாராவது நம்மைக் கேலி பேசினாலும் பொருட்படுத்தக்கூடாது.  அப்படிப் பேசுகிறவர்களா நமக்குச் சோறு போடுகிறார்கள்?  அவர்களா நம்மைக் காப்பாற்றுகிறார்கள்?  ஆனால் மதச் சின்னங்களை அணிந்து நமசிவாய என்று எல்லாக் காலத்திலும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள சிவபெருமான் நிச்சயம் காப்பாற்றுவார்.  அவரவர், தங்கள் வாழ்க்கையிலேயே இதை அனுபவப் பூர்வமாக உணரலாம்.  ருத்ராட்ஷம் அணிபவர்கள் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும், ருத்ராட்ஷதைக் கழற்றவே கூடாது.  யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம்.  சிவபெருமானின் அனுக்கிரஹமும், ஆசீர்வாதமும் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு ருத்ராட்ஷம் கிடைக்கும். இத்தனை மேன்மைகள் இருந்தும் இதனைப் படித்துப் பார்த்துத் தெரிந்த பின்பும் மனிதராகப் பிறந்தவர்கள் ருத்ராட்ஷம் அணியவில்லை என்றால் அவர்கள் இப்பிறப்பிற்கே பிரயோஜணமில்லாமல் போய்விடுவார்கள் ஆகையால் கண்டிப்பாக ஒவ்வொருவரும் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் இந்த ருத்ராட்ஷ சேவையை என் உயிரினும் மேலாக கருதி இலவசமாக செய்கிறேன் அதனால் தயுவு செய்து ருத்ராட்ஷம் வாங்கி ஒரு விநாடி நேரம் கூட கழற்றாமல் எப்பொழுதும் அனிந்திருப்பவர்கள் மட்டுமே உங்கள் முகவரியை SMS செய்யவும் ருத்ராட்ஷத்தை வாங்கி வீட்டு பூஜை அறையிலோ, சுவாமி படத்திலோஅணிந்துவிட்டால் மஹா பாவம் ருத்ராட்ஷத்தை அணிந்துவிட்டு கழற்றிவிட்டால் மிக மஹா பாவம். உங்களால் அணிய முடியவில்லை என்றால் எங்கள் முகவரிக்கு திருப்பி அனுப்பி விடவும் மற்றவர்களுக்காவது உதவும் ஒம் நமசிவாய
"திருச்சிற்றம்பலம்"
முக்கியகுறிப்பு :
மனநிலை பாதித்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், ஆதரவற்றவர்கள், நோயுற்றவர்கள், பிரார்த்தனை வைப்பவர்கள், கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.  ஏனெனில் அவர்களை சிவன் தன்கண்போல் காப்பார்.       
                                                              
பத்ம புராணம் கூறவது:
"எவன் ஒருவன் சைவனானாலும், வைஷ்ணவனானாலும், சாக்தனானாலும், காணாபத்யனானாலும், சௌரனானாலும் இறக்கும் தருவாயில் சிரசில் ருத்ராட்ஷத்தை தரித்திருப்பானாகில், எல்லா பாபங்களினின்றும் விடுபட்டு மறு பிறவியில் சகல சுகங்களையும் அனுபவித்து மோக்ஷத்தை கிரமமாய் பெறுவான்"..                                                     பத்ம புராணத்தில் பரமேஸ்வரன் தன் குமாரனாகிய கார்திகேயனுக்கு ருத்ராக்ஷத்தின் மகிமையை வர்ணிக்கிறார். ருத்ராக்ஷத்தைப் பார்ப்பது லக்ஷம் பங்கு புண்ணியாமானால், அதனை அணிவது அதினினும் 10 கோடி பங்கு புண்ணியத்தைப் பயக்கும்.
ருத்ராக்ஷம் தீர்த்தங்களிலும் விசேஷமான தீர்த்தம் என கருதப்படுவதால் அதை அணிந்து கொண்டு செய்யும் பூஜை, ஜபம், தானம், பிதுர்கடன்கள் எல்லாம் நூறு மடங்கு விசேஷ பலனைக் கொடுக்கும். ருத்ராக்ஷத்தால் புனிதமாக்கப்பட்ட நீரை உடலில் தெளித்துக்கொள்ளவேண்டும். ஆகர்ஷண சக்தி பெற்ற இந்த ருத்ராக்ஷம் அணிபவருக்கு அவர்கள் நல்ல மனிதர்களைச் சந்திக்கையில் அவர்களது நல்ல சக்திகளை ஆகர்ஷிக்கும் சக்தி உண்டாகும். 
==========================================================================
 தினமலர்;ஆன்மிக செய்திகள்»இந்து                                                            ""
                                       லட்சுமிகடாட்சம் அளிக்கும் ருத்ராட்சம்
                  ஜூன் 01,2010,12:06  IST


மனோபலமும் ஆரோக்கியமும் தரும் அரிய பொக்கிஷம் ருத்ராட்சம். இதன் மின்காந்த ஆற்றல் உடம்பில் படும்போது பல நன்மைகள் உண்டாகின்றன. ரத்த ஓட்டத்தை சீர் செய்யும் சக்தி இதற்குண்டு. ஒன்று முதல் 21 முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. ""ருத்ராட்சம் அணிபவருக்கு லட்சுமி கடாட்சம் உள்ளிட்ட எல்லாநன்மைகளும் அருள்வேன்,'' என்று சிவபுராணத்தில் பார்வதிதேவியிடம் பரமேஸ்வரன் உறுதியளித்துள்ளார். இதனை அணிபவர்கள் "நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். சிவபூஜை, புராணம் படித்தல், கோயில் தரிசனம், தியானம், தேவார, திருவாசகம் ஓதுதல், விரதகாலம், சிரார்த்தவேளை, மங்கல நிகழ்ச்சிகள் ஆகிய வேளைகளில் ருத்ராட்சம் அணிவது சிறப்பானது.
                                                                                                                              
                                                               நன்றி தினமலர்
=========================================================================

சைவப் பெருமக்களுக்குத் திருநீறு, உருத்திராட்சம், ஐந்தெழுத்து என்ற மூன்றும் இன்றியமையாதவை.
* திருநீறு, விபூதி, பஸ்மம், பசிதம், சாரம், இரட்சை என்ற பல பெயர்களை உடையது திருநீறு. ஆன்மாக்களின் பாவங்களையெல்லாம் நீறு செய்வதனால் திருநீறு; பஸ்மம்.
* விமேலான; பூதிஐஸ்வர்யம். மேலான ஐஸ்வர்யத்தை தருவதால் விபூதி. அறியாமை அழியும்படி சிவஞானமாகிய சிவ தத்துவத்தை விளக்குவதால் பசிதம். ஆன்மாக்களின் மல மாசினைக் கழுவுவதால் சாரம். ஆன்மாக்களைத் துன்பத்தினின்றும்
நீக்கி  ரட்சிப்பதனால் ரட்சை.
*""நீறில்லா நெற்றி பாழ்'' என்று அவ்வையார் கூறுகிறார். திருநீற்றை அன்புடன் பூசுவோர், எல்லா நோய்களும் நீங்கப் பெறுவர். அவ்வாறு பூசாதோர்  நோய்வாய்ப்பட்டு செத்துப்பிறந்து உழலுவார்கள்.
"நோய்களுக்கும் அஞ்சேன்; பிறப்புக்கும், இறப்புக்கும் அஞ்சேன்; திருநீறு பூசாதவர்களைக் கண்டால் அஞ்சுகிறேன்'' என்கிறார் பாண்டிநாட்டு முதலமைச்சராகிய மாணிக்கவாசகர்.
* மனிதனுக்கு மிகவும் தேவையானவை ஐந்து பொருட்கள். 1. நல்வாக்கு. வாக்கு செல்வாக்குடையதாகவும், இனிமையுடையதாகவும் அமைதல் வேண்டும். 2. இனிய பால்சோறு. 3. நல்லார் இணக்கம். 4. உயர்ந்த நற்குணங்கள். 5. குறைவில்லாத செல்வம். இந்த ஐந்தும் ""சிவாய நம'' என்று ஜெபித்து திருநீறு தரிப்பதனால் எளிதில் கிட்டும்.
* திருநீற்றை ஒருவருக்குத் தரும்போதும், நம் பூசிக்கொள்ளும்போதும் சிவபெருமானுடைய ஐந்தெழுத்தை அன்புடன் ஓதுதல் வேண்டும். இந்தக் காரணத்தினால் திருநீற்றுப் பஞ்சாட்சரம் என்ற ஒரு பெயரும் அமைந்தது.
                                            
  (வாரியார் சொற்பொழுவிலிருந்து.)
--------------------------------------------------------------------------------------------------------------------------


ஆன்மீக ஆன்மா அன்பர்களுக்கு  
இந்த பதிவை ஒருவர் படிக்கிறார் எனில் அதற்கு அவர்கள் 

நற்காரியங்கள் செய்திருக்க வேண்டும் இதை படித்த பின் ருத்ராட்சம் 


அணிந்துகொள்வர் எனில் இறைவன் அவர்கள் மீது கருணை 


செய்திருக்க வேண்டும் ஏனெனில் ருத்ராட்சம் அணிந்து இருப்பவர்கள் 


அனைவரும் சிவ குடும்பமே சிவ குடும்பத்தில் ஒருவர் ஆவார். 


பூர்வ ஜென்மத்தில் ஒரு ஆன்மா புன்னியம் செய்திருந்தால் தான் 


ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும் .


அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது

பல பிறவிகள் எடுத்த பிறகே இந்த மானிடப்பிறவியை அடைகிறோம். 

சிவபுராணத்தில் "புல்லாகிப், பூடாய்ப், புழுவாய், மரமாகிப், பல்விருக 


மாகிப், பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப், பேயாய்க் 


கணங்களாய் வல்லசுரர், ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ 


நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் 


எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்! 


என்ற பாடல் வரிக்கேற்ப நாம் பல பிறவி கஷ்டங்களை கடந்து 


வந்துள்ளோம். உலகில் மொத்தம் 84 நான்கு லட்சம் உயிரினங்கள் 


உள்ளது அதில் கடைசி பிறப்பு தான் மானிட பிறவி.  


ஒரு அறிவு புல் பூண்டு மரம் செடி கொடிகள்! 

இரண்டு அறிவு நீரில் வாழ்பவை மீன் தவளை முதலை நண்டு! 
மூன்று அறிவு நிலத்தில் ஊர்பவை பாம்பு பல்லி ஓணான்!
நான்கு அறிவு வானில் பறப்பவை மயில் குயில் கழுகு புறா காகம்!
ஐந்து அறிவு ஆடு மாடு சிங்கம் புலி யானை எருமை நாய் பூனை!
ஆறு அறிவு ஆண் பெண், திருநங்கை 
என்று இந்த ஆறு அறிவும் ஒன்று முதல் எண்பத்தி நான்கு லட்சம் முடிய

பிறந்து இறந்து இறந்து பிறந்து 8399999 வரை மற்ற உயிரினங்களாக 


வாழ்ந்து 8400000 லட்சம் எண்ணும்போது தான் மானிடப் பிறவி


அதுவும் 

8399999 இறந்த பிறந்து வாழும்போது இதில் ஏதாவது

ஒரு பிறப்பில் புண்ணிய காரியம் செய்து இருந்தால்தான் மானிட பிறவி 

கிடைக்கும் அப்படி பட்ட அரிதான மனித பிறவி எடுத்து பிரயோஜனம் 


இல்லாமல் போய்விடகூடாது என்பதற்காகத்தான் இறைவன் நம்மீது 


கருணை கொண்டு தேவர்களுக்கு கூட கிடைக்காத மஹா 


பொக்கிஷம்மான  

திருநீறு ருத்ராட்சம் பஞ்சாட்சரம் 

அருளியுள்ளார் இவைகளை பயன் படுத்தி பயன்பெறலாம் இதை என் 


அனுபவத்தில் அனுபவித்து சொல்லுகின்றேன். 

சிலர் சொல்லுவார்கள் சுத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்சம் 

அணிய வேண்டும் என்று? 
ஆம் சுத்தம் என்பது மனதை சுத்தமாக வைத்துக்கொள்வது பிறர்க்கு 

தும்பம் தராமல் இருப்பது பிறரின் சொத்துக்களை அபகரிப்பது 


பொறாமை படுவது கொலை கொள்ளை கற்பழிப்பு திருடுவது


நம்பிக்கை துரோகம் 

செய்வது பிறருக்கு தண்டனை தருவது தண்டிப்பது பொய் சாட்சி 


சொல்வது இதைப்போன்ற சுத்தம் இல்லாத மனிதநேயம் இல்லாத 


காரியங்கள் செய்பவர்கள் தான் ருத்ராட்சம் அணிய கூடாது. தர்மம் மனிதாபிமானம் மரியாதை கனிவு அன்பு கருணை பக்தி 


பிரதோஷம் அன்று ஆலயம் செல்வது இதுபோன்ற நல்ல  


நற்காரியங்களை செய்பவர்கள் ருத்ராட்சம் கண்டிப்பாக 


1000000000000000% மடங்கு அணியலாம் நாம் பிறந்ததின் பயனும் 


பெறலாம்.



உதாரணத்திற்கு  
63 நாயன்மார்கள் பெரியபுராணம் படியுங்கள் தெளிவு கிடைக்கும் 

வெற்றி நிச்சயம். 


திருநீறு (நெற்றியில்) தரித்தல் ருத்ராட்ஷம் (கழுத்தில்) அனிதல் 

பஞ்சாட்சர மந்திரம் (ஓம் நமசிவாய மனதில்) உச்சரித்தல் இம்மூன்றும் 


ஒருவர் ஒரு சேரச் செய்வார் எனில் அவர்கள் இல்லத்தில் 


ஐஸ்வர்யங்கள் பெறுகும் 

இறைவனின் (சிவபெருமானின்) கருணை கிடைக்கப்பெறும்.  
4 முகம் 5முகம் 6முகம் ருத்ராட்சம் எங்கு வாங்கினாலும் 

ஒரிஜினல்ளாகத் தான் இருக்கும் ஏனெனில் அதன் விலை 5ருபாய் 


முதல் 


15ருபாய் வரைதான்.




    ஓம் நமசிவாய  திருச்சிற்றம்பலம்